ஏமாற்றுபவர்களில் பல வகையினர் உண்டு என்பதை
முந்தைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன். ஒரு சிலர் தனியே
வந்து நேருக்கு நேர் (One to one) சாதுர்யமாகப் பேசி, பணம் பறிப்பவர்கள்.அப்படி பேசுகிறவர்களின் பேச்சில் மயங்கியோ
அல்லது அவர்கள் நடிப்பை நிஜம் என்று நம்பி இரக்கப்பட்டோ
நம்மில் சிலர் பணத்தை இழப்பதுண்டு.
வேறு சிலர் குழுவாக வந்தால் நமக்கு நம்பிக்கை ஏற்படும்
என்று இல்லாத கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவோ அல்லது
கோவிலில் கூழ் ஊத்த என்றோ வந்து பணம் கேட்டு
ஏமாற்றுவதுண்டு.
ஆனால் இதற்கும் மேலே நேரில் வராமலேயே விளம்பரங்கள்
மூலம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை
கவர்ந்து பணம் பறிப்போர் மற்றோர் வகையினர்.
இவர்கள் இதற்காகவே ஒரு நிறுவனத்தையே (Corporate Entity) தோற்றுவித்து பல பேரை பணியில் அமர்த்தி, சிறப்பான
சந்தைப்படுத்தும் உத்தி (Marketing Technique) மூலம் பொது
மக்களை கவர்ந்து அவர்களிடமிருந்து சில பல கோடி
ரூபாய்களை ‘கபளீகரம்’ செய்யக்கூடியவர்கள்.
சொல்லப்போனால் இவர்கள் தான் அதி புத்திசாலிகள் எனலாம்.
தனி மனிதனாக பல பேரை ஏமாற்றுவதென்பது இயலாத
காரியம் என்றாலும் மக்களின் நாடித்துடிப்பை அதாவது
விரைவில் பணம் சேர்த்து செல்வந்தாராகிவிடவேண்டும்
என்ற ஆசையை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மனவசியம்
(Mesmerism) செய்து பணம் பறிப்பதில் வல்லவர்கள் இவர்கள்.
நம்மில் பெரும்பான்மையோர் துரதிஷ்டவசமாக சீக்கிரம்
பணக்காரர்கள் ஆகவேண்டும் என்ற வேட்கையினால்
(பேராசையால்!) இதுபோன்ற திட்டங்களில் தங்களுடைய
சேமிப்பு முழுவதையும் போட்டு பின்னால் திண்டாடுவதுண்டு.
“பேராசை யெனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ”
ஓரா வினையேன் உழலத் தகுமோ”
என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடியதையும்
“ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டி
ஆளினும் கடல்மீதிலே”
ஆளினும் கடல்மீதிலே”
என்று தாயுமானவர் சொன்னதையும்,
‘உலகத்தில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை, ஆசையை
வென்ற மனிதனை வெல்ல உலகத்தில் எவருமில்லை!’
என்று கௌதம புத்தர் சொன்னதையும் நாம் நினைவில்
கொள்ளாதது வேதனைக்குரியதே. ஆசை இல்லாத மனிதன் இருக்கமுடியாது. ஆனால் அதுவே பேராசையாக
இருக்கக்கூடாது.
தேக்குமர திட்டம், ஆடு வளர்ப்புத் திட்டம், ஈமு கோழி வளர்ப்பு
திட்டம், ஒப்பந்த பண்ணை (Contract Farming) திட்டம், நம்பமுடியாத
வட்டி தரும் வைப்புக்கள்(Deposits) திட்டம் போன்ற மோசடி
திட்டங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களின் பல கோடி
ரூபாய்களை விழுங்கிட்டன என்பதும், இந்த திட்டங்களினால்
பணத்தை இழந்தோர் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும், தொலைத்த பணத்தைத் திரும்பப்பெற அலைகிறார்கள் என்பதும், அவர்களில் கணிசமானவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்
என்பதும் வேதனைக்குரிய தகவல்கள்.
இது போன்ற மோசடி திட்டங்களையும் அதனால் ஏமாந்தவர்கள்
படும் பாட்டையும் ஊடகங்கள் எடுத்துரைத்தும், ‘விட்டில் பூச்சி’
விளக்கில் விழுவதுபோல்மக்கள் இன்னும் இது போன்ற
திட்டங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள் என்றால் யாரை
குறை சொல்ல? அரசு நிச்சயம் ஏதேனும் செய்யவேண்டும்
என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இது போன்று திட்டங்களில் ஏமாந்தவர்கள் நம் நாட்டினர்
மட்டும் தானா என்றால் இல்லை என்பதே பதிலாகும்
இதுபோன்ற திட்டங்கள் பொன்னான திட்டங்கள் என்று நினைத்தவர்களுக்கு, ‘இல்லை. இல்லை. இது பொன்ஃஜி
திட்டம் (Ponzi Scheme)’ என்கின்றனர் காவல் துறையினர்.
ஏன் இந்த திட்டங்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன
என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தொடரும்
திரும்பத் திரும்ப மக்கள் இது போன்ற திட்டங்களில் ஏமாந்து கொண்டே இருப்பதுதான் வேதனை.
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் பெயர்க்காரணம் அறிய.
தம 1
வருகைக்கும் ,கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குவணக்கம் நண்பரே.....
பதிலளிநீக்குபொது நலன் வேண்டி மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்தும் தங்களது பதிவுக்கு ஒரு ராயல் சல்யூட்...
என்னை, ஏமாற்றி விட்டான் என்ற வார்த்தையே எனக்கு வேப்பங்காயாய் கசக்கிறது நண்பரே... ஏன் ? ஏமாற்றுபவனை படைத்த இறைவன்தானே ஏமாறுபவனையும் படைத்தான். அதே மூளையைத்தானே அவனுக்கும், இவணுக்கும் வைத்தான் நாம்தான் அதை செயல் படுத்தவேண்டும் என்ற எண்ணம் நமது மக்களுக்கு தோன்றவே இல்லையே ஏன் ?
அரசாங்கத்தை குறை சொல்லவே முடியாது காரணம் திருடனை நீதிபதியாக்கி விட்ட நாமே அவர்களிடம் நீதி வழங்கு எனக்கேட்பது முறையற்றதே...
தங்களின் அடுத்த பதிவு (Ponzi Scheme)’ என்ற காவல் துறையினரின் கருத்தை காண...
ஆவலுடன் உங்கள்
KILLERGEE
நன்றி
தமிழ் மணம் 2
வருகைக்கும், பாராட்டுக்கும் ,கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குவ்வளவுதான் விழிப்புணர்வு செய்தாலும் இந்த விஷயத்தில் மக்கள் திருந்துவது தான் இல்லை.
பதிலளிநீக்குஇதற்கு இன்னும் சரியான ஒரு உதாரணம் "சதுரங்க வேட்டை" திரைப்படம். அதில் வருகின்ற வசனம் - "நான் யாரையும் ஏமாற்றவில்லை, அவர்களின் ஆசையைத் தான் தூண்டி விடுகிறேன்". உண்மையான வார்த்தைகள். சிக்கிரம் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசை ஒருவனுக்கு வந்துவிட்டால், அவன் கண்டிப்பாக யாரிடமாவது ஏமாறுவான்.
"//இது பொன்ஃஜி திட்டம் (Ponzi Scheme)//" - இதற்கான விளக்கத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நீக்குமுதலீட்டார்கள் முதலீட்டை மட்டுமே, பணப்புழக்கமாகக் கொண்டிருக்கும் திட்டங்களே "Ponzi scheme" என்று நினைக்கிறேன்.
ஒரு ரஷ்யன் கதை நினைவுக்கு வருகிறது.உள்ளது. ஒரு கடையில் நூற்று பத்து ரூபாய் கொடுத்தால் , பத்து கார்டுகளும் ஒரு சைக்கிளும் கிடைக்கும். ஒவ்வொரு கார்டையும் பத்து ரூபாய்க்கு விற்கலாம். அந்தக் கார்டை வாங்கியவர்கள், கடையில் அந்தக் கார்டுடன் நூறு ரூபாய்க் கொடுத்தால் புது சைக்கிளும் பத்து புதிய கார்டுகளும் கிடைக்கும். அந்தக் கார்டுகளை அவர்கள் கார்டு ஒன்று பத்து ரூபாய்க்கு மீண்டும் விற்றுவிட்டால் அவர்கள் சைக்கிளின் அடக்க விலை பத்து ரூபாய் ஆகிவிடும்.சைக்கிளின் உண்மையான விலை, கார்டு இல்லாமல் வாங்கினால் ஐம்பது ரூபாய் தான்.
ஆரம்பத்தில் கார்டு வாங்கியவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். காலம் செல்லச் செல்ல கார்டுகள் வாங்குவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த மாதிரியான திட்டங்களில் சேர்பவர்களுக்கு இது ஏமாற்றும் திட்டம் என்று தெரியும். தான் தப்பித்துவிடலாம் என்றுதான் நம்பி சேருகிறார்கள் என்று நினைக்கிறேன்.
கந்தர் அநுபூதி படித்ததில்லை. தாங்கள் கூறிய பிறகு படிக்கத் தோன்றுகிறது. நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!
நீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! சரியாக சொல்லிவிட்டீர்கள். ஆனால் சிலருக்கு இது போன்ற திட்டங்கள் மோசடித் திட்டங்கள் என்று இன்னும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.
ஆசையின் மறு உருவம்தான் மனதனோ?
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! ஆசையின் மொத்த உருவமே மனிதான் ஐயா!
நீக்குமனிதனின் பேராசைதான் காரணம் ஐயா
பதிலளிநீக்குஎன்ன செய்வது இவர்களை
தம 3
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் த.ம.வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை. ஜெயக்குமார் அவர்களே!
An article which will create awareness among the public. Well written.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!
நீக்குஉழைப்பை நம்பாதவர்க்கு என்றும் சிரமம் தான்...
பதிலளிநீக்குவிளக்கத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
வருகைக்கும், கருத்துக்கும் ,காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குதன் உழைப்பை நம்பாதவர்கள் இவ்வாறு ஏமாந்துதான் போகவேண்டியிருக்கும். எவ்வளவுதான் பாடம் கற்றாலும் பலர் இவ்வாறாகத் தொடர்ந்து ஏமாந்துகொண்டேயிருக்கிறார்கள். வேதனைக்குரிய செய்திதான்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குதினந்தோறும் இப்படி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏமாற்றுபவர்கள் உளவியல் அறிந்தவர்கள் போலும் நம்பிக்கை எப்படியாவது பெற்றுவிட்டு பின்னர் சுயரூபத்தை காட்டுகிறார்கள்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை இது தொடர் கதையாகத்தான் இருக்கும்.
Greed is the sole reason why people get fooled over and over again. That most of the victims are from T Nadu is not a surprise. This is a state which started offering most of the things free to masses ...right from tooth powder to TVs, Fans/Mixies/land/goats etc Desire to acquire riches in the quickest possible time is the cause. People fall a prey not only because of the ingenious techniques adopted by fraudsters but also because of insatiable hunger for riches which makes them throw caution to winds. Gullible people also get carried away for the schemes sometimes are recommended by celebrities..like in the case of Emu scheme which was recommended by celebrated actors of south indian cinema.( if i remember right by actors like Satya raj/Sarat kumar etc) .Not once people wonder if the celebrities do their home works properly before recommending a particular thing. These days one could see a plethora of actors ( Delhi Ganesh/Madavan etc) and singers like SPB trying to persuade people into buying land/flats etc.Some might be influenced into buying . . The fact is these actors would not have in all probability bothered to check the credentials of the promoters or try to ascertain if all papers are ok.In certain cases highly placed Govt authorities are known to have colluded with tricksters In so are as attractive schemes launched promising unrealistically high Rate of interest, are concerned Govt/RBI and other regulatory authorities should act in a pro active manner to prevent the swindling act. vasudevan
பதிலளிநீக்குவருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. இந்த விலையில்லா பொருட்களை( இலவசம் என்று சொல்ல தருவோருக்கும் வெட்கம். பெறுவோருக்கும் வெட்கம்.) தந்து நம் மக்களை சோம்பேறியாக உழைக்காமல் சம்பாதிக்க வைத்ததால்தான் மக்களின் ஆசை பல மடங்காக ஆகிவிட்டது. விளம்பரத்தில் வரும் பிரபலங்கள் சிபாரிசு செய்யும் பொருட்களின் அல்லது சேவைகளின் குறைபாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என சட்டம் வந்தாலோழிய மக்கள் ஏமாந்து தங்களின் சேமிப்பை இழப்பதை தவிர்க்க முடியாது. அரசும், ரிசர்வ் வங்கியும் களத்தில் இறங்கி ஆவன செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. செய்வார்களா?
நீக்கு