நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தபோது போட்டியில் சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிர் மட்டும் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஒருவேளை அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்றால் எங்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், சரியான பதிலை சொல்வோருக்கு ரூபாய் 100 பரிசாகத் தரப்படும் என அவர் அறிவித்தார் என சொல்லியிருந்தேன்.
சிறுவர்கள் மற்றும் மகளிர் பதில் சொல்லாத ஏதேனும் சில கேள்விகளுக்கு நாமும் பதில் சொல்லி பரிசை பெறலாம் என நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.
நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டியை நடத்தியபோது எடுத்த படம்
அவர் எல்லா தரப்பினருக்கும் வாய்ப்பு தரும் விதமாக அரசியல், திரைப்படம், விளையாட்டு, பொது அறிவு போன்ற துறைகளிலிருந்து 12 வினாக்களை தொடுத்தார். அவர் கேட்ட வினாக்கள் என்னென்ன என்பவை கீழே.
1. கலைஞரின் இறுதி சடங்குகளை முன்னின்று கவனிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி யார்?
2. உலக கால்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை வென்ற குரோசியா நாட்டின் தலைநகரம் எது?
3. இராமாயணத்தில் சத்துருக்கனின் மனைவியின் பெயர் என்ன?
4. இவன் பையில் இருந்தால் யாரையும் தாங்கவிடமாட்டான். இவன் யார்?
5. இரயில் போக்குவரத்து இல்லாத வடகிழக்கு மாநிலம் எது?
6. நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது?
7. கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரிடம் கை தட்டிவிட்டு செல்வது ஏன்?
8. மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன?
9. கலைஞரின் கதை வசனத்தில் ஜெமினி கணேசன் நடித்த படம் என்ன?
10. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது?
11. காங்கேயநல்லூரில் பிறந்தவர்.அமிர்தவல்லியை மணந்தாலும் பிரம்மச்சாரியாக இருந்தவர். நிறைய உபதேசங்கள் செய்தவர் யார்?
12. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற பாடலைப் பாடியவர் யார்?
அவர் நடத்திய புதிர் போட்டியின் போது நண்பர் பிச்சைதுரை பேசியபோது எடுத்த படம்.
போட்டியில் முதல் கேள்விக்கான சரியான பதிலை சொல்லை பரிசை பெற்ற திருமதி T.N. பாலசுப்பிரமணியன் அவர்கள்.
பரிசு பெற்ற நண்பர் ஜெயராமன்
பரிசு பெற்ற திருமதி முருகானந்தம் அவர்கள்.
எட்டாவது கேள்விக்கு யாரும் பதில் சொல்லாததால் அதற்கான சரியான பதிலை நான் சொல்லி பரிசு பெற்றேன்.
கேள்விகளுக்கான பதில்களையும் அந்த முதற்கேள்வி எதற்காக கேட்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த பதிவில்
தொடரும்
உங்கள் நெஞ்சில் நிற்கும் நினைவுள் அபாரம்
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!
நீக்குபதில்களை அறிய ஆவலுடன் உள்ளேன்...
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குதிரு. நாச்சியப்பனுக்கு கலைஞர் என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கு. எனக்கும் தான்.
பதிலளிநீக்குகலைஞரைப் பற்றி பரவலாகத் தெரியாத விடைக்கான சில கேள்விகள்:
1. கோவையின் எந்தப் பகுதியில் வாடகை வீட்டில் கலைஞர் வாழ்ந்தார்?
2. கலைஞருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அளித்தது யார்?
3. கலைஞரின் இயற்பெயர் என்ன? அவர் பிறந்த ஊர் எது?
முதலாவது பதில் - ஆர்.எஸ்.புரம்
நீக்குஇரண்டாவது பதில் - எம்.ஆர்.ராதா
மூன்றாவது பதில் - தெட்சிணாமூர்த்தி
ஊர் - திருக்குவளை
தேவகோட்டையாரே! முதல் பதில் மட்டும் சிங்காநல்லூர்
நீக்குமற்ற பதில்கள் மிகச் சரி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நாச்சியப்பனுக்கு கலைஞரை பிடிக்குமா எனத்தெரியவில்லை. எனக்கு அவரது தமிழும், திரைப்பட உரையாடல்களும், சட்டசபையிலும் ஊடகவியலார்கள் மத்தியுலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் தரும் நகைச்சுவை கலந்த பதில்களும், அரசியல் சாணக்கியமும், அனைவரையும் அனுசரித்து செல்லும் குணமும் பிடிக்கும் என்பது உண்மை. நண்பர் நாச்சியப்பன் கேட்ட அந்த முதல் கேள்விக்கான காரணத்தை அடுத்த பதிவில் சொல்வேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் தர இருந்தேன். அதற்குள் நண்பர் திரு கில்லர்ஜி பதிலளித்துவிட்டார். அவர் சொன்ன ஒரு தவறான பதிலுக்கான சரியான பதிலையும் தாங்கள் சொல்லிவிட்டீர்கள்
நீக்குஅத்தனை கேள்விகளையும் மறக்காமல் குறித்துக்கொண்டு பட்டியலிட்டுள்ளது வியப்பளிக்கிறது. சூப்பர்
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபி.ஆர்.ஜோசப் அவர்களே! சில கேள்விகள் மறந்துவிட்டதால், நண்பர் நாச்சியப்பனிடம் கேட்டு குறித்துக்கொண்டேன்.
நீக்குஆச்சரியம் தான். மகாத்மா காந்தியின் தாயார் பெயர் உங்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது போயிற்றா?..
பதிலளிநீக்குதிரைப்பட நடிகர்களின் குடும்பம் பற்றி அறிந்த நம்மில் பலருக்கு தேசப்பிதா பற்றி தெரியவில்லை என்பது வியப்பான தகவல் தான்.
நீக்குபதிவு நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது.
பதிலளிநீக்குவிடைகள் அறிய ஆவலுடன் நானும்...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! கலைஞர் பற்றிய திரு ஜீவி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி! கேள்விக்கான பதில்களை அறிய காத்திருப்பதற்கு நன்றி!
நீக்குஸ்வாரஸ்யமான நினைவலைகள்.
பதிலளிநீக்குகேள்வி கேட்டு பதிலுக்குப் பரிசு தந்தது நல்ல விஷயம்.
தொடரட்டும் நினைவலைகள்...
வருகைக்கும், பாராட்டுக்கும் தங்களின் ஊக்குவிப்பிற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குபதிவு மிகவும் அருமை. பொது அறிவு வினாக்கள் பயனுள்ளவைகளாக உள்ளன.
பதிலளிநீக்குபரிசு பெற்ற தங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
தொடரட்டும்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்கு