வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 1அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் 
படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.


மூன்றாவது முறையாக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் அண்ணாமலை நகரில் சந்தித்ததை பிரிந்தவர் கூடினால் .....???????? 1 என்ற தலைப்பில்,2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 இல் எழுதியிருந்தேன்.

அண்ணாமலை நகரில் சந்தித்தபோது நாங்கள் முடிவெடுத்தது போல 2013ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 மற்றும் 11 தேதிகளில் நான்காவது முறையாக சேலத்தில் சந்தித்தோம். அதுபற்றி மீண்டும் சந்தித்தோம் என்ற தலைப்பில் எழுதியபோது, நாங்கள் ஏற்காடு சென்றது பற்றியும், ஹொகனக்கல் சென்றது பற்றியும் எழுதியிருந்தேன்.

சேலத்தில் சந்தித்தபோது தஞ்சையில் சந்திக்க முடிவு செய்து அதன்படி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 11,12 தேதிகளில் ஐந்தாவது முறையாக தஞ்சையில் சந்தித்தோம். அதுபற்றி மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு 1 என்ற  தலைப்பில் எழுதியிருந்தேன்.

அந்த கூட்டத்தில் கோவை நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், செல்லப்பா மற்றும் T.N.பாலசுப்ரமணியன் ஆகியோர்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க எங்களது அடுத்த சந்திப்பை கோவையில் 2018 ஆம் ஆண்டு வைத்துக்கொள்வது என்று ஒரு மனதாக முடிவு செய்தோம். .தஞ்சை நண்பர்கள் தாங்களும் தேவையான உதவிகளை செய்வதாக சொன்னார்கள்.

நண்பர் மீனாட்சி சுந்தரம்  04-07-2017 அன்று கோவையிலிருந்து கைபேசியில் அழைத்து மாவட்ட தலைநகரான கோவையில் சந்திப்பு நடத்துவதை விட அருகில் உள்ள ஊரில் நடத்தலாம் என கோவை நண்பர்கள் முடிவெடுத்ததாக சொன்னார்.

கோவையிலிருந்து 40 கி,மீ தொலைவில் உள்ள பொள்ளாச்சி அருகே, அழகிய தென்னந்தோப்புகளுக்கிடையே அமைந்துள்ள ஒரு ஓய்வகத்தில் (Resort) சந்திப்பை நடத்த இருப்பதாகவும், அங்கு தங்கி அங்கிருந்து அருகில் உள்ள ஆழியாறு, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் போன்றவற்றை பார்க்கலாம் என்றும் சொன்னார்..

தஞ்சை நண்பர்கள் விரைவில் கோவை வந்து  தங்களோடு அந்த இடத்தை பார்வையிட்டு முடிவெடுத்த பின்னர் விரிவான விவரங்கள் சுற்றறிக்கை மூலம்  தெரிவிக்கப்படும் என்றும் சொன்னார். தான் ஏற்கனவே அங்கு சென்று தங்கியிருப்பதாகவும், சந்திப்பு நடத்த நல்ல இடம் என்றும் சொன்னார்

பொள்ளாச்சி என்று கேள்விப்பட்டதுமே எனது மனம் 47 ஆண்டுகள் பின்னோக்கி சென்று 1970 முதல் 1973 அங்கு பணியாற்றியபோது ஏற்பட்ட சுவையான அனுபவங்களை நினைத்து அசை போட ஆரம்பித்துவிட்டது.


தொடரும் 

பின் குறிப்பு: இந்த தொடர் பதிவை செப்டெம்பர் 2018 இல் எழுதுவதாக  இருந்தேன். ஒரு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுத இயலவில்லை.

14 கருத்துகள்:

 1. இதுபோல் திட்டமிட்டு சந்திப்புகள் தொடர்வது மகிழ்ச்சி தருகிறது...

  சுவையான அனுபவங்களை ரசிக்க காத்திருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! காத்திருப்பதற்கும் நன்றி!

   நீக்கு
 2. ஆஹா.... இப்படி தொடர்ந்து சந்திப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எங்கள் கல்லூரி நண்பர்கள் சிலர் மட்டும் சென்ற மே மாதம் புதுவையில் சந்தித்தோம்.

  உங்கள் சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் சந்திப்பு பற்றி அறிய ஆவலாய் இருப்பதற்கு நன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே! நாங்கள் அடுத்த எங்கு எப்போது சந்திக்க இருக்கிறோம் என்பதை இந்த தொடரின் முடிவில் எழுத டிருக்கிறேன்.

   நீக்கு
 3. தொடரும் சந்திப்புகள் தொடரட்டும். என்று நடந்தால் என்ன, நீங்கள் சொல்லிச் செல்லும் சுவையான விவரங்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும் தான். பொள்ளாச்சி சந்திப்பு விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எதையும் உடனே சொல்லிவிடவேண்டும் அல்லது எழுதிவிடவேண்டும். இந்த தடவை சற்று தாமதமாகிவிட்டது.

   நீக்கு
 4. ஆஹா மீண்டும் சுவாரஸ்யமான சந்திப்பு விழா பற்றிய முன்னோட்டமே அசத்தலாக இருக்கிறது.

  ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு கருத்துக்கும் ஆவலுடன் காத்திருப்பதற்கும் நன்றி தேவகோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

   நீக்கு
 5. தங்களின் அனுபவங்களை படிப்பதற்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,தொடர் பதிவை படிக்க காத்திருப்பதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!

   நீக்கு
 6. நண்பர்களின் சந்திப்பு இனிமை. உங்கள் அந்த சுவையான பணிக்கால அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பணிக்கால அனுபவங்களை படிக்க காத்திருப்பதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! இந்த தொடரில் எங்களது சந்திப்பு பற்றிதான் எழுத இருக்கிறேன். ஆனாலும் எனது பணிக்கால அனுபவங்களை பின்னர் தொகுத்து எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 7. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் பயண அனுபவங்கள் + நண்பர்களின் சந்திப்பு பற்றி மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு