அப்போது எடுத்த படங்கள் கீழே
இரண்டாம் ஆண்டில் அறைத்தோழர்களாக இருந்த நண்பர்கள் முத்துக்குமரனும் முருகையனும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது எடுத்த படம்.(மேலே)
நான் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது அருகில் நிற்பவர் நண்பர் சரவணன்.
அரங்கில் அனைவரும் அமர்ந்து அரங்கு நிறைந்து இருந்தபோது எடுத்த படம்.
எல்லோரும் அரங்கில் குழுமியவுடன் சிறிது நேரம் திரு S.K.வேதய்யன் குழுவினர் வீணை மற்றும் வாய்ப்பாட்டு மூலம் செவிக்கு விருந்தளித்தனர்.
அப்போது நண்பர் முத்துக்குமரன் எல்லோருக்கும் ‘தத்துவஞானி வேதாந்த மகரிஷி அவர்களின் மணிமொழிகள்’ மற்றும் ‘இன்பமாக வாழ’ என்ற இரு சிறு நூல்களை வழங்கினார். நண்பர் ஜெயராமன் அனைவருக்கும் Dabur நிறுவனத்தின் Babool பற்பசை ஒன்றை வழங்கினார்.
கூட்டம் ஆரம்பிப்பது பற்றி நண்பர் பாலு, நண்பர் நாசியப்பனிடம் பேசிக்கொண்டு இருக்க நண்பர் கோவிந்தசாமி அருகில் இருக்கிறார்.
நிகழ்ச்சி நிரல்படி காலை 9.30 மணிக்கு (கூட்டம் ஆரம்பிக்கு முன்) வகுப்பு நண்பர்கள் அனைவரும் நண்பர்களோடும், பின்னர் குடும்பத்தோடும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சந்திப்பில் கலந்துகொள்ள இரு நண்பர்கள் வந்துகொண்டு இருப்பதாகவும் அதனால் கூட்டம் முடிந்தபிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் எனவே கூட்டத்தை தொடங்கலாமென்றும் நண்பர் பாலு சொன்னதும் கூட்டம் சரியாக 10 மணிக்கு ஆரம்பமாயிற்று,
நிகழ்ச்சி தொகுப்பாளர் (Compere) பொறுப்பை நண்பர் நாச்சியப்பன் ஏற்று மேடையேறினார்.
நண்பர் நாச்சியப்பன்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து என நண்பர் நாச்சியப்பன் சொன்னதும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பம் ஆயிற்று.
தஞ்சையில் பொன் விழா சந்திப்பை வெற்றிகரமாக நடத்த உழைத்த,உதவிய நண்பர்கள்
(இடமிருந்து வலம். நண்பர்கள் நாகராஜன், பெத்தபெருமாள்,முருகானந்தம், கோவிந்தசாமி, பாலசுப்பிரமணியன் (பாலு), நாச்சியப்பன்)
இன்னொரு நண்பர் ஜனார்த்தனம் புகைப்படத்தில் இடம்பெறவில்லை.
‘நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்றபோது வழக்கமான நிகழ்வு நடந்தேறியது. அது என்ன என்பது அடுத்த பதிவில்.
தொடரும்
படங்களும் பதிவும் எல்லாமே சுவாரஸ்யமாக இந்தத்தொடர் போய்க்கொண்டு உள்ளது.
பதிலளிநீக்குநடந்தேறிய வழக்கமான நிகழ்வு பற்றி அறிய ஆவலுடன் .....
வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்குபுகைப்படஙகள் அனைத்தும் அழகு
பதிலளிநீக்குதொடர்கிறேன்
த.ம.1
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குஉங்கள் 'நடமாடும் தொலைபேசி' நிறைய நினைவலைகளைச் சுமந்து கொண்டிருக்கும் போலிருக்கு. அவ்வளவு காட்சிப் படங்கள் அதில்.
பதிலளிநீக்குஆர அமர நிகழ்வுகள் ஊர்ந்து போவதிலும் ஒரு நேர்த்தியான அழகு இருக்கத்தான் செய்கிறது. ஏதும் அவசரமில்லை. தொடரட்டும்.
'நீராரும் கடலுடுத்த' பாடலை நினைத்தாலே அந்த நீக்கப்பட்ட வரிகள் நீங்காது நினைவுக்கு வந்துவிடும்.
வாசிப்பைத் தொடர்கிறேன். நன்றி.
வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களைப் போன்றோர் ஊக்குவிப்பதால் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்ல இயலாவிடினும் சில நிகழ்வுகளை ஆவணப்படுத்த விரும்புகிறேன். அதனால் தான் பதிவு நீண்டுகொண்டே போகிறது.
நீக்குநினைவலைகள் தொடரட்டும் தொடர்கிறேன்
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குஅருமையான நிகழ்வு என்பது படங்களின் மூலம் தெரிகிறது ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குகாபி சுவை பதிவிற்குப் பிறகு, விட்டுப் போன பதிவுகளோடு இதனையும் சேர்த்து படித்தேன். படங்களில், எனக்குத் தெரிந்தவர்கள் (திருச்சி) யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் இல்லை. தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குசிறப்பான நினைவலைகள்..... உங்கள் சந்திப்பில் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்கு