சனி, 30 நவம்பர், 2019

தொடரும் சந்திப்பு 15பெட்டிகளை  எடுத்துக்கொண்டு வரவேற்பு அறை சென்றபோது, அங்கே அந்த ஓய்வக மேலாளர்  திரு செல்வம்  அவர்களுடன்  தஞ்சை நண்பர் R பாலசுப்பிரமணியனும் இருந்தார்.  வரும் நண்பர்களுக்கு அறை ஒதுக்குவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தார். 

நண்பர் பாலுவின் ஆலோசனைப்படி எனது PAN அட்டையின்  நகலை முன்பே திரு செல்வம் அவர்களுக்கு அனுப்பிவிட்டபடியால், எனக்கான  அறை ஒதுக்கப்படிருந்தது.  அறை சாவியையும் WIFI க்கான கடவு சொல்லையும் தந்த திரு செல்வம், ஓய்வ‌க ஊழியர் ஒருவரை எனது அறையை காண்பிக்க அனுப்பினார். 

வரவேற்பு கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ட காட்சிகள் கண்ணுக்கு இனியவைகளாக இருந்தன, வரிசையாய் இருந்த குடில்களும் அழகான நீச்சல் குளமும், அதற்கு அருகே இருந்த பெரிய குளமும் சுற்றி இருந்த தங்கும் விடுதிகளும் தென்னை மரங்களும் என்னை ஏதோ ஒரு புதிய உலகிற்கு அழைத்து சென்றது போல் இருந்தது.அவைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டே, அந்த ஓய்வக ஊழியரை பின் தொடர்ந்தேன். எனக்காக ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்து காட்டிவிட்டு ஏதேனும் தேவையெனில் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டார். 

உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறையும் அடுத்து படுக்கை அறையும் எல்லா வித  வசதிகளோடும் இருந்தன. இரண்டு அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரண்டு குளியல் அறைகளும் இருந்தன.  
அறைக்கு வெளியே இருந்த குளத்தை அமர்ந்து பார்த்து இரசிக்க ஒரு அமைப்பும் இருந்தது.அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு சுமார் 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியில் கூடவேண்டும் என நண்பர் பாலு  கேட்டுக் கொண்டதால் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்.

பின்னர் குளித்து உடை மாற்றிக்கொண்டு 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியை அடைந்தேன். 


தொடரும்

16 கருத்துகள்:

 1. இடம் மற்றும் அறை சூப்பர். ஒவ்வொரு பதிவுக்கும் இடையில் அதிக இடைவெளி உள்ளதால் முந்தைய பதிவில் என்ன படித்தேன் என்பது மறந்து போய்விடுகிறது. இடைவெளியை குறைப்பதுடன் பதிவுகளின் தீளத்தை அதிகரித்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! இடையிலே சில நாட்கள் உடல் நலம் சரியில்லாததாலும், சொந்த பணிகள் காரணமாகவும் தொடரை தொடர்ந்து எழுத இயலவில்லை. அதனால் பதிவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. படங்கள் அதிகம் இருந்ததால் பதிவின் நீளத்தைக் குறைக்கும்படி ஆகிவிட்டது.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. படங்கள் வெகு அருமையாக உள்ளது நண்பரே தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், படங்களை இரசித்தமைக்கும் நன்றி தேவகோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

   நீக்கு
 4. அனைத்துப்படங்களும் கண்களுக்குக் குளுமையாக உள்ளன. அனைத்து வசதிகளுடன் கூடிய இதுபோன்ற, நமக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்ததுமே ஓர் நிம்மதி ஏற்படும். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும், கருத்துக்கும் படங்களை இரசித்து பாராட்டியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. தங்கும் இடம் நன்றாக இருந்தால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் விவரிக்க இயலாது.

  பதிலளிநீக்கு
 6. எந்த இடம் என்பது நினைவுக்கு வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே.இந்த இடம் பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலையில் 10 கி.மீ தொலைவில் வலைக்கொம்பு நாகூர் என்ற இடத்தில் உள்ள Great Mount Coco Lagoon என்ற அழகிய ஓய்வகம். இங்குதான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், படித்து முடித்தபின் 6 ஆவது முறையாக சந்தித்தோம்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் அவர்களே!

   நீக்கு
 8. விடுதியின் அழகை பார்க்கும்போது சடுதியில் அங்கு சென்று வர வேண்டும் என்ற ஏக்கம் வருகிறது. My Web ஒரு தடவை "கிளிக்" குங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே! அவசியம் அன்கு சென்று வாருங்கள்.

   நீக்கு
 9. எழில் கொஞ்சும் அத்தனை புகைப்படங்களையும் என் கணினியில் சேமித்துக்கொண்டேன் .... தற்போது என் கணினியின் desktop wallpaper - ஐ இவைகள்தான் அலங்கரிக்கின்றன ... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழில் கொஞ்சும் புகைப்படங்களை தங்கள் கணினியில் சேமித்து கொண்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே!

   நீக்கு