வெள்ளி, 5 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 29


முன்பெல்லாம் பொது மக்கள் இரண்டு பேரைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஒருவர் வங்கி மேலாளர். மற்றவர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு முன் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற கடும்போட்டி இருக்கும். அதனால் வங்கி மேலாளர்கள் யாரை எங்கு கண்டாலும் ‘நீங்கள் ஏன் எங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கக் கூடாது?’ என நச்சரிப்பார்கள்.



அதுபோல் ஆயுள் காப்பீட்டு முகவர்களும் தங்களிடம் ஒரு ‘பாலிசி’ எடுக்க சொல்லி தொடர்ந்து வந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.அவர்களிடமிருந்து தப்பிக்க பலர் அநேக பொய்களை சொல்லி சமாளிப்பதுண்டு.

வாடிக்கையாளர்களை தங்கள் வங்கிக்கு கொண்டுவர தனியார் வங்கிகள் அவைகள் நாட்டுடமையாகுவதற்கு முன் தங்கள் மேலாளர்களை ரோட்டரி மற்றும் லயன் சங்களில் உறுப்பினராக சேர அனுமதித்தார்கள். ஏனெனில் அதில் சேர்ந்தால் அங்கிருக்கும் மற்ற உறுப்பினர்கள் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் புதிய வணிகம் பெறலாம் என்பதால் தான்.

வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னும், வங்கி மேலாளர்கள் அந்த மாதிரி சேவை சங்கங்களில் சேர அனுமதிக்கப்பட்டார்கள். எங்கள் வங்கியில் நான் மேலாளரானபோது ரோட்டரி சங்கத்தில் சேர அனுமதி கேட்டபோது எனக்கும் அனுமதி கிடைத்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஏதேனும் புதிய வணிகம் கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

நான் அங்கு சேர்ந்தவுடன் வழக்கம்போல் அந்த சங்கத்தில் ஒவ்வொரு திங்களன்றும் நடக்கும் கூட்டத்திற்கு சென்று வந்தேன்.எல்லோரிடமும் பழகிய பின் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். இது போன்ற சங்கங்களில் சேருவதால் வங்கிக்கு எந்த பயனும் இல்லை என்பதுதான் அது. .

எனவே அந்த சங்க உறுப்பினர்கள் யாரிடமும் எங்கள் வங்கியில் கணக்கைத் தொடருங்கள் என்றோ, வைப்புகள் (Deposits) தாருங்கள் என்றோ கேட்கவில்லை. காரணம் எல்லோரும் கடன் வாங்கத் தயாராக இருந்தார்களே ஒழிய வைப்புகள் வைக்க தயாராக இல்லை என்பதுதான்!

இப்போதெல்லாம் பொது மக்களே தங்களது தேவைகளுக்காக வங்கியை நாடி செல்வதாலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மாத சம்பளத்தை வங்கிகள் மூலமாகவே தருவதாலும் வங்கி மேலாளர்கள் முன் போல் அலைவதில்லை. மக்களும் அவர்களைக் கண்டு ஒதுங்குவதில்லை.

முன்னர் வங்கி மேலாளர்களையும், ஆயுள் காப்பீட்டுக்கழக முகவகளையும் தவிர்க்க நினைத்த மக்கள், இப்போது தவிர்க்க நினைப்பது குறுகிய காலத்தில் பணம் தருவதாக (!) சொல்லப்படும் திட்டங்களான பொன்ஃஜி‌ திட்டங்களில் சேர அழைக்கும் முகவர்களைத்தான்.

உண்மையில் இவர்களைக் கண்டு நாம் விலகத்தேவையில்லை. அவர்களிடம் அவர்கள் பேசுவதுபோலவே சாதுர்யமாக பேசி அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

இது போன்ற திட்டங்களில் சேர முகவர்கள் பலமுறை என்னை அணுகியதுண்டு. ஆனாலும் நான் அவர்களுக்கு ‘கழுவிய மீன்களில் நழுவிய மீனாக’ இருந்தேனே ஒழிய அவர்களது வலையில் வீழ்ந்ததில்லை.

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற திட்டங்களை நம்மிடம் விளக்க வரும் அநேக முகவர்களுக்கு அந்த திட்டத்தை பற்றி முழுமையாய் தெரியாது. அவர்களில் பலர் சுற்றுலா செல்லும் இடங்களில் உள்ள வழிகாட்டி போன்றவர்கள் தான். ஒரே பொருளை பற்றி தாங்கள் படித்த அல்லது தங்களுக்கு சொல்லப்பட்ட செய்திகளை, கிளிப்பிள்ளை போல் சொல்வார்களே தவிர அதற்கு மேல் சொல்லத் தெரியாது.

அவர்கள் சொல்வதை கூர்ந்து கேட்டு அவைகளை பகுப்பாய்வு செய்து மேற்கொண்டு விளக்கங்களை கேட்டால் அவர்களால் நிச்சயம் பதில் சொல்ல இயலாது. அதற்காக எல்லா முகவர்களும் அப்படித்தான் என்று சொல்ல விரும்பவில்லை.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். விழிப்புடன் இருந்தால் நம்மை யாரும் ஏமாற்றமுடியாது. எனக்கு முதன் முதல் ஏற்பட்ட அனுபவம் தேக்கு மர திட்டத்தில் சேர என்னை அணுகிய முகவரிடமிருந்துதான்.

அப்போது சேலத்தில் வங்கியில் முது நிலை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை சுமார் 11 மணி அளவில் ஒருவர் உள்ளே வரலாமா எனக் கேட்டு வந்தார். வந்தவரை உட்கார சொல்லிவிட்டு ‘என்ன வேண்டும்?’ எனக் கேட்டதற்கு தான் தேக்கு மர திட்டத்தை அப்போது பிரபலப்படுத்திக் கொண்டிருந்த ஒரு நிறுவனத்தின் முகவர் என்றும், அதைப்பற்றி விளக்கி அதில் சேர கேட்டுக்கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார்.

அவர் வந்த நேரம் வங்கியின் வணிக நேரம் என்பதால் வங்கி நேரம் முடிந்தபின் அதாவது மாலை 5 மணிக்கு மேல் வர சொன்னேன். அவர் வரமாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் சரியாக மாலை 5  மணிக்கு திரும்பவும் வந்தார்!




தொடரும்


33 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்

    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! திரும்பவும் வர இருப்பதற்கு நன்றி.

      நீக்கு
  3. இந்த முகவர்களைப் பார்த்தால் சில சமயங்களில் பரிதாபமாகத் தோன்றும். எத்தனை பேர்களிடம் பாட்டு வாங்கிக்கட்டியிருப்பார்கள். ஆனால் பரிதாபப்பட்டு ஒத்துக்கொண்டால், நாம் பரிதாபத்துக்குரியவர்களாக நேரிடும். நான் முகவர்களிடம் ஒன்று கட் அண்ட் ரைட்டாக இருந்துவிடுவேன். அல்லது டம்ப் ஆக கேட்டதையே திரும்ப திரும்ப, அவர்களே விடும்வரை கேட்டுக்கொண்டிருப்பேன். தங்கள் அனுபவத்தைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் அவர்களுக்காக பரிதாபப்பட்டால் நாம் பரிதாபத்திற்கு உள்ளாகிவிடுவோம். காத்திருபதற்கு நன்றி!

      நீக்கு
  4. சரியான நேரத்தில் வந்து...

    காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி!

      நீக்கு
  5. இம்மாதிரி முகவர்களிடம் YOU SHOULD NOT SAY YES WHEN YOU MEAN NO. இவர்களை ஒதுக்க முடியாதவர்கள் சரி என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாமல் விழிப்பதைக் கண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    5மணிக்குவந்து விட்டார் அதற்கு பின்பு என்னவாக உள்ளது... காத்திருப்பில் உள்ளேன் ஐயா அடுத்த தொடருக்கு த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  7. மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்களை மிக அழகாகச் சொல்லி வருகிறீர்கள். பாராட்டுகள்.

    //விழிப்புடன் இருந்தால் நம்மை யாரும் ஏமாற்றமுடியாது.//

    ஆம். உண்மைதான். மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    தொடரட்டும் தங்களின் இதுபோன்ற விழிப்புணர்வுக் கட்டுரைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திருவை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  9. விறுவிறுப்பாக செல்கிறது தொடர்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், பாராட்டிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

      நீக்கு
  10. இன்னும்கூட காப்பீட்டு முகவர்களின் தொல்லை இருந்து கொண்டுதானே இருக்கிறது நண்பரே... சரியான இடத்தில் தொடரும்....
    அடுத்த கட்டத்திற்க்காக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! காப்பீட்டு முகவர்கள் தொல்லை கொடுத்தாலும் அது அன்புத் தொல்லை தான். ஏனெனில் அதில் ஏமாற்று வேலை ஏதும் இல்லை. ஒருவேளை நாம் பாலிசி எடுத்தால் பின்னால் அதை வைத்து கடன் வாங்கவோ அல்லது அது முதிர்வடையும் காலத்தில் ஒரு கணிசமான தொகை வர வாய்ப்பு உள்ளது.

      நீக்கு
  11. "ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்! விழிப்புடன் இருந்தால் நம்மை யாரும் ஏமாற்றமுடியாது"
    ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 29 - பதிவினில் கண்ட வாசகம் மனதை தொட்ட வாசகம் அய்யா!
    தேக்கு மரம் திட்டத்தின் முகவர் கதையை சொல்லி ஆர்வத்தை தூண்டிவிட்டு தொடரும் போட்டு விட்டீர்களே? அய்யா!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  12. சிக்கலை எதிர்கொண்ட விதத்தை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  13. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  14. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!

    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

    ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

    மற்றும்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. முதலாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் பதிவுலகில் காலடியெடுத்துவைக்கும் உங்களை வாழ்த்தி உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன். பார்க்கவும்.

      நீக்கு
  15. எல்லோரும் தங்கள் பதிவுபோல்
    என்பதிவு இருப்பதாக
    என் பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள்
    அவர்கள் சொல்வது போல் இல்லை
    உங்கள் பதிவும் சொல்லிச் செல்லும் விதமும்
    மிகச் சிறப்பாக உள்ளது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.இரமணி அவர்களே! எனது கருத்தை தங்களது பதிவின் பின்னூட்டத்தில் கூறியுள்ளேன்.

      நீக்கு
  17. உங்களின் இந்த பதிவைப் படித்து முடித்ததும், டெபாசிட் கேன்வாசிங் என்று எங்கள் வங்கி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்களோடு நான் அலைந்த, அந்தநாள் ஞாபகம் எனக்கு வந்து விட்டது. இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கிக்கு வைப்பு சேகரிக்கும்போது ஏற்பட்ட தங்களுடைய அனுபவத்தையும் பதிவில் பகிரலாமே?

      நீக்கு