அந்த ஓடையில் சர்வ சாதாரணமாக இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அதைப்பார்க்கும்போது ஓடையின் ஆழம் வெறும் 2 அல்லது 2.5 அடிதான் இருக்கும் என தெரிந்துகொண்டேன்.
(மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்களை நான் எடுத்த படம் சரியாக வராததால் கூகிளார் உதவியை நாடி, மேலே உள்ள படங்களை வெளியிட்டுள்ளேன்.நன்றி கூகிளாருக்கு)
ஓடையின் இருபக்கத்திலும் அலையாத்திக்காடுகள் வரிசையாய் அணி வகுத்து நிற்க எங்களது அந்த நீர்வழிப் பயணம் முடிவில்லாத ஒன்று போல் போய்க்கொண்டு இருந்தது. எல்லோரும் எப்போது காயல் வரும் என ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தபோது, சுமார் 1 மணி 30 மணித்துளிகள் பயணித்த பின் அந்த காடுகளின் தொடர்ச்சி விட்டுப்போய் தூரத்தே பரந்த நீர்ப்பரப்பு இருப்பது கண்ணுக்கு புலப்பட்டது.
படகு காயலில் நுழையும் போது எடுத்த படங்கள்
காயலை நெருங்கிவிட்டோம் என அறிந்ததுமே அனைவரிடமும் ஒரு உற்சாகம் தொத்திக்கொண்டது, காயலின் உள்ளே நுழைந்ததுமே, சுமார் 1 கிலோமீட்டர் அகலமும் 5 அல்லது 6 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட அது, எனக்கு ஒரு பெரிய ஏரி போல் தெரிந்தது.
அதைப் பார்க்கும்போது, ஓடிஷா மாநிலத்தில் 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா காயல், பரந்த நீர்ப்பரப்பைக் கொண்டிருப்பதால் சில்கா ஏரி என்றே அழைக்கப்படுகிறது என்பது நினைவுக்கு வந்தது.
படகோட்டி படகை காயலின் நடுவே கொண்டுபோய் நிறுத்தி நாங்கள் அனைவரும் காயலின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்க்க வழி செய்தார். அங்கே எந்த பக்கம் திரும்பினும் ஒரே நீர் பரப்புதான். அந்த அழகே ஒரு பயத்தைக் கொடுத்தது. அந்த காயலின் நீளம் சுமார் 5 அல்லது 6 கிலோ மீட்டர் என்பதால் எந்த இடத்தில் அது பாக் நீரிணையோடு (Palk Strait) சேருகிறது என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் காயலை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற படகுகளும் வந்தன.
படகு காயலின் நடுவில் நிற்கும்போது எடுத்த படங்கள்
சுமார் 15 மணித்துளிகள் அங்கு இருந்த பிறகு படகோட்டி எங்களை, காயலை விளிம்பிலிருந்து பார்ப்பதற்காக, வனத்துறையினர் கட்டியுள்ள ஓய்வுக் கொட்டகை (Resting Shed) உள்ள இடத்திற்கு அழைத்து சென்றார். காயலின் உள்ளே நுழையும் முன் வலது மற்றும் இடது புறங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய தோணித்துறைகள் உள்ளன.
அங்கே இறங்கித்தான் அலையாத்திக் காடுகள் வழியே சென்று காயலை பார்க்கமுடியும் என்பதால் எங்களை படகோட்டி வலப்புறம் இருந்த தோணித்துறைக்கு சென்று படகை நிறுத்தினார். மற்ற படகுகளும் எங்கள் படகைத் தொடர்ந்த்து வந்து அங்கே நிலை கொண்டன.
தோணித்துறையில் படகை நிறுத்திய போது எடுத்த படம்.
அங்கே அந்த அலையாத்திக் காடுகள் வழியே வசதியாக நடந்து செல்ல மரத்தால் ஆன நடைபாதை (Wooden Pathway) அமைத்திருக்கிறார்கள். படகிலிருந்து இறங்கி அந்த நடை பாதை வழியே நடந்தோம்.
நடைபாதைகளின் அண்மைக் காட்சி
நடக்கும்போது அந்த அலையாத்திக் காடுகளின் மூச்சு வேர்களை (Pneumatophores) எடுத்த படம்
அழகான மர நடைபாதைகள்
அலையாத்திக்காடுகளினூடே அந்த மரத்தாலான நடைபாதைகளில் நடந்து செல்வது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அந்த மர நடைபாதை அங்காங்கே இரயில் சந்திப்புகளில் தண்டவாளங்கள் பிரிந்து செல்வது போல் பிரிந்து உள்ளே பல இடங்களுக்கு சென்று கொண்டு இருந்தன.
வழியிலும் ஓய்வெடுக்க கொட்டகைகள் கட்டப்பட்டிருந்தன. எல்லா பாதைகளிலும் சென்று பார்க்க ஆசை இருந்தாலும், நேரம் இல்லாததால் காயலைப் பார்க்க வசதியாக கட்டப்பட்டிருந்த ஓய்வுகொட்டகையை நோக்கி நடந்தோம்.
ஒய்வுகொட்டகைக்கு போகும் போது எடுத்த படம்
ஓய்வுக் கொட்டகையிலிருந்து காயலின் தோற்றம்.
ஓய்வுக் கொட்டகைக்கு சென்று, அலையாத்திக் காடுகளின் நடுவில் இருந்து அந்த காயலை பார்க்கும்போது அது இன்னும் முன்னைவிட அழகாய் பிரமாண்டமாய்த் தெரிந்தது. அங்கே உட்கார்ந்து சற்று ஓய்வு எடுக்க நினைத்தாலும் நேரப் பற்றாக்குறை இடம் கொடுக்கவில்லை. எனவே சற்று நேரம் நின்று, பார்த்து, இரசித்து படம் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.
தொடரும்
அருமை மிகவும் நன்று
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கோவிந்தராஜுஅருணாச்சலம் அவர்களே!
நீக்குஅருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குதிகிலான அனுபவம்தான். எனது நினைவில்,ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் வந்து போனார்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குஅழகான படங்களுடன் விவரிப்பு மிகவும் அருமை நண்பரே தொடர்கிறேன்....
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
பதிலளிநீக்குஒரு நிகழ்வை இத்தனை விரிவாக உங்களால்தான் சொல்ல முடியும் பாராட்டுகள்
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குமனித சஞ்சாரமே இல்லாத அமைதியான இந்த மாதிரி இடங்களைப் பார்ப்பது ,நல்ல ரசனையான அனுபவம்தான் :)
பதிலளிநீக்குத ம 3
வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!
நீக்குபதிவு மூலம் எங்களையும் அங்கே கூட்டிச் சென்றுள்ளீர் நண்பரே...!!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே!
நீக்குகண்டேன், காயலை..
பதிலளிநீக்குகாயலின் நிஜ தரிசனத்தை எங்கள் உள்ளங்களில் இருத்தி வைப்பதற்கான உங்கள் வர்ணனையும், படங்களும் அட்டகாசம். இதற்கு மேல் நான் ஏதாவது சொல்லப் போனால் (பார்த்த அறிவு இல்லாமல் படித்த அறிவு என்பதினால்) ஒரு மாற்று குறைந்து போய் தவறு செய்தவனாவேன்.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மேல் நாடு என்றால் (குறிப்பாக அமெரிக்கா என்றால்) இந்த காயல் பிரதேசத்தை உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக்கி அழகு பார்த்திருப்பார்கள். காசும் பார்த்திருப்பார்கள்.
பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிக்க வேண்டிய பல
இடங்கள் அங்கு தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன.
இங்கோ தனியாரும் இல்லை, அரசும் இல்லை என்ற ஒரு இரண்டும் கெட்டான் நிலை.
வருகைக்கும், பதிவை இரசித்து விரிவான கருத்தைத் தந்தமைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!
பதிலளிநீக்கு‘கண்டேன் சீதையை.’ என்று அனுமன் சொன்னது போல ‘கண்டேன் காயலை.’ என்று சொல்லி இரண்டே சொற்களில் பாராட்டிவிட்டீர்கள்! அதற்கு நன்றி! என்னால் முடிந்த அளவு, நான் பார்த்து இரசித்ததை விளக்கியுள்ளேன். இருப்பினும் வழக்கமாக நான் எடுத்தாளும் ‘Seeing is believing’ என்ற சொல்லாடலை இங்கும் சொல்லலாமென நினைக்கிறேன். நேரம் கிடைப்பின் நேரில் சென்று பார்த்து இன்புறுங்கள்.
நீங்கள் சொல்வது சரியே! நம் நாட்டில் கர்நாடகாவில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஜெருசப்பா அருவி எனப்படும் ஜோக் அருவி (Jog Falls), கேரளாவில் திரிச்சூர் அருகில் உள்ள அதிரப்பள்ளி அருவி, தமிழ் நாட்டில் உள்ள பிச்சாவரம் முத்துப்பேட்டை போன்ற எண்ணற்ற இடங்களை மய்ய அரசும் மாநில அரசுகளும் சரியான முறையில் சுற்றலாத் தலங்களாக மாற்றாததால் நாம் மக்கள் விடுமுறை நாட்களில் அயல் நாட்டிற்கு பறக்கின்றனர்.
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:
பதிலளிநீக்குபடங்களும் செய்திகளும் வழக்கம்போல் மிகவும் அருமை.
பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.
அன்புடன் VGK
வருகைக்கும், பாராட்டுக்கும்,நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்கு