சனி, 4 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 11

'மாயா சித்ராலயா' வில் அஞ்சல் வழியில் ஓவியம்

முறைப்படி வரைய கற்றபோது திரு மாயா அவர்கள்,

நம் வீட்டில் உள்ள சில பொருட்களைப்பார்த்து

வரைந்து அனுப்ப சொல்லுவார். அப்படி

16 -05-1977 அன்று வரைந்த படம் கீழே.





கீழே உள்ள படத்தை அவர்கள் அனுப்பிய

படத்தைப்பார்த்து 31 -05-1977 அன்று 'Indian Ink'

மூலம் புள்ளிகள் வைத்தேவரைந்தேன்.

என்னைப்பொறுத்தவரை நன்றாக வரைந்ததாக

எண்ணியபோது திரு மாயா அவர்கள் அதில்

உள்ள குறையை சுட்டிக்காண்பித்து இருந்தார்.




கீழே உள்ள படம்,'தினமணி கதிர்'பத்திரிக்கையில்

வந்த படத்தைப்பார்த்து 01 -09-1977 அன்று

வரைந்தது.




நான் வரைந்த ஓவியங்களில்,அதிக நேரம்

எடுத்துக்கொண்டது கீழே உள்ள படத்திற்குத்தான்.

சுமார் நான்கு மணி நேரம் கஷ்டப்பட்டு

இதை வரைந்தேன். வரைந்த பின் பார்த்ததும்,

நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை

என நினைத்தேன்.

வரைந்த நாள்: 16 -10-1977




வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

4 கருத்துகள்:

  1. //நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை//
    நிச்சயமாக.படம் மிக நன்றாக வந்திருக்கிறது.உழைப்பு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. புள்ளி வைத்து வரைந்த படம் ஓவியம் வரைவதில் பெரும் புள்ளி என புரிய வைக்கின்றது ! அதிக நேரம் எடுத்த படம் பார்க்க எளிமையாக இருந்தாலும் கலை நுணுக்கம் பொதிந்த படம் . அருமை . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! மிகவும் பொறுமையோடு வரைந்த படங்கள் அவை. இப்போது அந்த பொறுமை என்னிடம் உள்ளதா எனத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு