திங்கள், 27 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 13

எனது ஓவியங்கள் 12 இல், என் பதிவுக்கு
வருபவர்களை 'துன்புறுத்த' விரும்பாததால்
இன்னும் ஓரிரு பதிவுகளோடு ஓவியங்கள்
பற்றிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு
மீண்டும் நினைவோட்டத்தை தொடர
எண்ணியுள்ளதாக எழுதியிருந்தேன்.

அவ்வாறே நினைவோட்டத்தை
தொடர்ந்தும் விட்டேன்.
விட்டுப்போன ஓரிரு ஓவியங்களை
இந்த பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்.


11 –01-1978 அன்று 'மாயா சித்ராலயா'
அனுப்பிய படத்தைப்பார்த்து வரைந்த படம் கீழே.





‘ மாடல்’ களைப்பார்த்து படம் வரைவதே
ஒரு தனி கலை தான். ஓவிய பயிற்சியின்
போது ஒரு மாடலைப்பார்த்து வரைய,
திரு மாயா அவர்கள் பணித்திருந்தார்.
என்னை ‘மாயா சித்ராலயா’வில் சேர
சொன்ன நண்பர் திரு ஸ்ரீதரை சுமார்
ஒரு மணி நேரம் உட்காரவைத்து
11 –01-1978 அன்று வரைந்த படம் கீழே.


சமீபத்தில் இந்த படத்தை அவருக்கு
மின் அஞ்சலில் அனுப்பி, ‘நினைவிருக்கிறதா’,
எனக்கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு
அந்த படம் வரைந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.





கீழே உள்ள படமும் ஒரு
சுண்டை செடியை பார்த்து அதே
நாளில் வரைந்தது




நான் வரைந்த படங்கள் அநேகம்
இருந்தாலும்,பழைய படங்கள்
பதிவேற்றுவதை தற்சமயம் நிறுத்திவைக்கிறேன்

6 கருத்துகள்:

  1. As one who once dabbled in this art, I have enjoyed all your works. Others too would have enjoyed your works. You may continue to upload your works periodically. Vasudevan

    பதிலளிநீக்கு
  2. //நான் வரைந்த படங்கள் அநேகம்
    இருந்தாலும்,//
    அவற்றில் உங்களுக்குப் பிடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடலாமே?

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு வாசு அவர்களே ! நிச்சயம் எனது படங்களை பின்பு பதிவேற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு சென்னைபித்தன் அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி எனக்கு பிடித்த படங்களை விரைவில் பதிவேற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள். என் தம்பி ஒரு ஓவியன். சந்தனு சித்ரா வித்யாலயாவில் பயின்றான். என் தந்தையை அப்படியே தத்ரூபமாய் வரைந்ததை இன்றும் பொக்கிசமாய் வைத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சிவகுமாரன் அவர்களே!

    தங்கள் தம்பி வரைந்த தங்கள் தந்தையின் படத்தை இன்றும் பொக்கிஷம் போல் பாதுகாப்பது அறிந்து மிக்க சந்தோஷம்.

    பதிலளிநீக்கு