சனி, 16 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 3



நண்பர் பாலு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் பொள்ளாச்சியில் எங்களது ஆறாவது சந்திப்பு நடைபெறும் Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) ஆயுர்வேத சிகிச்சை மய்யம் உண்டென்றும் அதை பயன்படுத்துவோர் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதுபோல அங்குள்ள நீச்சல் குளத்தில் நீந்த விரும்புவோர் அதற்கான கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.


மேலும் இந்த சந்திப்பில் பங்கேற்கும் நண்பர்களுக்கு வழக்கமாக தரும் பரிசு ஏதும் தருவதாக இல்லையென்றும், ஆனால் நண்பர் சரவணன் வழக்கம்போல் அவரது பரிசாக ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய துகிலியை தர இருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்திருந்தார்.


சந்திப்பின் இரண்டாம் நாள் மதிய உணவிற்குப் பின் உள்ள நிகழ்ச்சி பற்றி கோவை நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்றும், சந்திப்பில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தாங்கள் தரும் பங்கேற்பு தொகையுடன்  விரும்பினால்  மேலதிகத் தொகையை அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான் என் துணைவியாருடன் சந்திப்பில் பங்கேற்பது பற்றி 19-02-2018 அன்று தெரிவித்துவிட்டு அத்துடன் எனது ஆலோசனை ஒன்றையும் தெரிவித்திருந்தேன்.

அதாவது ஒரு நாள் மட்டும் ஓய்வகத்தில் தங்குவதற்கு பதில், ஒரு நாள் முன்னதாகவே பொள்ளாச்சியில் கூடி அனைவரும் பொள்ளாச்சியிலிருந்து 32 கி.மீ தொலைவில் (உடுமலைப்பேட்டை அருகே உள்ள) திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை பார்த்துவிட்டு இரவு பொள்ளாச்சியில் தங்கலாம் என்றும் மறு நாள் காலை பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆழியாறு அணை மற்றும் அறிவுத்திருக்கோவிலுக்கு சென்றுவிட்டு மதியம் திட்டமிட்டபடி ஓய்வகம் செல்லலாம் என்றும் தெரிவித்துவிட்டு,  எதற்கும் நண்பர்களின் கருத்தைக் கேட்டு அதன்படி நிகழ்ச்சி நிரலை தயாரிக்கவும் என சொல்லியிருந்தேன்.

ஏனோ தெரியவில்லை. இந்த முறை அநேக நண்பர்கள் பங்கேற்பது பற்றி உடனே தெரிவிக்காததால் நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு கவலை வந்துவிட்டது. ஏனெனில் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஓய்வகத்திற்கு பணம் செலுத்தி உறுதி செய்யாவிடில், சந்திப்பு நடத்த அறிவிக்கப்பட்ட நாள் வேறு யாருக்கேனும் ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது என்பதால்  அனைவருக்கும் தஞ்சை நண்பர் பாலுவும் கோவை நண்பர் T.N.பாலசுப்பிரமணியனும் திரும்பத் திரும்ப நினைவூட்டல் அஞ்சல் அனுப்பும்படி ஆகிவிட்டது.

நண்பர் பாலு அனைவரிடமும் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு சந்திப்பு பற்றிய தகவல்களை தெரிவித்துக்கொண்டு இருந்தார், இடையில் என்னைக் கூப்பிட்டு சில காரணங்களால் எனது ஆலோசனையை செயல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே எங்களது ஆறாவது சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும், திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும்  எனக்கும் என் துணைவியார்க்கும் 28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சி பற்றிய விரிவான  சுற்றறிக்கைக்கு காத்திருந்தேன்.

   

தொடரும்



20 கருத்துகள்:

  1. காத்திருந்தது வீண் போயிருக்காது... பயணக்கட்டுரைதான் வருகிறதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தாங்கள் கூறியது உணமைதான்!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. //ஆயுர்வேத சிகிச்சை மய்யம்//

    கமலம் பூத்தது போலவான பொலிவான வார்த்தை மய்யம்.

    எனது நினைவுகள் சரியானால், இந்த வார்த்தையை முதலாக அறிமுகப்படுத்தியவர் பெருஞ்சித்திரனார் என்று நினைக்கிறேன்.
    கடலூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அவரது தென்மொழி என்ற இதழுக்கு வருட சந்தா (கட்டணமா?) கட்டி வாசித்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிதிரு ஜீவி அவர்களே! ஐ க்கு பதில் அய் பயன்படுத்துவது மொழி மரபு பற்றி நன்னூல் கூறும் 10 குற்றங்களில் ஒன்றான 'மயங்கவைத்தல்'குற்றம் என்கிறார்கள் தமிழறிஞர்கள். திரு பெருஞ்சித்தினார் அவர்களின் தென்மொழி பற்றி கேள்விபட்டிருக்றேன்.ஆனால் படித்ததில்லை.

      நீக்கு
  4. நீங்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ
    பொள்ளாச்சியிலிருந்து அறிவுத் திருக்கோயிலுக்காவது சென்று தரிசித்திருக்கலாமே (அந்த அனுபவத்தை உணர்ந்திருக்கலாமே) என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி திரு ஜீவி அவர்களே!சொல்லப் போனால் எங்களது சந்திப்பின் இரண்டாம் நாள் அறிவுத்திருக்கொயில் செல்லும் நிகழ்ச்சி இருந்தது. ஆனால் என்னால் போகமுடியவில்லை.காரணத்தை பதிவில் சொல்ல இருக்கிறேன்.

      நீக்கு
  5. //28-05-2018 அன்றே,,//

    எவ்வளவு முன்னேற்பாடு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்பு நடைபெறும் நாள் முன்பே தெரிந்ததால் பயண முன்பதிவை முன்பே செய்துவிட்டேன்.

      நீக்கு
  6. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பஞ்சமுக அருவிக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கும் சென்றிர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கமலக்கண்ணன் அவர்களே! ஒரு சில காரணங்களால் அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அருவிக்கு செல்லவில்லை.ஆனால் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபொது பலமுறை சென்றிருக்கிறேன்.

      நீக்கு
  7. வெளியூர்களில் உள்ள நண்பர்கள் பலரையும் ஓரிடத்தில் கூட்டி, தங்குமிடம், சாப்பாடு முதலியன ஏற்பாடுகள் செய்து, நிகழ்ச்சி நிரல் தயாரித்து, அனைவருக்கும் அனைத்தும் திருப்தியாக அமையும்படி செய்வது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாகும். ஒருங்கிணைப்பாளரின் வேலை மிகவும் கடினமானது மட்டுமே. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகுஷ்ணன் அவர்களே!உண்மைதான். ஒருங்கிணைப்பது என்பது கடினமான செயல். ஆனால் அதை தஞ்சை மற்றும் கோவை நண்பர்கள் திறம்படவே செய்தார்கள்.

      நீக்கு
  8. நாங்களும் நிகழ்ச்சி பற்றிய விரிவான சுற்றறிக்கைக்காக காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவைப் படிக்க காத்திருப்பதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!

      நீக்கு
  9. தங்களது ஆலோசனையும் நன்று.
    இருப்பினும் இதற்கு அனைவரும் ஒப்புக்கொள்வது என்பது சற்று கடினமானதே...

    சுவாரஸ்யமாக செல்கிறது
    தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி!

      நீக்கு
  10. உங்கள் ஆலோசனைகள் நன்று. நானும் குடும்பத்துடன் ஆழியார், குரங்கு அருவி, அறிவுத் திருக்கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தது உண்டு.

    இத்தனை பேர் தங்குவதற்கும், இப்படிச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்வது ஒரு பெரிய விஷயம். நாங்கள் சென்ற வருடம் மே மாதம் பாண்டிச்சேரியில் சந்தித்தபோது அதற்கு ஏற்பாடு செய்தது எங்கள் கல்லூரித் தோழியும் அவரது மூத்த சகோதரியும். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    உங்கள் சந்திப்பு பற்றித் தெரிந்து கொள்ள மேலும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நான் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது பலமுறையும், கோவையில் பணிபுரிந்தபோது ஒருமுறையும் சென்று வந்துள்ளேன். அதனால் தான் அந்த இடங்களைப் பார்க்க பரிந்துரை செய்தேன். நேரமின்மை காரணமாக அந்த இடங்களுக்கு செல்லும் திட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்படவில்லை. மற்றபடி சந்திப்பு வழக்கம்போல் மகிழ்சியாக இருந்தது. அதுபற்றி வரும் பகுதிகளில் எழுதுவேன்.

      நீக்கு