ஞாயிறு, 21 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 8

பழைய பதிவுகளில் சொல்லியதுபோல்

அஞ்சல் மூலம் ஓவியம் கற்றபோது

அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும்,

மற்ற இதழ்களில் வந்த படங்களை

பார்த்து போட்ட படங்களையும்

கீழே தந்திருக்கிறேன்.


கீழே உள்ள படம் , 'ஆனந்த விகடன்'

அட்டைபடத்தைப்பார்த்து, 18 -10-1976 அன்று

வரைந்தது.ஆனால் இந்த படம் எனக்கு

முழு நிறைவை தரவில்லை.காரணம்

அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல்

நேரடியாக Ball Point பேனாவால்,

வரைந்ததால் சிறு தவறுகளை

திருத்த இயலவில்லை.
கீழே உள்ள படம் , ஒரு பத்திரிக்கையில்

வந்த புகைப்படத்தைப்பார்த்து

24 -10-1976 அன்று வரைந்தது.

அப்போதுதான் தெரிந்தது,

புகைப்படத்தைப்பார்த்து வரைவது

அவ்வளவு சுலபமல்ல என்று.

கீழே உள்ள படங்கள் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து 24 -10-1976

அன்று வரைந்தது.
வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

4 கருத்துகள்:

 1. மிகக் குறுகிய எதிர்காலத்தில் உங்கள் ஓவியக் கண்காட்சி ஒன்றை எதிர்பார்க்கிறேன்.நடக்கும்.காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஓவிய கண்காட்சி வைக்கும் அளவுக்கும் நான் வளரவில்லை என்பதே உண்மை. வருகைக்கும் உங்கள் நம்பிக்கைக்கும் நன்றி திரு மதுரை சொக்கன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. ஐயா

  மன்னிக்க...!

  Word varification / picture verification மிகுந்த அயர்வை ஏற்படுத்துகிறது.

  நீங்கள் இம்முறையைச் செயல்படுத்தி இருக்கிறீர்களா அல்லது தானாகவே இது போன்று வருகிறதா எனத் தெரியவில்லை.

  ஆனால்,

  ரோபோ இல்லை என்பதைச் சொடுக்கியபின்பு, அடுத்துக் கட்டங்களில் காட்டப்படும் பல படங்களில் குறிப்பட்டவற்றைத் தேர்வு செய்யச் சொல்லி வருகிறது.

  அதைத் தேர்வு செய்தபின் அடுத்து என்பதைச் சொடுக்க வேண்டியுள்ளது.

  பின், அதில் வேறு சில படங்கள் வேறு சில குறிப்புகளோடு.

  பின் மீண்டும்...

  இரண்டு மூன்று முறைக்குப் பின்புதான் பின்னூட்டம் வெளியிடப் படுகிறது.

  பெரிதும் அயர்கிறேன்.

  உங்களால் இம்முறை செயல்படுத்தப்பட்டிருப்பின் அருள்கூர்ந்து நீக்க வேண்டுகிறேன்.

  மீண்டும் பின்பு வருகிறேன்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்த Word verification முறையை நான் என்றோ நீக்கிவிட்டேன். தொடர்ந்து ஒருவர் பின்னூட்டம் இட்டால் Default ஆக இது போல் வருமாம். பின்னூட்டம் இடுபவர் ரோபோ இல்லை என அறிய இந்த ஏற்பாடாம். நண்பர் வலைசித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் கேட்டபோது சொன்னார். தங்களிடமும் சொல்வதாக சொன்னார். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.
   ஓய்விருக்கும்போது திரும்பவும் எனது பதிவுகளைப் படித்து தங்களின் மேலான கருத்துக்கள தர வேண்டுகிறேன்.

   நீக்கு