ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 6

1976-1980 களில் மணிப்பாலில் பணி புரிந்தபோது ,

உடுப்பில் தங்கியிருந்தேன்.

அங்கு உடுப்பி பாரத ஸ்டேட் வங்கியில்

மேலாளராக இருந்த திரு C.S.இராதாகிருஷ்ணன்

அவர்களது மகன் திரு ஸ்ரீதர் எனது

ஓவியங்களைப்பார்த்துவிட்டு'நீங்கள் ஏன் ஓவியர்

திரு மாயா நடத்தும்,மாயா சித்ராலயாவில்

சேர்ந்து முறைப்படி அஞ்சல் மூலம் ஓவியம்

கற்கக்கூடாது?' என சொன்னார்.


அவரும் அதில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாக

சொன்னதும்,நானும் உடனே சேர்ந்துவிட்டேன்.

மாதம் ரூபாய் 12 தான் கட்டணம்.

படிப்பு காலம் இரண்டு ஆண்டுகள்.


முதலில் பென்சில் உபயோகித்து வட்டங்கள்,

கோடுகள், வளைவுகள் போடவேண்டும். பின்பு

அவர்கள் அனுப்பும் படங்களைப்பார்த்து

போடவேண்டும்.


படங்களை அஞ்சலில் அனுப்பினால்

ஓவியர் திரு மாயா அவர்களே அதை திருத்தி

அவரது குறிப்புகளோடு அனுப்புவார். நம்மையும்

காணும் சில பொருட்களை பார்த்து படம்

போட்டு பழகச்சொல்லுவார்.


பென்சிலால் போட்டு பழகியபின், இந்தியன் இங்க்

உபயோகித்து படம் போடவேண்டும். பின்பு பிரஷ்

மூலம் படம் போட பழக்குவார்கள். கடைசியில்

வண்ணபடங்கள் போடுவதையும் சொல்லித்தருவார்கள்.

இடையிடையே தேர்வுகளும் உண்டு.


பணிச்சுமை காரணமாக என்னால்

பதினெட்டு மாதங்களுக்கு பிறகு அஞ்சல்

படிப்பை தொடர இயலவில்லை.

ஆனாலும் முறைப்படி ஓவியம் வரைவது

எப்படி என்பதை கற்றுக்கொண்டது நிஜம்.


திரு மாயா அவர்கள் மிகவும் பொறுமையோடு

எனது பா(ப)டங்களை திருத்தி என்னை

வழி நடத்தியதை இந்த நேரத்தில்

சொல்லியே ஆகவேண்டும். ஒருவேளை

முழுமையாக அவரிடம் பயின்றிருந்தால்

நல்ல ஓவியனாகியிருப்போனோ என்னவோ!!


மாயா சித்ராலாயாவில் 1976-1977 களில்,

ஓவியம் கற்றபோது போட்ட

சில படங்களை அடுத்த பதிவுகளில்,

வெளியிட இருக்கிறேன்.

4 கருத்துகள்:

  1. முழுமையாகப் பயிலா விட்டாலும்,ஒரு முழுமையான ஓவியராகத்தானே இருக்கிறீர்கள்!”குறை ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. இதில் வகுப்பும் பயிற்சியும் நிச்சயம் உங்கள் திறனை மேம்படுத்தி இருக்கும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! மாயா சித்ராலாயாவில் பெற்ற பயிற்சி எனது ஓவியத் திறனை மேம்படுத்தியது உண்மைதான்.

      நீக்கு