திங்கள், 6 மே, 2019

தொடரும் சந்திப்பு 8

கோவை சரவணம்பட்டியில் நண்பர் திரு இந்திரஜித் அவர்களின் புதிதாக  கட்டியுள்ள வீட்டருகே  நடப்பட்டிருந்த மரச்செடிகளையும் பூச்செடிகளையும் சுற்றிப்பார்த்தபோது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒன்றுமே இல்லாமல் கரம்பாக இருந்த நிலத்தை  திருத்தி எல்லாவிதமான காய்கறி மற்றும் பூச்செடிகளையும் பழம் தரும் மரச்செடிகளையும் நட்டு அந்த ஏகாந்த இடத்தை மாயன் செய்த மாயம் போல் ஒரு அழகிய இடமாக மாற்றியுள்ள  நண்பர் திரு இந்திரஜித் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அவருடைய வீட்டை சுற்றியுள்ள இடம் இன்னும் சில திங்கள் கழித்து பார்க்கும்போது அது இன்னும் அழகாக கண்ணுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  

வீட்டை சுற்றியுள்ள செடிகளின் படங்கள்  கீழேமாலையில்  திருமதி இந்திரஜித் அவர்கள் தந்த சுவையான தேநீரை அருந்தியதும், அங்கிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மேலைச் சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து சென்றார் நண்பர் திரு இந்திரஜித். 

தொடரும்
  


8 கருத்துகள்:

 1. அருமை ஐயா... திரு இந்திரஜித் அவர்களுக்கு வாழ்த்துகள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்கல்து பாராட்டுகளை நண்பர் திரு இந்திர்ஜித்துக்கு தெரிவிக்கிறேன்.

   நீக்கு
 2. இயற்கையை காதலிப்பவர்களால்தான் இப்படிப்பட்ட சூழலில் வாழமுடியும். உங்களது நண்பர் திரு.இந்திரஜித் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக்சிக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! தங்களின் வாழ்த்துகளை நண்பர் திரு இந்திரஜித்துக்கு தெரிவிக்கிறேன்.

   நீக்கு
 3. 'பூக்களின் புலம்பல்' என்ற கன்னடக் கவிஞரின் கவிதைத் தொகுப்பொன்றைப் பற்றி என் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
  கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் செடிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர் தான் என் நினைவுக்கு வரும்.

  'பூக்கள் பறிப்பதற்கா?.. பார்த்து ரசிப்பதற்கா' என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பல நேரங்களில் திகைத்ததுண்டு.

  குவியல், குவியல்களாக பூச்சந்தைகளில் கொட்டிக் கிடக்கும் பூக்களை பார்க்கும் பொழுதெல்லாம் இவை பறிக்கப்பட்டே சந்தைக்கு வந்திருக்கின்றன என்ற உண்மை உறைக்கும்;

  'பூக்களைப் பறிக்காதீர்கள்.." என்ற வாசகத்தை ஒரு பூஞ்சோலையில் பார்த்து 'இது எவ்வளவு அசட்டுத்தனமான அறிவிப்பு என்று என் நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டிருக்கிறான்.

  "என்ன சொல்றே?.. மலர்ந்திருக்கற அந்த அழகைப் பார்.. அவை பூப்பது நாம் பார்த்து ரசிப்பதற்கில்லையா?" என்று அவனிடமே கேட்டேன்.

  "உன் ரசனைக்காக அவை பூத்து, வெயிலில் வாடி, வதங்கித் தொங்கணுமா?.. என்ன குரூர ரசனைடா உனக்கு" என்றான்.
  "ஒண்ணு தெரிஞ்சிக்கோ.. பூக்கள் பூப்பதின் பயன்பாடே அவற்றைப் பறித்து நாம் உபயோகப்படுத்துவதற்காகத் தாண்டா.. இதற்கு பின்புலமா அசைக்க முடியாத பொருளாதார உண்மையே இருக்கு..."
  என்றான்.

  அவனுக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாத யோசனையில் ஆழ்ந்தேன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பூத்திருக்கும் செடிகளை பார்த்ததும் தங்களுக்கு ஏற்பட்ட எண்ணங்களை பதிவிட்டமைக்கு நன்றி!பூக்கள் பூப்பது பற்றி தங்கள் நண்பரின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

   நீக்கு
 4. போரூரா? பேரூரா ஸார்?

  தோட்ட வேலை செய்வது உடல் நலத்திற்கும் மன நலத்திற்குமான மிகச் சிறந்த பொழுதுபோக்கு என்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தவறை சுட்டிக் காண்பித்தமைக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! பேரூர் என்பதே சரி. திருத்திவிட்டேன். தோட்ட வேலை பற்றி தாங்கள் சொன்ன கருத்து ஏற்புடையதே.

   நீக்கு