எங்களது ஆறாவது சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 அன்று தொடங்குவதாக இருந்தபோது, நான் 30-008-2018 அன்றே கோவைக்கு பயணப்பட்டதற்கு காரணம் ஒன்று உண்டு.
எங்கள் வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் திரு இந்திரஜித் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் கோவையில் உள்ளார். கோவை சரவணம்பட்டியில் கட்டப்பட்டுள்ள அவரது புதிய வீட்டின் புதுமனை புகு விழா 28-01-2018 அன்று நடக்க இருப்பதால் அதில் கலந்துகொள்ள என்னை அழைத்திருந்தார். நானும் துணைவியாருடன் வருவதாக சொல்லி இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தேன்.
ஆனால் அதே நாளில் எங்களது குடும்பத்தில் வேறொரு நிகழ்சி நடக்க இருந்ததால் எனது கோவை பயணத்தை இரத்து செய்யும்படி ஆகிவிட்டது. நண்பர் திரு இந்திரஜித்திடம் விழாவில் பங்கேற்க முடியாததன் காரணத்தை சொல்லிவிட்டு பின்னர் ஒரு நாள் வருவதாக சொல்லியிருந்தேன்.
அதனால் கோவை வழியாக பொள்ளாச்சி செல்லும்போது ஒரு நாள் முன்னதாகவே கோவை சென்று அவர் வீட்டிற்கு சென்றுவிட்டு போகலாம் என திட்டமிட்டதால், ஆகஸ்ட் 30 ஆம் நாளன்றே கோவை செல்ல திட்டமிட்டேன்.
பிப்ரவரியில் அனுப்பிய சுற்றறிக்கைக்குப் பின் நண்பர் பாலு 16-06-2018 நாளிட்டு மேலும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் 32 நண்பர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் சேர்த்து 57 பேர் சந்திப்புக்கு வர உறுதி செய்துவிட்டதால் 12-06-2018 அன்று Great Mount ‘COCO LAGOON’ க்கு தானும் கோவை நண்பர்கள் T.N பாலசுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம் மற்றும் செல்லப்பாவுடன் சென்று 60 நபர்களுக்காக முன் பணம் செலுத்தி எங்களது சந்திப்பை உறுதி செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
31-08-2018 அன்று மதியம் 2 மணிக்கு ஓய்வகத்தில் இருக்கவேண்டும் என்பதால், பொள்ளாச்சிக்கும் 31 ஆம் நாள்வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை Great Mount ‘COCO LAGOON’ அழைத்து செல்ல 20 பேர் அமரக்கூடிய கூடுந்து (Van) ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
பொள்ளாச்சிக்கு முன்பே வரும் நண்பர்கள் அவரவர்கள் செலவில் தங்க Hotel Rathina Square இல் ஏற்பாடு செய்திருப்பதாகவும்,அந்த தங்குமிடத்தின் ஒரு நாள் வாடகை கட்டணத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாம் நாள் அதாவது 01-09-2018 அன்று மதியத்திற்கு மேல் பொள்ளாச்சிக்கு அருகில் இடங்களை சுற்றிப்பார்க்கவும், மாலையில் பொள்ளாச்சி மற்றும் கோவையில் கொண்டுவிடவும், Raju Bus Travels என்ற நிறுவனத்தினருடைய பேருந்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தாங்கள் மறுபடியும் அந்த ஓய்வகத்திற்கு 01-08-2018 அன்று சென்று, தங்குமிடம், உணவுவகைப் பட்டியல், கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓய்வகத்தில் உள்ள வசதிகளை பெறுதல் போன்றவைகளை இறுதி செய்ய இருப்பதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விரிவான நிகழ்சி நிரல் அனுப்பப்படும் என்றும், நண்பர்கள் அனைவரும் பொள்ளாச்சிக்கு வரவும் ஊருக்குத் திரும்புவதற்குமான பயண சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கோவையில் சந்திப்பு முதல் நாளோ அல்லது சந்திப்பு பின்னரோ கோவை வேளாண் பல்கலைக் கழக விருந்தினார் விடுதியில் தங்க விரும்பும் நண்பர்கள் கோவை நண்பர் T.N.பாலசுப்ரமணியத்தை தொடர்பு கொள்ளும்படியும், அதுபோல் பொள்ளாச்சியில் Hotel Rathina Square இல் தங்க விரும்புவோர் நண்பர் செல்லப்பாவை தொடர்புகொள்ளவும் சொல்லியிருந்தார்.
அந்த சுற்றிக்கையைப் படித்த பின் இந்த சந்திப்பை நடத்த நண்பர் பாலுவும் கோவை நண்பர்களும் எவ்வாறு துல்லியமாக திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதையும், அதற்காக தங்களுடைய சிரமத்தைப் பாராது, வகுப்புத் தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் சந்திப்பில் கலந்துகொண்டு மகழ்ச்சியாக நேரத்தை செலவிட எப்படி உழைத்திருக்கிறார்கள் என அறிந்து வியப்புற்றேன்.
தொடரும்
உண்மை பொது நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாதாரணம் இல்லை.
பதிலளிநீக்குஎனக்கு இப்படி பொது நிகழ்ச்சி அபுதாபியில் நடத்திய அனுபவம் இருக்கிறது.
தொடர்ந்து வருகிறேன்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! சொல்லப்போனால் இது போன்ற நிகழ்வை நடத்துவது ஒரு திருமணத்தை நடத்துவது போலத்தான்.தொடர்வதற்கு நன்றி!
நீக்குநல்ல திட்டமிட்ட சந்திப்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!
நீக்குதிட்டமிடுதல் - இப்படியான சந்திப்புகளில் ரொம்பவே முக்கியமானது. அதுவும் நிறைய பேர் வரும்போது தங்கும் இட வசதிகள், போக்குவரத்து என பலவற்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. சந்திப்பைத் திட்டமிட்டு நடத்திய உங்கள் நண்பர்களுக்கு ஒரு பூங்கொத்து.... வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குசந்திப்பினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
சில பதிவுகளை வெளியிட்ட உடன் படிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டியிருக்கிறது. வெளியிட்ட போது படித்து கருத்துரைக்க முடியாதமைக்கு வருந்துகிறேன்.
தொடரை படித்து கருத்திடுவதற்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!தங்களது வாழ்த்திற்கு என் நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடரைப் படித்து தங்களின் மேலான கருத்தை பதிவுடவும்.
பதிலளிநீக்குஅவ்வப்போது தொடர்பு கொள்ளுதல் எவ்வளவு முக்கியம் என்பதே இப்பயணத்தின் சிறப்பு என்று எண்ணுகிறேன் ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!உண்மையில் இந்த சந்திப்புகள் எங்களுக்கு உற்சாகமூட்டுவது மட்டுமல்லாமல் பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மகிழவும் உதவுகிறது.
பதிலளிநீக்குஉங்களின் இந்த தொடரை படிக்கும்போது எல்லாம் மலரும் நினைவுகளை அசை போட வைக்கிறீர்கள் ஐயா. எனக்கும் சென்ற வருடம் எங்கள் கல்லூரியின் 25ஆம் வருட ஒன்று கூடல் நிகழ்வு தான் நியாபகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதனை எழுத முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!தங்களின் ஒன்று கூடல் நிகழ்வு பற்றி அவசியம் எழுதுங்கள். இந்த சந்திப்புகளும் அவற்றைப் பற்றி எழுதுவதும் நம்மை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குசந்திப்பு சம்பந்தமாக அவர்களின் திட்டமிட்ட செயல்களை தங்கள் எழுத்துக்களில் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும்போது சுகமாகத்தான் உள்ளது. தொடரட்டும்.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பதிவை இரசித்து படிப்பதற்கும் தொடர்வர்தற்கும் நன்றி!
நீக்குஉங்களுடைய இப்பதிவு மூலம் நட்பின் ஆழத்தையும், ஒருங்கிணைக்கின்ற உணர்வினையும் அறியமுடிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குதிட்டமிட்டு நடத்தும் பொறுப்பு கடினமானது. இது போன்ற கிழவில் இதுவரை கலந்து கொண்டதில்லை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!
நீக்கு//இது போன்ற கிழவில் //
நீக்குமன்னிக்கவும், 'இது போன்ற நிகழ்வில்' என்று படிக்கவும்.