அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் வர இன்னும் இரண்டு திங்கள் இருக்கும் நிலையில் இளவேனில் பதிப்பகத்தார் அவரது நினைவாக ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். அந்த போட்டிக்கு புரவலராக சீஷெல்ஸ் இல் இருக்கும் என் அண்ணன் மகள் திருமதி மங்களநாயகி இருக்கிறார்.
அந்த போட்டியின் விவரங்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, எழுத்தை நேசித்து கடைசிவரை எழுத்து பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த, மறைந்தும் மறையாத அந்த எழுத்தாளரை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தமிழக அரசு என் அண்ணனின் ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ என்ற படைப்புக்கு சிறந்த நூல்களுக்கான பரிசை தற்போது அறிவித்திருப்பதாக, என் அண்ணனின் நண்பரும்,ஆசிரியரும், வலைப்பதிவருமான விருத்தாசலம் திரு இரத்தின புகழேந்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பரிசை வாங்க அவர் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும், அவரது படைப்பு அவரது காலத்திற்கு பின்னும் அவருக்கு பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே
முடிவில் கூறியது சிறிய மகிழ்ச்சி தந்தாலும், மனம் ஏனோ வருந்துகிறது ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உண்மையில் எங்களுக்கும் வருத்தம் கலந்த மகிழ்ச்சியே.
நீக்குதங்கள் சகோதரர் திரு சபாநாயகம் அவர்கள் ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ என்ற படைப்புக்கு சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதனது எழுத்துக்களின் அங்கிகாரத்தை அவர்கள் காண இயலாதது வருத்தம் அளிக்கிறது.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பாண்டியன் சுப்ரமணியன் அவர்களே! அவரது இந்த படைப்பிற்கு அவரது காலத்திற்கு பிறகு தான் பரிசு தரவேண்டும் என்று இருந்ததோ என்னவோ. அவர் இருக்கும்போது பரிசை அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீக்குமுழுமையாக சந்தோஷிக்க இயலவில்லை நண்பரே...
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குஆழ்ந்த இரங்கல். அவரது நினைவாக சிறுகதைப் போட்டி நடத்துவதன் மூலம் அவர் மீண்டும் பிறக்கிறார்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அண்டனூர் சுரா அவர்களே!
நீக்குஅண்ணார் மறைந்து ஓராண்டு முடியப்போகிறது என்பது மிகவும் வருத்தமான செய்திதான். :(
பதிலளிநீக்குஅவர் பெயரில் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தத்தீர்மானித்திருப்பது அவரை எல்லோராலும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வழிவகுக்கும் நல்லதொரு ஏற்பாடாகும்.
தமிழக அரசு தங்கள் அண்ணாரின் ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ என்ற படைப்புக்கு சிறந்த நூல்களுக்கான பரிசை தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியே. அவர் வாழ்ந்த காலத்திலேயே கிடைத்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். என்ன செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! ‘எது எப்போது நடக்கவேண்டுமோ அப்போது அது நடந்திருக்கிறது’ என்று நினைத்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.
நீக்கு‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ நூலைப் பற்றிய அறிமுகம் தரலாமே அய்யா :)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! அவசியம் அந்த நூல் பற்றி எழுதுவேன்.
நீக்குமகிழ்ச்சி
பதிலளிநீக்குவருகைக்கும், தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தமைக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!
நீக்குஉண்மை
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதங்கள் சகோதரருக்குச் செலுத்துகின்ற ஆகச்சிறந்த அஞ்சலி இந்தப் போட்டியும் நூலாக்கமும்.
வாழ்த்துக்கள் ஐயா.
நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
நீக்குதடம் பதித்த சிற்றிதழ்கள் நூலுக்கு விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள். அண்ணனின் நினைவாக நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!
நீக்குஉங்கள் அண்ணாவின் நினைவுச் சிறு கதைப் போட்டி வெற்றி பெறட்டும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குஓராண்டு அதற்குள்ளாகவா.... காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது.
பதிலளிநீக்குபோட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குஅமரர் வே. சபாநாயகம் அய்யாவைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். நிறாவாக அதைச் செய்ய வஏண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அவர் நினைவாக ஒரு சிறுகதைப் போட்டி என்பது
பதிலளிநீக்குஅவருக்கான பொருத்தமான அஞ்சலி.
அருமையான படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் தேர்வுக் குழுவிற்கு வாழ்த்துக்கள்!
வருகைக்கும், எனது அண்ணனை பற்றிய கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!
நீக்குகடைசிவரை எழுத்தைப் பற்றியே சிந்தித்த உங்கள் அண்ணனுக்கு மிகச் சிறந்த அஞ்சலி இதுவாகத் தான் இருக்க முடியும். அவரைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விழைகின்றேன். அவர் நூலுக்குக் காலந்தாழ்ந்து பரிசு கிடைத்திருப்பது மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. அவர் இருக்கும் போது கிடைத்திருந்தால், எவ்வளவு மகிழ்ந்திருப்பார்? அந்த நூல் பற்றிய அறிமுகம் தாருங்கள். நானும் வாங்கிப்படிக்கிறேன். சிறுகதைப் போட்டியிலும் கண்டிப்பாக பங்கேற்பேன். போட்டி விதிமுறைகள் பற்றித் தெரிய வேண்டும். பக்க அளவு, ஒருவர் எத்தனை கதைகள் அனுப்பலாம் போன்றவை... நன்றி சார்!
பதிலளிநீக்குவருகைக்கும், நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! தாங்கள் காலஞ்சென்ற என் அண்ணன் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கண்ணீர் அஞ்சலி என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த பதிவை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீக்குநீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். 2014 ஆம் ஆண்டுக்கான இந்த பரிசை இப்போது அறிவிக்கும் அரசு, காலாகாலத்தில் அவர் உயிரோடு இருக்கும்போதே அறிவித்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
தாங்கள் அவசியம் இந்த சிறுகதைப் போட்டியில் பங்கேற்கவேண்டும். தாங்கள் முதல் பரிசைப்பெற எனது வாழ்த்துகள்!
இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவரான ஆசிரியரும் எழுத்தாளருமான திரு இரத்தின புகழேந்தி அவர்கள் என் அண்ணனின் நண்பர். விருத்தாசலத்தில் வசிக்கும் அவரது கைப்பேசி எண். 9944852295.
அவரிடம் போட்டி பற்றி கேட்டபோது ஒருவர் ஒரு கதையை மட்டுமே போட்டிக்கு அனுப்பவேண்டும் என்றும்,அந்த கதை 15 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்றும் சொன்னார். கதையை மின்னஞ்சலில் அனுப்பவேண்டும் என்றும் சொன்னார். மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் அவரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
கதை அனுப்பவேண்டிய மின் முகவரி: iectvdm@gmail.com
என் அண்ணனின் படைப்பான ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ என்ற நூல் குறிஞ்சிப்பாடி மணியன் பதிப்பகம் திரு S.சம்பந்தம் அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது கைப்பேசி எண் 9443922276. அந்த நூல் பற்றி அறிமுகத்தை விரைவில் தருவேன்.
வாழ்த்துகளுடன் வே.நடனசபாபதி
மேலதிகத் தகவல்களுக்கான அந்த மொபைல் எண்ணும், இமெயில் முகவரியும் கூட நிழல் போலத் தெரிகிறது. தெளிவாக அவற்றைப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் தொடர்பு கொள்ளப் போகிறவர்களுக்கு செளகரியமாக இருக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், சகோதரி கலையரசி! ஜமாயுங்கள்.
வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி கைப்பேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மேலே தந்துள்ளேன்.
நீக்குநானும் தங்களோடு சேர்ந்து சகோதரி திருமதி கலையரசி அவர்கள் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!
மிக்க நன்றி சித்தப்பா. இலக்கியம், சிறுகதைகள் , எழுத்து என அப்பா தன் வாழ்நாள் முழுவதையும் விருப்பத்தோடும் , சிறு பிள்ளை போன்ற உற்சாகத்தோடும் கடைசி நிமிடம் வரை அனுபவித்ததை நினைத்துப்பார்க்கிறேன். அப்பா மறைந்ததை மனம் நம்ப மறுக்கிறது. நான. வெளிநாட்டில் இருப்பதால் அப்பா விருத்தாசலத்தில் இன்னும் இருப்பதாகவே எண்ணி மனம் அமைதி கொள்கிறேன். அப்பாவின் நினைவாக வருடம் தோரும் சிறுகதைப்போட்டி நடத்தி பரிசளிப்பதன் மூலம் அப்பாவிற்கு நான் சிறிதளவேனும் என்னுடைய அன்பை சமர்ப்பிக்க அவாவுறுகிறேன்.
பதிலளிநீக்கு‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.
நீக்குஇவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்’
என்ற கவிஞர் வாலி அவர்களின் வரிகள் நினைவிற்கு வருகின்றன அண்ணனை நினைக்கும்போது.
உன் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன் மங்களம். அண்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் அவரது மாணவச் செல்வங்களின் மனதிலும் இலக்கிய உலகிலும்.
அவரது நினைவாக ஆண்டுதோறும் சிறுகதைப்போட்டி நடத்தி, பரிசு வழங்குவதின் மூலம் அண்ணனின் பெயர் நிலைத்திருக்க நீ எடுத்துக்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!