ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதை மொழி பெயர்ப்பு (Translation) என்கிறோம். அது வேற்று மொழியில் உள்ள நூல்களை இன்னொரு மொழியில் மாற்றம் செய்வதாய் இருக்கலாம் அல்லது வேற்று மொழியில் ஒருவர் மேடையில் பேசும் பேச்சை, அம்மொழி அறியாத மக்களுக்காக அவர்கள் மொழியில் மாற்றம் செய்வதாக கூட இருக்கலாம்.
ஆனால் அந்நியர்கள் நம்மை ஆண்டபோது அவர்கள் பேசுவதை நமது மொழியில் சொல்லவும், நம் மக்கள் சொல்வதை அவர்கள் மொழியில் சொல்லவும் உரை பெயர்ப்பாளர்கள் (Interpreters) பணியில் சிலர் இருந்தார்கள். அவர்களை ‘துபாஷி’ (இரு மொழி அறிந்தோர்) என சொல்வார்கள்.
(இந்த உரை பெயர்ப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் புதுவையில் இருந்த துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர்.இவர் புதுவை ஆளுநராக இருந்த ஜோசப் ஃப்ரான்கோய்ஸ் தூப்ளே (Joseph-François, Marquis Dupleix) என்பவருக்கு உரை பெயர்ப்பாளராக இருந்தவர். இவர் எழுதிய நாட்குறிப்பு ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு என அழைக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக கருதப்படுகிறது.)
உரை பெயர்ப்பாளர்களானாலும், மொழிபெயர்ப்போர்களானாலும்
தாங்கள் மொழிபெயர்க்கும் மொழியையும், தங்களது மொழியையும் நன்றாக அறிந்தாலோழிய தங்கள் பணியை திறம்பட செய்ய இயலாது என்பது தெரிந்ததே.
மொழிபெயர்ப்பதில் மேடைப்பேச்சை மொழிபெயர்ப்பது என்பது, வேற்று மொழியில் எழுதியதை மொழிபெயர்ப்பதைவிட சற்று கடினம். காரணம் இரண்டுக்கும் அதிக வேறுபாடு உண்டு.
எழுத்தை மொழிபெயர்ப்பவர் எழுத்துதிறமை கொண்டவராகவும் மூலக்கருத்தை உள்வாங்கி அதை சிதைக்காமல், தான் மொழிபெயர்க்கும் மொழியில் அதை சிறப்பாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். இத்தகைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு சாதகம் (Advantage) உண்டு.
இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மொழிபெயர்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை..மேலும் இவர்களுக்கு ஒரு சொல்லில் அல்லது பொருளில் ஐயம் ஏற்படின் சொற்களஞ்சியத்தை (Dictionary) பார்த்தோ அல்லது நண்பர்களை கேட்டோ ஐயத்தை தெளிவுபடுத்திக்கொண்டு பணியைத் தொடரலாம். தற்போது கூகிளாரின் (Google) உதவியையும் நாடலாம்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மொழிபெயர்க்கும் நூல் அறிவியல் நூலாகவோ அல்லது கலை இலக்கிய நூலாகவோ இருப்பின் இருமொழித் திறமையோடு அந்த துறையில் தேர்ச்சி பெற்றவராக இல்லாவிடில் மொழிபெயர்ப்பு என்பது வெறும் சொற்களை மட்டும் மாற்றம் செய்த பொருளற்ற (Meaningless) மொழிபெயர்ப்பாக ஆகிவிடும்.
அதுவும் பாட நூல்களை மொழிபெயர்ப்போர் அவசியம் அந்த பாடம் பற்றி அறிந்தவராக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு அறிவியல் நூலை ஆங்கிலத்திலிருந்தோ அல்லது பிற மொழிலிருந்தோ தமிழில் மொழிபெயர்ப்பவர் தமிழ் மொழியில் புலமை உள்ள அறிவியலாராக இருப்பின் அந்த மொழிபெயர்ப்பு, அந்த பாடத்தை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
70 களில் அரசு பாட நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோது பொருளாதார பாடத்தில் தமிழில் குறிப்பிட்டிருந்த ஒரு சொல்லுக்கு பொருளாதார ஆசிரியருக்கே அதனுடைய பொருள் விளங்கவில்லை.
‘விலைவாசியைக் குறைக்க அரசிடம் விளயாட ஒரு பெரிய உருளை உள்ளது!' என்பதே அது.
இதனுடைய் ஆங்கில மூலம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கமுடிக்கிறதா? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் வெளியிடலாம். அந்த சொல் என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்.
There is a big cylinder to get to the government to reduce the price...
பதிலளிநீக்குஎன்று நினைக்கிறேன்...!
வருகைக்கும் யூகித்ததற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சரியான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நீக்குThe government has a "big role to play" in reducing the price
பதிலளிநீக்குவருகைக்கும் சரியாக யூகித்ததற்கும் நன்றி திரு ராஜ் சந்திரசேகரன் அவர்களே!
நீக்குநல்லதொரு துவக்கம் வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்கு//மொழி பெயர்ப்பதில் மேடைப்பேச்சை மொழி பெயர்ப்பது என்பது, வேற்று மொழியில் எழுதியதை மொழி பெயர்ப்பதைவிட சற்று கடினம்//
நிதர்சனமான உண்மை நண்பரே
இருமொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதனுக்கு சமம்.
நீக்கு- மஹாத்மா காந்தி
அப்போ தமிழ், அரபி, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம்,கன்னடம் தெரிந்த நீங்கள் 6 மனிதருக்கு சமமா?
நீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! பல மொழிகள் தெரிந்திருப்பது பயனளிக்கும் என்பதைத்தான் காந்திஜி அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.
நீக்குதிரு jk22384 அவர்களின் கேள்விக்குதிரு கில்லர்ஜி அவர்கள் பதிலளிப்பார் என எண்ணுகிறேன்.
விடை தெரியவில்லை.
பதிலளிநீக்குமொழியாக்கம் குறித்த பயனுள்ள பதிவு.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு கூமுட்டை (அறிவிலி நம்பி) அவர்களே! சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார்.
நீக்கு//எழுத்தை மொழிபெயர்ப்பவர் எழுத்துதிறமை கொண்டவராகவும் மூலக்கருத்தை உள்வாங்கி அதை சிதைக்காமல், தான் மொழிபெயர்க்கும் மொழியில் அதை சிறப்பாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். //
பதிலளிநீக்குஇதான் நல்ல மொழிபெயருக்கான இலக்கணா வரையறை. நல்ல தொடக்கத்திற்கான கட்டுரை. என் சமீபத்திய தொடர்
வசந்தகால நினைவலைகள் தொடரில் இது பற்றி எழுதுவதாக இருக்கிறேன்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் ‘வசந்த கால நினைவுகளை’ப் படித்து வருகிறேன். மொழிபெயர்ப்பு பற்றிய தங்களின் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.
நீக்குஆன்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்க வேண்டி அல்லது மொழிமாற்றம்செய்ய வேண்டி டி பி கைலாசம் அவர்களின் DRONA என்னும் சிறு கவிதையை பல நாட்களுக்கு முன் கேட்டிருந்தேன்யாருமே முன் வரவில்லைநான்மொழி மாற்றம் செய்தது சரியா என்று சோதிக்கவே அது இப்போது வாட்ஸ் ஆப்பில்
பதிலளிநீக்குவெளிவந்து கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் ஒரு சொற்பொழிவு சிரிப்பாய் சிரிக்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே! தாங்கள் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வு தான் இந்த பதிவை எழுதத் தூண்டியது.
நீக்குதலைப்பு அருமை. இரு மொழிகளையும் நான்கு தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு அது கலை. நுனிப்புல் மேய்ந்தவர்களுக்கு அது கொலை.
பதிலளிநீக்குமேடைப்பேச்சை மொழி பெயர்ப்பது - கண்டிப்பாக அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மேடைப் பேச்சை மொழிப்பெயர்ப்பார்கள். அதனை கேட்பதற்கு தான் மக்கள் இருக்கிறார்களே.
சரியாக தெரியவில்லை.
வருகைக்கும் பதிவின் தலைப்பை பாராட்டியதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! அரசியல்வாதிகள் பேசுவதை மொழிபெயர்ப்பதைப் பற்றி தாங்கள் சொன்னது சரியே. நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார்.
நீக்குசரியான அவதானிப்பு. தொடர்ந்து எழுதுங்கள் !!
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் தரும் ஊக்கத்திற்கும் நன்றி திரு ஆரூர் பாஸ்கர் அவர்களே!.
நீக்குஅவர்கள் சொல்ல நினைத்த அந்த உருளைக்கான ஆங்கில மூலத்தை யோசித்து மண்டை காய்கிறது. தொடரக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார். இருப்பினும் நானும் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதுவேன்.
நீக்குA big wheel is available to play with the government and reduce inflation.
பதிலளிநீக்குவருகைக்கும் யூகிக்க முயற்சித்ததற்கும் நன்றி திரு jk22384 அவர்களே! சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார்
நீக்குமிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். மொழி பெயர்க்குன் பணி கடினமானது. நீங்கள் சொன்ன வாக்யம் என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆவல்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!. சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார்.
நீக்குThe Govt., has a big roll to play in controlling the price rise. Nkl Venkatachalam
பதிலளிநீக்குவருகைக்கும் சரியாக யூகித்ததற்கும் நன்றி திரு வெங்கடாசலம் அவர்களே! தாங்கள் தந்துள்ள ஆங்கில சொல்லில் முக்கியமான எழுத்துப் பிழை உள்ளது. சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் சொல்லிவிட்டார்.
நீக்குThank You Sir. Now I correct my role.
நீக்குNamakkal Agri Venkatachalam
வருகைக்கு நன்றி வேளாண் பெருந்தகை வெங்கடாசலம் அவர்களே!
நீக்குA Roller is available to play with the government and reduce inflation.
பதிலளிநீக்குமறு வருகைக்கும் யூகிக்க முயற்சித்ததற்கும் நன்றி திரு jk22384 அவர்களே! சரியான பதிலை திரு ராஜ் சந்திரசேகரன் ஏற்கனவே சொல்லிவிட்டார்.
நீக்குமிக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கிய வெகு அருமையான அலசல் பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
பதிலளிநீக்கு’மொழி பெயர்ப்பு’ என்ற சொற்களைக் கேட்டாலே எனக்கு என்னவோ நம் ’தீதும் நன்றும் பிறர் தர வரா’ வலைப்பதிவரும், மதுரை கவிஞருமான ‘யாதோ ரமணி’ அவர்கள் எழுதியதோர் பதிவுதான் உடனடியாக நினைவுக்கு வந்து மகிழ்வூட்டும்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://yaathoramani.blogspot.com/2011/09/blog-post_15.html
தலைப்பு:
’எங்கு தமிழ் எதில் தமிழ் ?’
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!கவிஞர் யாதோ ரமணி அவர்களின் பதிவையும் படித்தேன். மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளார்.
நீக்குமூல சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இல்லையென்றால். மூலத்தில் உள்ள சொற்களையே எழுத்துப்பெயர்ப்பு (Transliteration) செய்யலாம். இதுபற்றி எனது மூன்றாவது பதிவில் சொல்ல இருக்கிறேன்.
ஆனால் அதற்காக எல்லாவற்றையும் மூல சொற்களைக்கொண்டு எழுதினால் அது மொழிபெயர்ப்பாகாது. இது பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
வை கோ சார்..எழுதியபோது இது சிறப்படையவில்லை.தங்கள் நினைவில் இது இருக்கிறது என்பதாலேயே இது சிறப்படைகிறது.நன்றியுடனும் வாத்துக்களுடனும்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கவிஞர் திரு யாதோ ரமணி அவர்களே! தங்களின் பதிவை படித்தேன். அதில் உள்ள நகைச்சுவையையும் இரசித்தேன். தங்களின் பதிவு இன்னும் திரு வை.கோ அவர்களால் நினைத்துப் பார்க்கப்படுகிறது என்றால் அதனுடைய வீச்சு எந்த அளவில் உள்ளது என்பது தெரிகிறது. வாழ்த்துகள்!
நீக்குஅருமையான தொடர். கூகிளாரின் (Google) உதவியையும் ஓரளவு நாடலாம். முற்றிலும் நம்ப முடியாது என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன் ஐயா.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! உண்மைதான். கூகிளாரை முழுதும் நம்பமுடியாது. அனுபவசாலியான தங்களின் கருத்து ஏற்புடையதே. தேவைப்படின் பதிவில் நான் சொல்லியபடி நண்பர்களின் உதவியை நாடலாம்.
நீக்கு