பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 நடக்க இருந்த ஆறாவது சந்திப்பு பற்றி நண்பர் பாலு 16-06-2018 க்குப் பிறகு 07-08-2018 அன்று இறுதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் 04-08-2018 அன்று தஞ்சையில் நண்பர் பாலு வீட்டில் நண்பர்கள் Rm.நாச்சியப்பன், R.கோவிந்தசாமி, R.நாகராஜன், C.முருகானந்தம் R.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்திந்து சந்திப்பு பற்றிய நிகழ்ச்சி நிரலை முடிவு செய்ததாகவும், அதுபற்றிய விவரத்தை விரிவாகத் தந்திருந்தார்.
அவற்றையெல்லாம் விரிவாக இங்கே தந்து படிப்பவர்களுக்கு அலுப்பை தரவிரும்பவில்லை. சுருக்கமாக சில தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகிறேன். (அந்த ஓய்வகத்தில் இருக்கும் வசதிகள் பற்றி தொடரின் இறுதியில் எழுத இருக்கிறேன்.)
ஓய்வகத்தில் 30 இரட்டை படுக்கை கொண்ட குளிர்சாதான வசதிகொண்ட அறைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 31-08-2018 மதியம் இரண்டு மணிக்கு அங்கு Check in செய்யவேண்டும் என்றும்
01-09-2018 அன்று நண்பகல் 12 மணிக்கு Check out செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பொள்ளாச்சியில் இருந்து ஓய்வகத்திற்கு அழைத்து செல்ல இருக்கும் கூடுந்தில் (Van) 20 பேர் பயணிக்கலாமேன்றும், 31-08-2018 அன்று அனைவரும் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஹோட்டல் ராமஜெயம் அருகே ஓய்வகத்திற்கு செல்ல குழுமவேண்டும் தெரிவித்திருந்தார்.
ஓய்வகத்தை அடைந்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மாலை 4.30 மணிக்கு கருத்தரங்கு மண்டபத்திற்கு வரவேண்டும் என்றும், மாலை தேநீர் விருந்துக்குப் பின் 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை குடும்ப அங்கத்தினர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓய்வக ஊழியர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மறுநாள் காலை சிற்றுண்டிக்குப்பின் அவரவர் விருப்பப்படி நேரத்தை செலவழித்துவிட்டு மதிய உணவிற்குப் பின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 2 மணிக்கு அருகில் உள்ள உள்ள இடங்களைப் பார்க்க புறப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஓய்வகத்திலிருந்து புறப்பட்டு ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் திருக்கோவில், ஆழியாற்றில் உள்ள அறிவுத் திருக்கோவில் மற்றும் ஆழியாறு அணை ஆகிய இடங்களை பார்க்கவும்,மாலை 7 மணிக்கு பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலும், இரவு 8.30 மணிக்கு கோவை சந்திப்பு இரயில் நிலையத்திலும், இரவு 8.45 மணிக்கு கோவை பேருந்து நிலையத்திலும் அனைவரையும் கொண்டுவிடவும் ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்திருந்தார்.
சந்திப்பு சிறப்பாக நடைபெற நண்பர்கள் செய்திருந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள பொள்ளாச்சி செல்லும் நாளுக்காக காத்திருந்தேன்.
தொடரும்
அருமையான திட்டமிடல்...
பதிலளிநீக்குஅனுபவத்தை ரசிக்க காத்திருக்கிறேன் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குநல்ல திட்டமிடம். மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும்,பதிவை படிக்க காத்திருப்பதற்கும் நன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே!
நீக்குநாங்களும் காத்திருக்கிறோம் - அடுத்த பதிவிற்கு!
பதிலளிநீக்குவருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!
நீக்குகாத்திருக்கிறேன் நண்பரே அனுபவத்தை அறிந்திட...
பதிலளிநீக்குவருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!
நீக்குபங்கு பெரும் -- பங்கு பெறும்
பதிலளிநீக்குVAN-க்கான தமிழ் பெயர்ப்பு -- கூடுந்து -- குறித்துக் கொண்டேன்.
வருகைக்கும், தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி! தட்டச்சும்போது தவறு ஏற்பட்டிருக்கிறது. அதை நான் கவனிக்க மறந்துவிட்டேன். தற்போது அந்த தவறை திருத்திவிட்டேன்.
நீக்குஉங்களுடன் பொள்ளாச்சி பயணிக்கக் காத்திருக்கிறோம், பதிவு வழியாக.
பதிலளிநீக்குவருகைக்கும், பயணத்தில் தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குகடந்த 4-5 நாட்களாக தொலைகாட்சிப்பெட்டிகளில் பொள்ளாச்சி பற்றிய திடுக்கிடும் செய்திகளாக வந்து குவியும் வேளையில் ..... பொள்ளாச்சி என்னும் ஊரைப்பற்றி ஏதோ கொஞ்சமாக மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குஎன்றோ பொள்ளாச்சிக்கு நேரிலேயே போய் வந்துள்ள தாங்கள் பொள்ளாச்சியின் சிறப்புகள் பற்றி சொல்லப்போகும் தகவல்கள் அறிய கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தொடரட்டும். வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களே! பொள்ளாசியில் நான் மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்கின்றேன். அழகான ஊர். மரியாதை தரக்கூடிய அருமையான மக்கள். எதோ சில வக்கிரம் பிடித்தவர்கள் செய்கையால் பொள்ளாச்சியின் பெயர் நாளேடுகளில் அடிபட ஆரம்பித்துவிட்டது. அவ்வளவெ.
நீக்குநாங்களும் பொள்ளாச்சி பயணத்திற்காக காத்திருக்கிறோம் ஐயா .
பதிலளிநீக்குவருகைக்கும், என்னோடு பயணிக்க இருப்பதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!
நீக்கு