திங்கள், 16 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 17


மேலும் சில நண்பர்கள் அந்த இடத்தில் வந்து குழுமியதும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் அலுக்காமல் பழைய நிகழ்வுகளை  பகிர்ந்துகொண்டும் சில மணித்துணிகளை செலவிட்டோம்.
நண்பர்களின் துணைவியர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில. 


பொள்ளாச்சி சந்திப்பை வெற்றிகரமாக நடத்திய நண்பர்களில் ஒருவரான மீனாட்சிசுந்தரம் மற்றும் நண்பர் முத்துகிருஷ்ணனுடன் நான்நண்பர்கள்  R.பாலசுப்பிரமணியனும் நாச்சியப்பனும்  நிகழ்ச்சியை  நடத்துவது பற்றி தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது எடுத்த படம்

மாலைநேர சிற்றுண்டியாக போண்டாவும், எங்களை சுறுசுறுப்பாக வைக்க தேநீர் மற்றும் காஃபியும் அந்த இடத்திற்கே வந்துவிட்டதால் எல்லோரும் அதை அருந்திவிட்டு நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு செல்லத் தொடங்கினோம்.


நண்பர்கள் R.பாலசுப்பிரமணியனும் மீனாட்சிசுந்தரமும்அந்த புல்வெளி அமைந்த இடத்திற்கு அருகேயே  இருந்த அந்த அரங்கின் வாயிலில் அந்த ஓய்வகத்தின் இரு பெண் ஊழியர்கள் கையில் பூ ,குங்குமம் மற்றும் அகல் விளக்குடன் எங்களை வரவேற்கக் காத்திருந்தனர்.உள்ளே நுழையும் அனைவருக்கும் பூ கொடுத்தும், பெண்களுக்கு குங்குமம் இட்டும் வரவேற்றனர்.அரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது எங்களது சந்திப்பு பற்றிய பதாகை மேடையில் பின்னால் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

சந்திப்பில் பங்கேற்க வந்திருந்த அனைவரும் இருக்கையில் அமர்ந்ததும், வழக்கம்போல் தொகுப்பாளர் (Master of ceremonies) பணியை சிறப்பாக செய்யும் நண்பர் நாச்சியப்பன் மேடையேறி அனைவரையும் வரவேற்றுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து இருப்பதை அறிவித்தார்.தொகுப்பாளர் நண்பர் நாச்சியப்பன்

அனைவரும் எழுந்து நின்று  மரியாதை செய்த பின் நண்பர் R.பாலசுப்பிரமணியன் வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.வரவேற்புரை நிகழ்த்தும் நண்பர் R.பாலசுப்பிரமணியன்

தனது உரையில் பொள்ளாச்சி சந்திப்பை வெற்றிகரமாக நடத்த நண்பர்கள் மீனாட்சி சுந்தரம் T.N.பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லப்பா எவ்வாறு உழைத்தார்கள் என்பதையும், நாங்கள் தங்கியிருந்த ஓய்வகத்தை உறுதி செய்வதற்கு எவ்வாறு நண்பர் செல்லப்பாவின்  அண்ணன் குடும்பத்தினர் உதவி செய்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார். 

பின்னர் நண்பர் நாச்சியப்பன் இம்முறையும் புதிர் போட்டி நிகழ்ச்சியை நடத்தினார். போட்டியின் விதிமுறை பற்றி சொல்லும்போது, அந்த போட்டி அனைவருக்கும் பொதுவானது அல்ல என்றும் வந்திருக்கும் சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிர் மட்டும் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றார்.  

ஒருவேளை அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்றால் எங்களுக்கு  பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், சரியான  பதிலை சொல்வோருக்கு ரூபாய் 100 பரிசாகத் தரப்படும் என அவர் அறிவித்தும், அரங்கம் பலத்த கைத்தட்டலால் அதிர்ந்தது. 

அரசியல், திரைப்படம், விளையாட்டு, பொது அறிவு போன்ற துறைகளிலிருந்து 12 வினாக்களை தொடுத்தார். 

அவை என்னென்ன என்பது அடுத்த பதிவில். 


தொடரும்14 கருத்துகள்:

 1. உங்களுடைய அருமையான எழுத்தின் மூலம் எங்களையும் உங்கள் சந்திப்பில் இணைத்துக் கொண்டு விட்டீர்கள். அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை வாசிக்க ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், அடுத்த பதிவை வாசிக்க இருப்பதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நடந்த நிகழ்வுகளை என் பாணியில் சொன்னதை,அருமையான எழுத்து என பாராட்டியதற்கு நன்றி !

   நீக்கு
 2. அழகிய நினைவுகள்...

  அடுத்த பதிவை ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், அடுத்த பதிவை வாசிக்க இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே

   நீக்கு
 3. கலந்து கொண்டவர்கள் பாட்டு அல்லது மற்றபோட்டி என்றுகலந்து கொள்ள வில்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே ! இந்த முறை போட்டியில்லாமல் நண்பர்களின் பேரக்குழந்தைகள் நடனமாடின. அதுபற்றி வரும் பதிவுகளில் எழுதுவேன்.

   நீக்கு
 4. படங்கள், குறிப்புகள் என்று எல்லாவற்றையும் சேகரித்து வைத்துக் கொண்டு எந்த விஷயத்தையும் விட்டு விடாமல் எழுதுவது ஒரு சவாலான விஷயம் தான். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே ! நினைவில் இருப்பதை எழுதுகிறேன். அவ்வளவே.

   நீக்கு
 5. நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது 12 வினாக்கள் என்ன என்பதை அறிய ஆவல்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், அந்த 12 கேள்விகள் பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜிஅவர்களே !

   நீக்கு
 6. அருமையான தொகுப்பு
  தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு யாழ்பாவாணன் அவர்களே!

   நீக்கு
 7. நிகழ்ச்சியை தகுந்த படங்களுடன் அழகாகவும் பொறுமையாகவும் வரிசையாகவும் காட்சிப்படுத்தி வர்ணித்து வருகிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு