இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை.
ஆனால் துன்பமே தொடர்ந்து வந்தால்??
'பட்ட காலிலே படும்' என்பது போல், நம்மில்
அநேகருக்கு கஷ்டங்கள் ஒன்றன் பின்
ஒன்றாக வருவது உண்டு.
அந்த துன்பங்களை எவ்வளவு பேர் மனத்திடத்தோடு
எதிர்கொள்கிறோம் என்பது கேள்விக்கு உரியதே.
இன்றைக்கு இருக்கின்ற மாறுபட்ட சூழலில், நமக்கு
ஒரு சிறு துன்பம் வந்தால் கூட நாம்
அதைத்தாங்கிக்கொள்கின்ற பக்குவம் இல்லாமல்
மன உளைச்சல் கொண்டு நம்மை வருத்திக்கொண்டு
கவலைப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை கழிக்கிறோம்.
ஆனால் ஒரு விவசாயிக்கு அடுத்தடுத்து வந்த
சோதனைகள் பற்றி, ஒரு புலவர் எழுதிய பாடலை படித்தால்
'நல்லவேளை நமக்கு இவ்வாறு சோதனை வரவில்லையே'
என மகிழ்ச்சி கொள்ளலாம்.
இந்த பாடலை நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது படித்தது.
என் நெஞ்சைத் தொட்ட பாடல் இது.
ஒரு விவசாயின் வீட்டில் பசு மாடு கன்று போட,
அதிக மழையின் காரணமாக வீடு இடிந்து விழ,
அவரது மனைவிக்கு உடல் நலம் குன்ற,
நிலத்தில் வேலை செய்யும் ஆள் இறந்து போக,
நிலத்தில் ஈரம் குறையுமுன் விதைக்கலாமே என விதை
எடுத்துப்போகுமுன், வழியில் கடன்கொடுத்தவர் மறிக்க,
அப்போது இறப்பு செய்தி கொண்டு ஒருவர் வர,
தவிர்க்கமுடியாத விருந்தினர் ஒருவர் வர,
அந்த நேரத்தில் பாம்பு கடிக்க,
அரசுக்கு தரவேண்டிய நில வரியைக்கேட்டு அரசு ஊழியர் வர,
குருக்கள் 'தட்சிணை' கேட்டு வர,
புலவர் ஒருவர் கவிதை பாடி பரிசு கேட்க,
அந்த மனிதரின் துன்பத்தை பார்க்கவே கஷ்டம் என்கிறார்.
இதோ அந்த பாடல்!
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்ந்நோவ வடிமை சாவ
மா ஈரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டோருவ னெதிரே செல்லத்
தள்ளவோண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சிணைக்கு குறுக்கே நிற்க
பாவாணர் கவிதை பாடி பரிசுகேட்க
பாவி மகன் படுந் துயரம் பார்க்கொணாதே
நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மைவிட
அதிக துன்பம் அனுபவிப்பவர்களை பார்த்து
'பரவாயில்லை. நமது துன்பம் இந்த அளவோடு
இருக்கிறதே' என எண்ணி அந்த துன்பத்தை
எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.
/நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மைவிட
பதிலளிநீக்குஅதிக துன்பம் அனுபவிப்பவர்களை பார்த்து
'பரவாயில்லை. நமது துன்பம் இந்த அளவோடு
இருக்கிறதே' என எண்ணி அந்த துன்பத்தை
எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்./
நன்றாக சொன்னிர்கள் .. தன்னிடம் செருப்பு இல்லையே என ஒருவன் வருந்தினானாம் .. காலை இழந்த ஒருவனை காணும் வரை ....
என்று எங்கோ படித்ததுதான் நினைவிற்கு வந்தது . வாசுதேவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! துன்பம் வரும்போது 'இரு கோடுகள்' தத்துவத்தை நினைத்துக்கொண்டால் போதும்.
பதிலளிநீக்கு//நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மைவிட
பதிலளிநீக்குஅதிக துன்பம் அனுபவிப்பவர்களை பார்த்து
'பரவாயில்லை. நமது துன்பம் இந்த அளவோடு
இருக்கிறதே' என எண்ணி அந்த துன்பத்தை
எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.//
சரியாகச் சொன்னீர்கள்.இடுக்கண் வருங்கால் நகுதல் இயலாவிட்டாலும்,ஆறுதல் அடையவாவது வழி அதுதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குஉண்மை தான் துன்பம் வரும் போது இரு கோடுகள் தத்துவமே சிறப்பு. இது சுருக்கமான தத்துவம் .நல்ல பதிவு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
உண்மை தான் துன்பம் வரும் போது இரு கோடுகள் தத்துவமே சிறப்பு. இது சுருக்கமான தத்துவம் .நல்ல பதிவு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்குசொல்லொணாத் துயரம் கொண்ட பாடல் இது நான் எங்கோ கேள்விப்பட்ட பிடித்த பாடல் அருமை ! நன்றி வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திருமதி இனியா அவர்களே!
நீக்குwe need strong will power. but, Our Heart is not strong to bare it.
பதிலளிநீக்குwe need strong will power. but, Our Heart is not strong to bare it.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.சுவாமிநாதன் அவர்களே!
நீக்கு