சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அரங்க அறைக்கு செல்வதற்கு வந்த வழியே திரும்பும்போது. இடையில் இருந்த அறையில் பொன் விழா சந்திப்புக்கு வந்த நண்பர்கள் தங்களின் வருகையை பதிவு செய்துகொண்டு (Registration) இருப்பதைப் பார்த்து நானும் பதிவு செய்ய அங்கு சென்றேன்.
அங்கு நண்பர்கள் கோவிந்தசாமி, நாச்சியப்பன் மற்றும் பாலு ஆகியோர் அமர்ந்து கொண்டு வந்திருக்கும் நண்பர்களிடம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் பெற்றபின் ஒரு பெரிய பை ஒன்றை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
இடமிருந்து வலமாக: நண்பர்கள் அய்யம்பெருமாள்,கோவிந்தசாமி நாச்சியப்பன், பாலு (நடுவில் இருப்பவர்) பையை வாங்கிக்கொண்டு இருப்பவர் K.கோவிந்தராஜன் கையை உயர்த்திபடி நிற்பவர் முருகானந்தம், அருகில் இருப்பவர் பாலுவின் மருமகன் N.சிவகுமார்.
பையை வாங்கிக்கொண்டு இருப்பவர் நண்பர் கேசவன்.
நண்பர்கள் கோவிந்தசாமி நாச்சியப்பன் பாலு அவர்களின் முன்னால் நண்பர் T.N.பாலசுப்ரமணியன் கையொப்பமிட ஆயத்தமாய் இருக்கும்போது அவர் அருகே உஸ்மான் அமர்ந்திருக்க அருகில் நிற்பது நான். பின்னால் கேசவன் இருக்கிறார்.
நானும் எனது வருகையை கையொப்பமிட்டு பதிவு செய்து அந்த பையைப் பெற்றுக்கொண்டேன். அந்த பையில் என்ன இருக்கிறது என ஆவலோடு பார்த்தபோது,
1. வெப்பக்காப்புக் குடுவை (Thermos Flask)
2. காய்கறி பழங்களைத் துண்டாக்கும் கருவி (14 விதமான செயல்பாடுகள் கொண்டது) (Slicer)
3. நிகழ்ச்சி நிரல்
4. இரண்டு நாட்களிலும் (காலை மதியம் இரவு) வழங்க இருக்கின்ற உணவுவகைப் பட்டியல் (Menu)
5. பங்கேற்கும் நண்பர்கள் அளித்துள்ள நிதி பற்றிய விவரப் பட்டியல்
6. A Guide for Our Soul’s Infinite journey என்ற தலைப்பில் முதுமைப் பருவத்தில் உள்ளோர் நலமுடன் வாழ, போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசிகள் பற்றிய நண்பர் முருகையன் தந்துள்ள இருபக்க குறிப்பு
7.பேராசிரியர் மருத்துவர் மூ.ஆ.அப்பன் N.D அவர்கள் எழுதியுள்ள ‘இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்’ என்ற நூல்.
8.வகுப்புத்தோழர் திருநாவுக்கரசு தொகுத்து வெளியிட்டுள்ள சர்க்கரை நோயின் உண்மைகளும் அனுபவங்களும் என்ற நூல்.
9. ‘மாரடைப்பு நோய்களும் தடுப்பு முறைகளும்’ என்ற தலைப்பில் வகுப்புத்தோழர் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கியுள்ள 23 பக்கங்கள் கொண்ட சிறுநூல் (Booklet)
10.குறிப்பெடுத்துக்கொள்ள ஒரு சிறிய குறிப்பேடு மற்றும் எழுதுகோல்.
11.ஆவணங்களை எடுத்து செல்ல தெளிமையான (Transparent) கைப்பை
12.வகுப்பு நண்பர்களின் முகவரி மற்றும் அவர்கள் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய 60 பக்கங்கள் கொண்ட கையேடு.
ஆகியவைகள் இருந்தன.
முகவரிகள் உள்ள கையேட்டில் நண்பர்களின் துணைவியார்களோடு உள்ள படங்களுடன், நண்பர்களின் முகவரி, தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்கள், பணி ஓய்வு பெறும்போது வகித்த பதவியின் பெயர், தற்சமயம் செய்யும் பணி/சேவை பற்றிய விவரம், ஆகியவை தரப்பட்டிருந்தன.
அதோடு 1966 ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் எடுத்த புகைப்படம், அண்ணாமலை நகர் மற்றும் சேலத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இதற்கு முன்பு நடைபெற்ற நான்கு சந்திப்புகள் நடந்த இடங்கள், நாள், விழாக்குழுவினர் பற்றிய தகவல்களும் இருந்தன.
நண்பர் ப.சரவணன் எழுதியிருந்த ‘அண்ணாமலை அக்ரி அறுபத்தாறு’ என்ற கவிதையும் அதில் இடம் பெற்றிருந்தது.
இறுதி பக்கத்தில் இயற்கை எய்திவிட்ட எங்கள் வகுப்புத்தோழர்கள் 17 பேரின் பெயர்களும் இருந்ததை பார்த்ததும் மனதை ஏதோ செய்தது.
பையை எடுத்துக்கொண்டு அரங்கினுள் வந்து அமர்ந்தேன்.
என் அருகில் கையேட்டைப் பார்த்துக்கொண்டு இருப்பவர் நண்பர் வீராசாமி
அரங்கினுள் ஒருவர் பின் ஒருவராய் வந்து அமரத் தொடங்கினர்.
தொடரும்
அருமை தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
நீக்குவருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடருகிறேன்
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே!
நீக்குபையில் கண்ட புதையல் மனம் கவர்ந்தது. புதையல் பொருட்களைத் தெரிவு செய்தவர்கள் நிறைய யோசித்திருப்பார்கள். அவ்ர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசில வழக்கமானவை என்றாலும் புதையல் எண்கள்: 1, 2, 6,7,8 எல்லாம் புதுமையானவை. எண்: 5 தெளிமைக்கு எடுத்துக்காட்டு; இந்த மாதிரியான சந்திப்புக் கூட்டங்களை நடத்துவோருக்கு வழிகாட்டுதலும் கூட.
கையேடு அற்புதம். தயாரித்தவர்களை என்ன பாராட்டினாலும் த்கும். அதன் உபயோகம் பிரமிப்பு ஏற்படுத்துகிறது.
திரு. சரவணனின் கவிதைக்கான தலைப்பு பிரமாதம். நல்ல நண்ப்ர்களைக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வருகைக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் கூறியதுபோல் விழாக்குழுவினர் திட்டமிட்டு நிறைய யோசித்து பரிசுப்பொருட்களையும் முகவரி கையேட்டையும் வழங்கியிருக்கிறார்கள் உங்களுடைய பாராட்டுக்கு உரியவர்கள் தான் அவர்கள். ‘நல்ல நண்பர்களை கொண்டிருக்கிறேன்’ என்ற தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!
நீக்குஒரு நண்பர் சந்திப்பு விழா எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டு எங்கள் அம்பர்நாத் ஆலும்னி மீட்டின் நினைவைக் கொண்டு வந்தது ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் அதிகம் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்கு12-ம் அறிந்தேன்... இனி தொடர்கிறேன்...
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஅருமை
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!
நீக்குவியப்பளிக்கும் தகவல்கள். அருமையான படங்கள். பை நிறைய பயனுள்ள பொருட்கள். இனிமையான சந்திப்புகள். அசத்தலான பகிர்வு. அனைத்துக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇந்தத் தொடர் மேலும் தொடரட்டும். படித்து இன்புற மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்குநூலாக வெளியிடும் அளவு சிறப்பாக ஆற்றொழுக்க நிலையில் அமையும் பதிவுகள். தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குஎத்தனை திட்டமிட்டு இப்படிச் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்.... மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே!
நீக்குவணக்கம் ஐயா! நலமா?புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா! நலமே. தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
நீக்குவருகைக்கு நன்றி திரு சாமானியன் சாம் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகண்டிப்பாக தங்களின் பதிவை படித்து பின்னூட்டம் இடுவேன்.
'நன்றாக நடத்தப்பட்ட விழா. பரிசுப் பொருட்களும் நல்ல யோசனையுடன் தரப்பட்டவை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு நெல்லைத் தமிழன் அவர்களே!
நீக்குஅன்புள்ள நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு,
பதிலளிநீக்கு'சொல்வனம்' இணைய இதழின் இந்த இதழில் தங்கள் அன்புச் சகோதரரைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்கள் என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுட்டியைப் பார்க்க:
http://solvanam.com
அன்பு நண்பர் திரு ஜீவி அவர்கட்கு, தாங்கள் தந்துள்ள இணைப்பின் மூலம் ‘சொல்வனம்’ இணைய இதழை பார்த்தேன் தகவலுக்கு நன்றி!
நீக்குபொன்விழா சந்திப்பு!
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவலிங்கம் யாழ் பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!
நீக்கு