ஞாயிறு, 5 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 15

மதியம் 3 மணிக்கு வெளியே செல்ல ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதால் விரைவில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று சற்று ஓய்வு எடுத்து வரலாம் என நினைத்தவர்கள் முதல் பந்தியில் சாப்பிட அமர்ந்தார்கள். நான் இரண்டாம் பந்தியில் சாப்பிடலாம் என நினைத்து காத்திருந்தேன்.
நண்பர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சாப்பிடும்போது எடுத்த படங்களில் சிலவற்றை கீழே தந்திருக்கிறேன்
உணவு பரிமாறியிருப்பதை மேற்பார்வையிடுகிறார் நண்பர் நாச்சியப்பன்.


இரண்டாம் பந்தியில் நண்பர்கள் நடராஜன்,சேதுராமன், T.N.பாலசுப்ரமணியன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோருடன் நான் சாப்பிட்டபோதுமதிய விருந்தில் ஒரு திருமண வீட்டு சாப்பாடு போலவே வடை பாயசத்தோடு உணவு பரிமாற ஏற்பாடு செய்து எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டனர் விழாக் குழுவினர்.

சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றபோது மணி 2.30 ஆகிவிட்டது. 3 மணிக்கு கிளம்பவேண்டும் என்பதால் ஓய்வெடுக்காமல் உடனே வெளியே செல்ல தயார்படுத்திக் கொண்டு நானும் என் மனைவியும் ஓட்டலுக்கு வெளியே வந்தோம். அங்கே எங்களை அழைத்து செல்ல தயாராக நின்றிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.

எல்லோரையும் ஒரே சமயத்தில் அழைத்து செல்லமுடியாதாகையால் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் இரண்டு குழுவாக பிரித்து அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் முதலில் வந்துவிட்டதால் எங்களை ஏற்றிக்கொண்டு பேருந்து நேரே தஞ்சை அரண்மனைக்கு அழைத்து சென்றது.

நாங்கள் பார்க்க இருக்கும் இடங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்க பேருந்தில் நண்பர் முருகானந்தம் எங்களுடன் வந்தார்.. அரண்மனையை அடைந்ததும் நாங்கள் அரண்மனையைப் பார்க்க அவருடன் உள்ளே நுழைந்தோம்.


தொடரும்


18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. குழுவினருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்த குழுவை பாராட்டியதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே

   நீக்கு
 3. விருந்து சாப்பாடு போட்டோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.

  முதல் இரண்டு போட்டோக்களில் சாப்பிடும் நபர்களில் ஒரே ஒருவர் மட்டும் ‘ஆறு வித்யாசங்கள்’ கண்டு பிடிப்பது போல ஒரே மாதிரியாகவே உள்ளார்.

  இருப்பினும் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் வெவ்வேறாக உள்ளனர்.

  கஷ்டப்பட்டு ஊன்றிப் பார்த்துக் கண்டுபிடித்தால் Slight ஆக ஆறு வித்யாசங்களும் உள்ளன. :)

  அதனால் இவர் அவர் அல்ல என்ற முடிவுக்கும் வர முடிகிறது.

  அறுசுவை விருந்தளித்துள்ள விழாக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

  மேலும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுகும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! முதல் புகைப்படத்தில் உள்ள நண்பர் கோகுல்தாஸ்.திண்டிவனத்தில் வசிக்கிறார். இரண்டாவது படத்தில் இருப்பவர் ஸ்ரீமுஷ்ணத்தில் வசிக்கும் நண்பர் ஜெயராமன். இருவருமே தீவிர வைணவர்கள். இருவரும் நெற்றியில் திருமண் இட்டிருப்பதால் இருவரும் ஒருவரே என நினைத்துவிட்டீர்கள் போலும். புகைப்படங்களை கூர்ந்து கவனித்தமைக்கு நன்றி!

   நீக்கு
 4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. நினைக்க நினைக்க இனிக்கும் நாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 6. புகைப்படங்கள் அருமை கடந்த பதிவில் சொன்ன புடவை விபரம் சொல்லவில்லையே....
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! சென்ற பதிவின் பின்னூட்டதில் சொன்னது போல் புடவை பற்றிய சஸ்பென்ஸ் என்ன என்பதை போட்டி நடந்தது பற்றி எழுதும்போது அறிந்துகொள்வீர்கள்.

   நீக்கு
 7. அடுத்து தஞ்சை அரண்மனையா?.. அட்டகாசம்!

  சரஸ்வதி மஹால் சுவடிகள் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்ப்பு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நாங்கள் சென்றபோது சரஸ்வதி மகால் நூலகத்தில் நடந்துகொண்டிருந்தபடியால் ஆற அமர எல்லாவற்றையும் பார்க்க இயலவில்லை. அது பற்றி பதிவில் எழுதுவேன்.

   நீக்கு
 8. சோழ வளநாடு சோறுடைத்து. உண்ட களைப்பு நீங்குவதற்குள் அரண்மனைக்குள் விஜயம். தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 9. சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பற்றிய விபரங்கள் அறிந்தேன். விழாக்குழுவினருக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், விழாக்குழுவினரை பாராட்டியதற்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே!

   நீக்கு