வெள்ளி, 24 ஜனவரி, 2014

முதுமை வந்தால் மூளை மந்தமாகுமா?
வயதானவர்கள் மெதுவாக செயல் படுவதன் காரணம் அவர்கள் முதுமை அடைந்ததால் மூளை மழுங்கியுள்ளது என்றும் அதனால் அவர்களால் இளைஞர்கள் போல் விரைவாக ஒன்றை புரிந்துகொள்ள இயலாது என்றும் நம்மில் பலர் ஏன் எல்லோருமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம்.

நமது மூளை ஒரு கணினியில் உள்ள வன் தட்டு (Hard drive) போன்றது என்றும் எப்படி கணினியில் உள்ள வன் தட்டு தகவல்கள் முழுதும் நிரம்பிய போது மெதுவாக செயல்படுகிறதோ அதுபோல் முதுமை அடைந்தவர்களின் மூளை அதிகப்படியான தகவல்களை கொண்டிருப்பதால், திடீரென ஒரு தகவலை அல்லது ஒரு சொற்றொடரை சொன்னதும் அவைகளை ஏற்கனவே சேமித்துவைக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தகவல்களிருந்து Process செய்யவேண்டி இருப்பதால் அது மெதுவாக இயங்குகிறதாம். அதனால்தான் முதியவர்கள் மெதுவாக செயல்படுகிறார்கள் என அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

கணினிகளின் தகவல் தளம் பல்கிப் பெருகும்போது,அதிலுள்ள சொற்களைத் தேட கணினிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வது நமக்கு ஒன்றும் வியப்பை அளிப்பதில்லை. இந்த அடிப்படைத் தகவல்தான் வயது முதிர்ந்தவர்கள் ஏன் இளைஞர்களைவிட மெதுவாக செயல்படுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள உதவியதாம்.

முதியவர்களின் மூளை சேமித்துவைக்கப்பட்டுள்ள அதிகப்படித் தகவல்களை Process செய்ய நேரம் எடுத்துக்கொள்வதால் அது இளைஞர்களைவிட மெதுவாக செயல்படுகிறது என்றும் சில சமயம் அது மறதிக்கும் வழி வகுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஜெர்மனியில் உள்ள University of Tubingen இல் பணிபுரியும் Dr Michael Ramscar என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வயதானவர்களின் மூளை நலிவடைவதற்கான காரணத்தை அறிய கடைபிடிக்கப்பட்ட புரிகைத்திறன் (Cognitive) நடவடிக்கைகள் தவறானவை எனக் கண்டுபிடித்தார்கள். (நன்றி: The Hindu Business Line)

முனைவர் ரம்ஸ்கர் அவர்களின் கூற்றுப்படி மனிதனின் மூளை வயதான காலத்தில்மெதுவாக இயங்குவதன் காரணம் அது காலப்போக்கில் அதிகப்படியான தகவல்களை சேமித்து வைத்திருப்பதால் தானாம்.

இந்த ஆராய்ச்சியில் கணினிக்கு மனிதர்களைப்போல ஒவ்வொரு நாளும் ஓரளவு படிக்க, புதிய தகவல்களை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டதாம். பின்பு கணினியை ஒரு குறிப்பிட்ட அளவு படிக்கும்படி செய்தபோது புரிகைத்திறன் (Cognitive) சோதனையில் அவைகளின் செயல்திறன் ஒரு இளைஞனைப்போல் இருந்ததாம். ஆனால் அதே கணினியை நாம் நமது வாழ்நாளில் பெறும் பட்டறிவைப்போன்று பத்து ஆண்டுகள் படிக்கத் தூண்டியபோது அதனுடைய செயல்திறன் ஒரு முதியவரைப் போன்றிருந்ததாம்!

அடிக்கடி அதனுடைய செயல்பாடு மந்தமானதன் காரணம் அதனுடைய செய்முறை ஆற்றல் குறைந்ததால் அல்ல மாறாக அதிக பட்டறிவின் காரணத்தால், தகவல் தளம் பெருகி அவற்றை செய்முறைபடுத்த அது எடுத்துக்கொண்ட நேரத்தால் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அவ்வாறே தான் மனிதனுடைய மூளைக்கும் ஏற்படுகிறது என்கிறது இவர்களது ஆராய்ச்சி.

மேலும் இவர்கள் செய்த ஆராய்ச்சியில் வயதானவர்களின் அறிவு வளர்ச்சியை கண்டுபிடிக்க நடத்தப்படும் சொல்வளம் பற்றிய சோதனையில் முதியவர்களின் சொல்வள வளமை குறைத்து மதிப்பிடப் படுவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இளையவர்ளுக்கும் முதியவர்களுக்கும் நடத்தப்பட்ட சோதனையில் இளையவர்களை விட முதியவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில சொற்களை அறிந்திருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

‘முதியவர்களின் மூளை ஒன்றும் நலிந்ததல்ல.இன்னும் சொல்லப் போனால் அதற்கு அநேகம் தெரியும்’ என்கிறார் Dr Michael Ramscar. இவரது கருத்தை முழுதும் ஒத்துக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். நரம்பியல் நிபுணர் Dr.Christopher Winter இந்த செய்தி சுவாரஸ்யமானது என்றும் சிக்கலானது என்றும் கருதுகிறார்.

எது எப்படியோ வயதானவர்கள் இனி பெருமைப்பட்டுக்கொள்ளலாம் தாங்கள் மெதுவாக செயல்படுவது தங்களது மூளை மந்தமானதால் அல்ல.மாறாக அது அதிகப்படியான தகவல்களை கொண்டிருப்பதால் என்று!

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பெங்களூருவில் 1969 இல் தேசிய விதைக் கழகத்தில் பணியாற்றியபோது அதில் கணக்குப்பிரிவில் சென்னையை சேர்ந்த நண்பர் திரு அரங்கநாதன் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரும் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம்.

ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தபோது நான் சொன்னேன். யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘அது ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? நம்மைப்போல் படிக்கவேண்டுமா? இல்லை தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேரத்தான் வேண்டுமா? எனவே ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் அதை மட்டும் அதனால் நினைவில் இருத்தமுடியும். இதில் ஞாபக சக்தி எங்கு வந்தது?

ஒரு தையல்காரன் ஒரு யானையை ஊசியால் குத்தியதால் அந்த நிகழ்வை ஞாபகத்தில் வைத்திருந்து அவன் மேல் சேற்றைத் தெளித்த கதையை சொல்லி நமது ஆரம்பப் பள்ளியில் யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று நமக்கு தவறாக சொல்லித்தந்திருக்கிறார்கள்.’என்று.

உண்மைதானே. ஒரு தகவல் மட்டும் இருந்தால் அதை நினைவில் இருத்துவது எளிதுதானே!33 கருத்துகள்:

 1. உண்மைதான். தேவைக்கு அதிகமானவைகளை சேமித்து வைத்தால் நமக்கு தேவைப்படுவதை அவற்றிலிருந்து தேடி எடுப்பது சிரமம்தானே? ஆகவேதான் unlearning மிகவும் அவசியம் என்றும் கூறுகின்றனர். தேவையற்றவைகளை களைந்துவிடும் திறன் உள்ளவர்களுடைய செயல்திறன் அப்படியே இருக்குமாம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். அதனால் தான் சொல்கிறார்கள். Learn to Unlearn என்று.

   நீக்கு
 2. அதிகமான அனுபவமும் அறிவும் உள்ளவர்கள் தான் முதியோர்கள் என்பது உண்மைதானே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 3. இளைஞர்கள் மூளை மந்தமாகச் செயல்படக் காரணமென்ன.?தேவை உள்ளதை நினைவில் கொண்டு அல்லாததை நீக்கிவிட முடிந்தால்.... மில்லியன் டாலர் கேள்வி. / பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் கூறியது எல்லா வயதினருக்கும் பொருந்தும். இருப்பினும் தாங்கள் கூறியுள்ள கருத்தை யாரேனும் ஆராய்ச்சி செய்தாலும் செய்யலாம்.

   நீக்கு
 4. என்னவெல்லாம் கண்டு பிடிக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நம்மவர்களில் சிலர் எடுத்து செய்யும் ஆராய்ச்சியைவிட இது தேவலை என்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள்!

   நீக்கு
 5. என்னைப் பொருத்தவரை : நல்லவற்றைகளை மட்டும் சேமித்துக் வைத்துக் கொண்டே வந்தோம் என்றால்... இடம் நிறையவும் இருக்கும்... மனதிலும், உடலிலும் உற்சாகமும் கூடும்...

  மறதி மிகவும் நல்லது...

  நல்லதொரு ஆராய்ச்சி தகவலுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 6. எஙளுக்கெல்லாம் சின்ன வயசிலேயே மூளை மந்தமுங்க. அதனால ஒரு வித்தியாசமும் தெரியலிங்கோ. ஆவரை மன்னன். (அதாவது கோ விந்த ராசன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஆவரை மன்னன் அவர்களே! இந்த ஆராய்ச்சியின் முடிவு பொதுவாக எல்லோருக்குமானது. ஆனால் Every rule has an exception என்பதை தாங்கள் அறியாததல்ல!
   கூத்தவைக்கோ (நடனசபாபதி)

   நீக்கு
 7. மூளைத்திறன் செயல்பாடு பற்றி பல அறியாத தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி கீதா அவர்களே!

   நீக்கு
 8. மனதில் குப்பைகளை சேர்த்து வைத்துக்கொள்ளாதீர்கள் என பெரியவர்கள் சொல்வதும் இதற்காகத்தானோ.......

  நல்ல ஆராய்ச்சி.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகாஜ் அவர்களே!

   நீக்கு
 9. விஞ்ஞானிகள் மத்தியில் இதுவும் முடிந்த முடிபாக இருக்காது. நாளை வேறொரு கருத்தை அடித்துச் சொல்லுவார்கள். தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 10. //தகவல் தளம் பெருகி அவற்றை செய்முறைபடுத்த அது எடுத்துக்கொண்ட நேரத்தால் என்கிறார்கள்//

  இது எனக்கு சரியாகப்படவில்லை. இது சரியானால், சிறுவயதில் மூளையைக் குறைவாக உபயோகித்திருந்தால், வயதானபின் அதிகமாக உபயோகிக்கமுடியும் என்பதுபோல் உள்ளது. முதுமையென்பது இயற்கை என்று நான் நினைக்கிறேன். மூளையின் பகுதிகள் வயதுக்கேற்ப வளர்ச்சியோ, வளர்ச்சியின்மையோ அடைகின்றன. மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு “ஏன்?” என்று கேள்வி கேட்கவே தெரியாது. அதுவரை அனைத்து கேள்விகளும் “என்ன?” என்றுதான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! சிறுவயதில் மூளையைக் குறைவாக உபயோகித்திருந்தால், வயதானபின் அதிகமாக உபயோகிக்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லவில்லை என நினைக்கிறேன். அவர்கள் சொல்வது நாட்பட நாட்பட (Over a period of time) அதிக தகவல்கள் மூளையில் சேருவதால், முதுமையில் அவைகளை Process செய்ய நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றுதான். எப்படியிருப்பினும் இது முடிவான முடிவல்லவே. இது தவறு என சொல்ல இன்னொரு ஆராய்ச்சியின் முடிவு சொல்லலாம்! எனவே காத்திருப்போம்.

   நீக்கு
 11. மிக நல்ல தகவல் பகிர்வு..வயதானவர்களுக்கு பழைய நிகழ்வுகள் நினைவில் இருப்பதும் இன்றைய நிகழ்வுகள் மறந்து போவதும் கண்கூடு.காரணம் இப்போது தெரிந்தது.நன்றி.தாமதத்துக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 12. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய வலைசரத்தில் எனது இந்த பதிவு அறிமுகப்படுத்தியதை தெரிவித்தமைக்கு நன்றி திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 13. அன்புடையீர்,

  தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

  http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

  அன்புடன்,
  எஸ்.பி.செந்தில்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

   நீக்கு
  2. வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

   நீக்கு
 14. ஆஹா கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும். இருந்தாலும் வயது போக வலிமைகள் குறைவதும் நிஜம் தானே. அது தான் எது உண்மை என்று தெரியலை ம்..ம் .....
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இனியா அவர்களே!

   நீக்கு
 15. விஞ்ஞானிகள் சில நேரங்களில் இப்படித்தான் சிறுபிள்ளைதனமாக ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களின் கூற்று உண்மையெனில் மூளையிலுள்ள அதிகப்படியான பதிவுகளை எதாவது ஒரு வகையில் நீக்கி OVERLOAD - ஐ குறைத்து விட்டோம் எனில் அவர்கள் பழையபடி சுறுசுறுப்பாகி விடுவார்களா?...

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் செயல். இன்று ஒருவர் கண்டுபிடிப்பதை இன்னொருவர் அது தவறு என நிரூபிக்கலாம். எனவே காத்திருப்போம் அதுவரை.

  பதிலளிநீக்கு