புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன். என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன். என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

அவனது அம்மாவும் மகனின் வரவை எண்ணி 
மகிழ்வுடன் காத்திருக்கிறாள். மாலை மணி 3.45 
இருக்கும். தொலைபேசி அழைப்பு மணி அடிக்க அந்த 
அம்மா தொலைபேசியை எடுத்து பேசுகிறாள்.

தொலைபேசியில் பேசியது அரவிந்துதான். அம்மா சென்னை வந்துவிட்டேன். இன்னும் அரைமணியில் வீட்டுக்கு 
வந்துவிடுவேன்.  என சொல்லி தொலைபேசி தொடர்பை 
துண்டிக்கிறான்.
  
அவனது அம்மாவால் நம்பமுடியவில்லை.காலையில்  
11.30 மணிக்குத்தானே போன் செய்தான். 4 மணி 
நேரத்திற்குள் எப்படி நியூயார்க்கிலிருந்து சென்னை 
வரமுடியும்?’என எண்ணி காத்திருக்கிறாள் மகனை காண.

இப்படி நடக்குமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் 
இன்னும் சில ஆண்டுகளில். இது நடக்க வாய்ப்புண்டு 
என சொல்கிறது Times of India நாளிதழில் வந்த செய்தி 
ஒன்று. இங்கிலாந்தில் Oxfordshire என்ற ஊரில் உள்ள  
Reaction Engines Limited என்ற Aerospace நிறுவனம் ஒன்று 
உலகில் எங்கிருந்தும் எந்த இடத்திற்கும் 4 மணி 
நேரத்திற்குள்  300 விமானப்பயணிகளை அழைத்துசெல்லும் 
விதமாக ஒரு விமானத்தை வடிவமைத்துக் 
கொண்டிருக்கிறார்களாம்.

அந்த விமானத்தின் வேகம் ஒலியின் வேகத்தைவிட 
ஐந்து மடங்கு அதிகமாக இருக்குமாம். ஒலியின் வேகம் 
ஒரு மணித்துளிக்கு 344 மீட்டர் அதாவது மணிக்கு 1235 
கிலோமீட்டர் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் 
இந்த விமானத்தின் பறக்கும் வேகம் மணிக்கு சுமார் 6175 
கிலோ மீட்டர். அதாவது 4 மணி நேரத்தில் அந்த விமானம்  
24700 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்பது வியப்பாக 
இருக்கிறது.

நியூயார்க்கிற்கும்  சென்னைக்கும் இடையே உள்ள தூரம்   
13,476.65 கிலோமீட்டர் (7276.81 nautical miles) என்பதால் 
நான்கு மணி நேரத்திற்குள் சென்னை வருவது சாத்தியமே.

இந்த விமானத்தில் இருக்கும் குளிரூட்டும் தொழில்நுட்பம், 
அதிலுள்ள  Sabre engine system த்தில் நுழையும் காற்றை 
0.01 மணித்துளியில் 1000 டிகிரி செல்சிஷியஸ் குளிர 
வைத்துவிடுமாம். இதனால் அந்த விமானத்தின் 
ஜெட் இஞ்ஜின் அதிக சக்தியோடு பறக்க இயலுமாம்.

இந்த விமானம் 276 அடி நீளம் கொண்டதாயிருக்கும் என்றும் 
அதனுடைய விலை மிக குறைவுதான் என்கிறார்கள்! 
அதாவது 1.1 பில்லியன் டாலர் தானாம். (110 கோடி ரூபாய்கள்) 
இந்த விமானத்திற்கு Skylon என பெயரிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு அறிவியல் தொழில் நுட்பம் அடைந்திருக்கின்ற 
வளர்ச்சியை நோக்கும்போது, இந்த செய்தியை நம்புவது 
ஒன்றும் கடினமில்லை. ஏனெனில் 1949 ஆண்டிலேயே 
நகைச்சுவை மன்னன் திரு N.S.கிருஷ்ணன் அவர்கள் 
அவரது மனைவியும் நகைச்சுவை நடிகையுமான 
திருமதி T.A. மதுரத்துடன் சேர்ந்து நல்லதம்பி என்ற 
திரைப்படத்தில் விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி 
என்ற பாடலில், அப்போது நடக்கமுடியுமா என 
எண்ணியதை நடத்திக் காட்டுகிறேன் என்று பாடியதை 
நம்பாத நாம், பின்னாட்களில் அவை நடந்தேறியது 
கண்டிருக்கிறோம்.

எனவே காத்திருப்போம் குறைந்த நேரத்தில் 
உலகை வலம் வர!

34 கருத்துகள்:

 1. புதிய செய்தி ஐயா. கண்டிப்பாக நம்பலாம். முன்பு எல்லாம் நிலவுக்கு செல்வது ஒரு கனவாக இருந்தது. இப்போது நிலவுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லும்போது, நீங்கள் சொல்லும் இந்த விஷயம் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

   நீக்கு
 2. உலகம் சுருங்கி விட்டது!பகிர்ந்த விதம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்கள் கருத்து சரிதான்.

   நீக்கு
 3. ஆஹா...என்னமா வளருது விஞ்ஞானம். அறியாத செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி R. உமையாள் காயத்ரி அவர்களே!

   நீக்கு
 4. ஆஹா புதுமையாக இருக்கிறதே,,,, விசயங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 5. விஞ்ஞானமும் ஒளியின் வேகத்தை விட விரைவாகத்தான்
  வளர்ந்து கொண்டிருக்கிறது
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! வாக்கிட்டமைக்கு நன்றி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வாக்கிட்டமைக்கு நன்றி!

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  உலகம் உள்ளம் கையில்... உள்ளது... சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது த.ம3
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! உங்கள் கவிதையையும் இரசித்தேன்.

   நீக்கு
 8. தொழில் நுட்பம் வளர்வது மனிதனின் வாழ்வை எளிதாக்குவதற்கு என்று பொதுவாக ஒரு எண்ணம் உள்ளது. ஆனால், உண்மையில் அது வாழ்க்கையில் புதிய பிரச்சனைகளை உருவாக்கவும் செய்கிறது என்று நினைக்கிறேன். இந்தத் தொழில்நுட்பம் வந்துவிட்டால் கணவன், மனைவி, குழந்தைகள் வேறு வேறு கண்டங்களில் வசிக்கும் நிலை வரலாம். மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்தால் நல்லது என்று நினைக்கிறேன். தகவல் கலக்கத்தையே உண்டுபண்ணுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N,பக்கிரிசாமி அவர்களே! அறிவியலின் அசுர வளர்ச்சி நமது வாழ்க்கை முறைகளை இலகுவாக ஆக்கிவிட்டாலும் அதனால் ஏற்பட இருக்கும் ஆபத்துகளையும் மறுப்பதற்கில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் நாம் மேல் திணிக்கப்படுவதை தடுக்கமுடியாது என எண்ணுகிறேன். கூட்டுக்குடும்பம் என்பது போய் தனி குடும்பம் ஆகி அதுவும் இப்போது போய்விடுமோ என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. இனி இயற்கையை ஒட்டி வாழும் நிலை வருமா என்பது ஐயமே.

   நீக்கு
 9. இன்றைக்கு அறிவியல் தொழில் நுட்பம் அடைந்திருக்கின்ற
  வளர்ச்சியை நோக்கும்போது, இந்த செய்தியை நம்புவது
  ஒன்றும் கடினமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 10. அட...! வியப்பு தான் ஐயா...!

  இனி எல்லாமே வேகம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு

 11. வணக்கம் அய்யா!
  அறிமுகமாக தங்களது வலைப் பூவினை
  நாடி வந்துள்ளேன் தமிழ் என்னும் தேன் படைப்பை பருகுவதற்கு!
  எனவே காத்திருப்போம் குறைந்த நேரத்தில்

  உலகை வலம் வர! சிறந்த அறிவியல் சிந்தை சார்ந்த கருத்து! வரவேற்போம்.


  நன்றி அய்யா!
  புதுவை வேலு
  எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 12. தாங்கள் கூறுவது கண்டிப்பாக நடக்கும். முடியாது என்று சொல்லப்பட்டதெல்லாம் அக்காலம். அனைத்தையும் நிறைவேற்றி வருவது இக்காலம். வளரும் அறிவியலை ஆக்கச் செயல்களுக்கே பயன்படுத்தினால் அதற்கான பயன் மிகவும் அதிகமாக இருக்கும். கற்பனைப் பதிவு அல்ல, விரைவில் நடக்கவுள்ளவற்றை முன்னரே எடுத்துக்கூறும் பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 13. அருமையான தகவல் சகோ ......

  மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும், பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி திரு தமிழன் அரவிந்த் அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. ''..திரைப்படத்தில் ‘விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி’
  என்ற பாடலில், அப்போது நடக்கமுடியுமா என
  எண்ணியதை நடத்திக் காட்டுகிறேன் என்று பாடியதை
  நம்பாத நாம், பின்னாட்களில் அவை நடந்தேறியது
  கண்டிருக்கிறோம்....'''
  உண்மை தான்.
  காத்திருப்போம் அதிசயங்கள் நடக்க சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 16. It is really amazing ...the speed with which things are being invented is mind boggling., considering electricity was invented a little over hundred years ..in fact most of the things invented without which we cannot carry out our normal day to day activities these days were invented within the last 100 years. While NSK might have popularized these ideas in his inimitable style, it is noteworthy mention of all these could be found in our ancient scriptures like Ramayana/Mahabharatha etc. Live telecast of events ..mention about this could be found in Mahabharatha, with Sanjay with his powers able to see the battlefield and describe the progress to Dhirudurashtra. .. References to planes/ICBMs etc could be found in Ramayana. Those who doubt if a bridge could be constructed over Sea ( ramayana) should read about the longest bridge over sea constructed by Chinese ( around 43 KMs). There is no limit to human genius. In fact the possibility of resurrecting the dead appears to be a distinct reality and scientists are hopeful of achieving this in about 100 years..The possibility of regular trips to mars/moons are also being talked about. Colonization of Mars is some thing that does not appear to be far off. Nice blog that has given an opportunity to share what little I know.. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! பொதுவாக ஒரு கருத்தை சொல்லும்போது திரைப்படத்தை இணைத்து சொன்னால் விரைவில் அது சென்றடையும் என்ற காரணத்தால் தான் NSK அவர்களின் பாடல் பற்றி சொன்னேன். விமானம் பற்றி சொல்லும்போது இராமாயணத்தை மேற்கோள் காட்டியிருக்கலாம். ஏன்.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் கூட மன்னன் சச்சந்தன் தனது அமைச்சரான கட்டியங்காரனுடன் போரிட நேரும்போது, தன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல, பறக்கும் மயிற்பொறியொன்றை செய்வித்ததாக சொல்லப்படுகிறது. அதை கூட சொல்லியிருக்கலாம். இருப்பினும் நான் சொல்லாததை தாங்கள் சொல்லிவிட்டீர்கள். அதற்கு நன்றி. தங்களது பின்னூட்டதின் கடைசி வரி தன்னடக்கம் காரணமாக சொல்லபட்டது என எண்ணுகிறேன்.

   நீக்கு
 17. தங்களின் கருத்து மிகவும் அருமை, மேலும் தகவலுக்கு www.reactionengines.co.uk/

  http://vimeo.com/45136248

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு கார்த்திகேயன் SEO அவர்களே! தாங்கள் கொடுத்துள்ள இணைப்பில் முதலாவதை பார்க்க முடிந்தது. இரண்டாவதை பார்க்க இயலவில்லை. தகவலுக்கு நன்றி!

   நீக்கு
 18. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அனானி அவர்களே!

  பதிலளிநீக்கு