திங்கள், 19 மே, 2014

எனது ஓவியங்கள் 15நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, ‘எனது ஓவியங்கள் 
என்ற தலைப்பில் 14 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன். 


கீழே தந்துள்ள இணைப்புகளை சொடுக்கி அந்த ஓவியங்களைப் 
பார்க்காதவர்கள் பார்க்கலாம்.


1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14நான்  எனது பழைய ஓவியங்களை, இந்த பதிவில் வெளியிட்டதை 
பார்த்துவிட்டு திரு வாசு அவர்கள்,  'மீண்டும் ஓவிய பயிற்சியை 
தொடரலாமே!' என்றும், திரு சென்னை பித்தன் அவர்கள், 'கண்டிப்பாக 
ஒவியம் வரைவதை நீங்கள் தொடரத்தான் வேண்டும்.' என்றும் 
அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள்.

நானும் ஆரம்பிக்க விருப்பம் தான் என்று பதிவிட்டபோது, 
'என்னது விருப்பம் தானா? அவசியம் நீங்கள் வரைய வேண்டும்!.. 
இப்படி ஒரு அருமையான கலையை வீணாக்கக் கூடாது.. 
அவசியம் தொடருங்கள்.' என்று திரு சூர்யா கண்ணன் அவர்களும் அவர்களது கருத்துக்களை  வழி மொழிந்திருந்தார். 

எனவே நானும் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, திரும்பவும்   
விட்டுப்போன ஓவிய  பயிற்சியை தொடர எண்ணி, சமீபத்தில் 
ஒரு நாளேட்டில் வந்த ஒரு அரசியல் பிரபலத்தின் படத்தைப் 
பார்த்து படம் வரைய விரும்பினேன்.

படம் வரைய ஆரம்பித்ததும் தான் தெரிந்தது நீண்ட நாட்கள் 
இடைவெளிக்குப் பிறகு படம் வரைவது அவ்வளவு சுலபமல்ல 
என்று. சும்மாவா சொன்னார்கள் சித்திரமும் கைப்பழக்கம். என்று!

நீண்ட நாட்களுக்குப் பிறகு பென்சிலைத் தொட்டதால் கையில் 
அந்த பழைய வேகம் வரவில்லை. ஏதோ வரைந்திருக்கிறேன். 
படம் எப்படி என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

அந்த படம் கீழே
இந்த நேரத்தில் காலம் சென்ற மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு தேவன்  
அவர்களது கருத்தை நினைவில் கொள்ள விரும்புகிறேன்.

அவர் தனது 'மிஸ்டர் வேதாந்தம்' என்ற நாவலில், "எழுத்தாளன் என்பவன் 
எழுதிக்கொண்டே  இருக்கவேண்டும், பேனாவை கீழே வைத்துவிடக்
கூடாது.  அப்படி  வைத்துவிட்டு எடுத்தால்  அது கனக்கும். 'உலுக்குமரம்'
போடுவது போல் இருக்கும்" என்பார்.  

இந்த அறிவுரை ஓவியனுக்கும் பொருந்தும் என எண்ணுகிறேன். 
ஓவியம் வரைவதை   நிறுத்திவிட்டால் திரும்பவும் ஆரம்பிக்க  
சோம்பலாகவும்,  மலைப்பாகவும்  இருக்கும்.

எனவே நானும் இதோ எனது பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.

திரு சர்ச்சில் கூறியது போல.

"இது ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பமல்ல."
20 கருத்துகள்:

 1. "இது ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பமல்ல.
  அர்த்தம் பொதிந்த வரிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. அருமையாக இருக்கிறது நீங்கள் வரைந்த ஓவியம்....

  படத்தில் இருப்பது ராஜ்நாத் சிங் தானே....

  தொடர்ந்து வரையுங்கள். நீங்கள் வரைந்த மற்ற ஓவியங்களையும் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! மற்ற ஓவியங்களையும் பார்க்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது சரிதான். நல்ல வேளை. படத்தில் இருப்பவரை சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.

   நீக்கு
 4. Really glad that you have heeded the suggestions of friends and well wishers. This can be deemed to be SECOND INNINGS . Although you have attempted to draw a picture after a long time, it has come out well. I think the gentleman in the picture is Mr.Rajnath singh, Presdent of BJP. Am I right. Please do not discontinue this passion. Waiting for more such pics. K.Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கம்தான் திரும்பவும் படம் வரையத் தூண்டியது.அதற்கு நன்றி! நீங்கள் சொன்னது சரிதான். படத்தில் இருப்பவர் திரு ராஜ்நாத் சிங் தான்.

   நீக்கு
 5. ஓவியத்திலேயே மிகவும் கடினமானது இந்த portrait ஓவியங்கள். முதலில் பழகும்போது படத்தை அப்படியே ட்ரேசிங் (outline only) செய்துவிட்டு ஷேடிங் செய்யலாம். ஷேடிங் நன்றாக செய்கிறீர்கள். சிறிது காலம் சென்ற பிறகு நேரடியாக அளவு எடுத்துக்கொண்டு வரையலாம். பிரபல ஓவியர்களுக்கே இந்த கலை கைவருவது அத்தனை எளிதல்ல. தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! இதுவரை Trace செய்து படம் வரைந்ததில்லை. அறிவுரைக்கு நன்றி!

   நீக்கு
 6. எனக்கு படத்தில் இருப்பவரைத் தெரியாது. பின்னூட்டங்களை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். பிறகு கூகிள் இமேஜில் பார்த்தேன். கூகிள் இமேஜில் புகைப்படத்துடன் ஒப்பிட்டதில், அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் இரா.குணசீலன் அவர்களே!

   நீக்கு
 8. எழுதுவதை நிறுத்திவிட்டால் மீண்டும் எழுத முயற்சிக்கும்போது மலைப்பாக இருக்கும். அதேபோல்தான் படம் வரைவதும் இப்போதெல்லாம் என்னால் தஞ்சாவூர் ஓவியமோ கண்ணாடி ஓவியமோ வரைவது கடினமாக இருக்கிறது கண் பார்வையும் முன்பு போல் இல்லை. உங்கள் ஸ்கெட்ச் ( அப்படிச் சொல்லலாமா ?) மிக நன்றாக வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! உங்களின் தஞ்சாவூர் ஓவியத்திற்கு முன்னாள் எனது கோட்டு ஓவியம் எம்மாத்திரம்..

   நீக்கு
 9. ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் உண்மைதான் ஐயா புத்துணர்ச்சியுடன் இருக்கட்டும். வாழ்த்த எமக்கு வயதில்லை.... நன்றி.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு Killergee அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. Really good one sir! Due to job transfer and shifting of house I wasn't able to follow the blog... hope this phase would pass soon. .. both me and my dad wanted to meet you once in person before we left chennai.. unfortunately that could not take place... hope I get to see you in person someday! Your blog has been an inspiration

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், மீண்டும் தொடர்வதற்கும் நன்றி செல்வி மாதங்கி மௌலி அவர்களே! சென்ற ஆண்டு நடந்த பதிவர்கள் சந்திப்பில் என்னால் கலந்துகொள்ள முடியாததால் உங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது. தங்களையும் தங்கள் தந்தையாரையும் சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.

   நீக்கு