ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 2



ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.


வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது

என்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.



எனவே எந்த இடமும் நமக்கு நிரந்தரமுமல்ல சாசுவதமுமல்ல என்ற எண்ணம் வந்தாலே பணி மூப்பைப்பற்றி நாம் கவலைப் படத்தேவையில்லை.

‘காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.’ என்பார்கள், அதுபோல பணியில் சேருகின்ற நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணி மூப்பு வயதை ஒரு நாள் நாம் எட்டுவது நிச்சயம். அப்படி  எட்டும்போது இளையோருக்கு  வழிவிட்டு ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி. பணி மூப்பு அடைந்தவர்கள் விலகுவதென்பது  வழக்கமான நடைமுறையும் கூட.

நம் எல்லோருக்கும் பணியில் சேரும்போதே எப்போது ஓய்வு பெறப் போகிறோம்  என்பது தெரியும். இருந்தாலும் ஏனோ நம்மில் பலர் பணி நிறைவு நாட்கள் நெருங்க நெருங்க முகத்தில் சிரிப்பைத் தொலைத்து விட்டு எதையோ இழக்கப்போவதுபோல் சோகத்தோடு வளைய வருவதை பார்க்கிறோம்.

அதற்கு பல காரணங்களை சொல்லலாம்.  நாம் பணிபுரிந்த அலுவலகத்தோடு  நமக்கு இருந்த அந்த நெருக்கம், நம்மை அறியாமலேயே பணியின் மீது நாம் கொண்ட ஈடுபாடு (அதை காதல் என்று கூட சொல்லலாம்!) மாதக் கடைசியில் ஒழுங்காக கிடைத்துக்கொண்டிருந்த கணிசமான சம்பளம்30 அல்லது 35 ஆண்டுகள் வீட்டில் செலவிட்ட நேரத்தை விட, அலுவலகத்தில் அதிகமாக  செலவிட்ட நேரத்தில், நாம் பெற்ற நட்பு வட்டாரம், நம்மிடம் அன்பு காட்டும் வாடிக்கையாளர்கள்அலுவலகப் பணியால் நமக்கு கிடைத்த சமூக அந்தஸ்து என எல்லாவற்றையும் கூடிய சீக்கிரம் இழக்கபோகிறோமே என்பது தான்.

சிலருக்கு தான் பணிபுரியும் அலுவலகம், தான் இல்லாவிட்டால்  எப்படி சரியாக நடக்கப்போகிறதோ என்ற கவலை. வேறு சிலருக்கோ பணி நிறைவு பெற்ற பின் எப்படி பொழுதை கழிக்கப் போகிறோமோ என்ற கவலை. சரியாக நிதி மேலாண்மை செய்யாதவர்கள், இனி மாத வருமானம்  முழுமையாய் கிடைக்காதபோது எப்படி பென்ஷன் பணத்தோடு வாழ்வது என்ற கவலை. இப்படி பல கவலைகளோடு பணி நிறைவை எதிர்நோக்கி இருப்போர் அநேகம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பணி நிறைவுக்குப் பின் வாழ்க்கை ஒன்றும் அப்படியே நின்றுவிடப் போவதில்லை. வழக்கம்போல் காலையில் சூரியன் எழத்தான் போகிறது. நாம் பணி புரிந்த அலுவலகம் நாம் இல்லாமல் வழக்கம் போல் தன் பணியைத் தொடரத்தான் போகிறது. ஆனால் நாம் தான் வீட்டில் ஓய்வெடுக்கப்  போகிறோம் எந்த வித கட்டுப்படும் இல்லாமல்.  இதுதான் நிதர்சனம்.

பணி நிறைவு பெற்று இருப்போர் எல்லோரும் மன நிறைவுடன் வாழ்கிறார்களா என்றால், இல்லை என்பதே சிலருடைய பதிலாய் இருக்கும்.

சிலர் பணி நிறைவு பெற்ற பின் ஏதோ வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல் எண்ணி நடைப் பிணமாக உலவுவதையும் பார்க்கிறோம்.

எனவே வாழ்க்கை முறையை ,பணி நிறைவுக்குப்,பின் எப்படி அமைத்துக் கொள்வது  என்பதை அறிந்து கொண்டோமென்றால் பணியில் இருந்த காலத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பது உறுதி.



தொடரும். 


20 கருத்துகள்:

  1. அருமையான உளவியல் கட்டுரை நண்பரே...

    //நம் எல்லோருக்கும் பணியில் சேரும்போதே எப்போது ஓய்வு பெறப் போகிறோம் என்பது தெரியும்//

    உண்மைதான் ஆனால் பலரும் இதை ஏற்க மறுக்கிறார்கள் முக்கிய காரணம் வருமானம் இழப்பு என்பதே.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! உண்மை தான். பண இழப்பும் ஒரு காரணம்.

      நீக்கு
  2. Nobody is indispensable...இந்த வாசகம் அலுவலகங்களுக்கு மிகவும் பொருந்தும். வட இந்தியாவில் அரசு அலுவலகங்களில் ”சர்க்கார் கா காம் கபி நஹி ருக்தா ஹே” என்று சொல்வதுண்டு - அதாவது அரசின் வேலை என்றைக்கும் நிற்பதில்லை என்று! யார் வந்தாலும், வராவிட்டாலும் அரசு வேலை நிற்பதில்லை. இதைப் புரிந்து கொண்டால் பணி ஓய்வு பற்றி கவலைப் பட வேண்டாம்.

    நல்ல கட்டுரை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நாம் பணியில் சேருவதற்கு முன்பு பணி எவ்வாறு நடைபெற்றதோ, அதுபோல நாம் பணியை விட்டு விலகியவுடனும் அது தொடர்ந்து நடைபெறும். எனவே நம்மால்தான் பணி நடைபெறுகிறது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது.

      நீக்கு
  3. // என எல்லாவற்றையும் கூடிய சீக்கிரம் இழக்கபோகிறோமே என்பது தான்...//

    உண்மை தான்... எனது காதல் பாதியிலேயே நின்று விட்டதே... ம்... அது தொடர்ந்து இருந்தால், திண்டுக்கல் தனபாலன் யாரென்பதை, மற்றவர்களை விட எனக்கே என்னைப்பற்றி தெரிந்து இருக்காது...!

    நடப்பதெல்லாம் நன்மைக்கே...? ம்ஹீம்... நடப்பதெல்லாம் நம்மளாலே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! என்ன நடக்கவேண்டுமோ அது தான் நடக்கும். நீங்கள் பணியைத் தொடர்ந்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் தொடர்புகள் ஏற்பட்டிருக்குமா? ‘எல்லாம் நன்மைக்கே’ என்று வருவதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டியது தான்.

      நீக்கு
  4. பணி ஓய்வுக்கு பிறகும் வேறு பணிக்கு செல்பவர்களுள் பலருக்கும் வீட்டில் வாளாவிருக்க முடியாமல்தான். வீட்டில எப்படிங்க சும்மா இருக்கீங்க என்று என்னையே பலரும் கேட்டுள்ளனர். எனக்கும் துவக்கத்தில் சிரமமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அதுவே பழகிப் போய்விட்டது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு TBR ஜோசப் அவர்களே! படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும்போது ‘என்ன இன்னும் வேலை கிடைக்கவில்லையா?’ என்றும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தால் நீங்கள் குறிப்பிட்டது போல் ‘எப்படி வீட்டில் சும்மா இருக்கிறீர்கள்? என்றும் நம் பேரில் ‘அக்கறையோடு’ கேட்பது நம்மவர்களின் வழக்கம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும், நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  6. இந்த பகுதி-2 இல் பல்வேறு பீடிகையுடன் தொடரும் கட்டுரை, மேலும் தொடர்ந்து வாசிக்க ஒருவித சுவாரஸ்யத்தையும், எழுச்சியையும், எதிர்பார்ப்பையும் அளிப்பதாக உள்ளது. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  7. என் நினைவு சரி என்றால் பி எச் இ எல் திருச்சியில் ஓய்வு பெறுமுன் உடல் நலனை கவனிக்கும் வழியில் சி ஆலோசனை வகுப்புகள்நடை பெறும் பண முத்லிடு முதல் உடற்பயிற்சிசள் வரை பல வற்றையு சொல்கிறார்கள் நான் அம்மாதிரி பயிற்சி பெற்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! இன்றைக்கும் பல நிறுவனங்களில் பணி ஓயுவு பெற இருப்போருக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் ஆலோசனை வகுப்புகள் நடத்துகின்றன. அதில் எப்படி உடல் நலம் பேணுவது, பணிக்கொடை மற்றும் மாதாந்திர பென்ஷன் ஆகியவற்றை எவ்வாறு முதலீடு செய்வது போன்ற ஆலோசனைகள் தரப்படுகின்றன.

      நீக்கு
  8. Engineering is a old word; Re-engineering is a new word. Packaging is a old word; Re-packaging is a new word. Invention is a old word; Re-invention is a new word. Energizing is a old word; Re-energising is a new word. Tired is a old word; RE-tired is a new word. It is only a changed phased of work. Please note that so far your wife has got full salary and half husband. After retirement she will get full husband and half salary. But life will be sweet being together. Bye Bye tension; Hi Hi Pensioin

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள,சிறப்பான பதிவு.தொடருங்கள்.தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  10. "சிலர் பணி நிறைவு பெற்ற பின் ஏதோ வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல் எண்ணி நடைப் பிணமாக உலவுவதையும் பார்க்கிறோம்."...முன்னரே அவர்கள் திட்டமிட்டு வரையறுத்திருந்தால் இவ்வாறான எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. நாளிதழ் வாசிப்பு, நூல்கள் வாசிப்பு, உடற்பயிற்சி, வீட்டுப்பணியில் மனைவி, குழந்தைகளுக்கு உதவுதல், சமுதாயப்பணி என்ற வகையில் நம்மைஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே ! பணி நிறைவுக்குப் பின் எப்படி வாழவேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி இனிமையாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

      நீக்கு