புதன், 28 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 27

எப்போதுமே குழுவாக பேருந்தில் பயணிக்கும்போது ஆரம்பத்தில் அனைவரிடமும் இருந்த உற்சாகம், கலகலப்பு நேரம் போகப்போக குறைந்து போய் திடீரென அமைதி குடிகொண்டுவிடும். பாதிபேர் உறங்கிவிடுவதுண்டு. மீதிபேர் அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் எங்களது பேருந்துபயணம் ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பு குறையாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தவர் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள்.
எங்களது பேருந்து தஞ்சை எல்லையைத் தாண்டியவுடனே அவர் எழுந்து நின்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து பேசத் தொடங்கி விட்டார். அவர் பேச ஆரம்பித்தபோது, 'நான் இப்போது கேட்கும் கேள்விகள் ஆண்களுக்கு' என்று சொல்லிவிட்டு அவர் கேட்ட முதல் கேள்வி ‘இங்குள்ள அண்ணாச்சிகளில் எத்தனை பேர் உயில் எழுதி இருக்கிறீர்கள்?’ என்பது தான்.

யாரிடமிருந்தும் பதில் வராததால் அவர் சொன்னார். 'இதுவரை நீங்கள் உயில் எழுதவில்லையென்றால் உடனே எழுதிவிடுங்கள். உங்களுக்குப் பிறகு உங்கள் மனைவியும் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க, இப்போதே உங்கள் மனைவிக்கு எவ்வளவு என்பதை உயிலில் எழுதிவிடுவது நலம்.

நமது பிள்ளைகள் தானே என இருந்துவிடாதீர்கள். நமது பிள்ளைகள் மேல் அன்பும் பாசமும் இருக்க வேண்டியதுதான். அவர்கள் உங்களுக்குப் பிறகு உங்கள் மனைவியை நிச்சயம் நன்றாக பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும் உங்கள் மனைவிக்கென நீங்கள் உங்களின் சொத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து அவர்கள் உங்களுக்குப் பின் நிம்மதியாக வாழ வழி செய்வது நல்லது.’ என்றார்.

அவருடைய பேச்சுக்கு அங்கு நிலவிய மௌனமே, மௌனம் சம்மதம் என்பது அனைவரின் பதிலாய் இருந்தது என்பதும், அவரது ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாய் புரிந்தது.

அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கையில் எனக்கு எங்க ஊர் ராஜா என்ற திரைப் படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய

‘பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே’

என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

அடுத்து அவர் கேட்டது, ‘உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவியிடம் உங்களிடம் உள்ள வங்கி கணக்கு மற்றும் சொத்து பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்?’ என்பதுதான்.

நாங்கள் பதில் சொல்லும் முன்னரே அவரே தொடர்ந்தார். ‘இதுவரை அவர்களிடம் உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் ஆயுள் காப்பீட்டு ஆகியவைகளின் விவரங்களை உடனே தெரிவியுங்கள். எப்படி வங்கியிலிருந்து பணம் எடுப்பது போடுவது போன்ற விஷயங்களையும் கற்றுக்கொடுங்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் இந்தியாவிலிருந்து கனடா சென்றபோது எனக்கு ஒன்றுமே தெரியாது. என் கணவர்தான் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தார். இன்றைக்கு நான் அவரது உதவியில்லாமலே வெளி வேலைகளை அனைத்தும் செய்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான்.’ என்று அவர் முடித்தபோது அனைவரும் அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டோம்.

பின்னர் அவர். ‘நீங்கள் அனைவரும் அடுத்த ஆண்டு கனடாவிற்கு வரவேண்டும். அங்கு சுற்றிப்பார்க்க எல்லா உதவியையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று எங்களுக்கு அன்பான அழைப்பை விடுத்தார். நண்பர் அய்யம்பெருமாளும் மாலையில் காயல் பயணம் முடிந்த பின் நடந்த கூட்டத்தில் எங்களையெல்லாம் கனடா வருமாறு அழைத்தார். அது பற்றி பின்னர் எழுதுவேன்.

இடையிடையே நண்பர் பழனியப்பன் முதல் நாள் மாலை நடந்த புடவை கட்டும் போட்டி பற்றி சொல்லி எங்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார். திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு, நேரம் போனதும், பேருந்து ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களைக் கடந்ததும், முத்துப்பேட்டையை அடைந்ததும் தெரியவில்லை.

முத்துப்பேட்டையை அடைந்ததும் அங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் தெற்குக்காடு என்ற இடத்தில் இருக்கும் தோணித்துறையை நோக்கி எங்களது பேருந்து சென்றது. அங்கு அழகான தென்னந்தோப்புக்கு நடுவே இருந்த வீட்டிற்கு முன் எங்கள் பேருந்து நின்றதும் அனைவரும் கீழே இறங்கினோம். அப்போது காலை மணி 10.நண்பர் நாகராஜனின் மகன் திரு சாமிநாதன் அவர்களின் நண்பரின் வீடு அது. அங்கே தான் எங்களுக்கு பிஸ்கட் மற்றும் தேநீருக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் நண்பர்கள்.

நண்பர்கள் தேநீர் அருந்தும்போது நான் எடுத்த படங்கள் கீழே.
நண்பர் அந்தோணி ராஜிடம் கையை நீட்டி பேசிக்கொண்டு இருப்பவர் காயல் பயணத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் நாகராஜன். அவர் அருகே இருப்பவர்கள் நண்பர்கள் சக்கரவர்த்தியும் பாலுவும். எதிரே நிற்பவர். திரு சாமிநாதனின் சகலர். அவர் பெயரும் சாமிநாதன் தான்.

பயணத்தின்போது எங்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது என்பதால் அனைவரும் தேநீர் அருந்தி முடிந்ததும் எல்லோருக்கும் தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதை எடுத்துக்கொண்டு அருகே இருந்த தோணித்துறையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.


தொடரும்

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு முஹம்மது அல்தாஃப் அவர்களே!

   நீக்கு
 2. திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்விகள் சிந்திக்க வைத்தன...

  அனைவரும் கனடா செல்லும் தீர்மானம் அறிய ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்விகளும், ஆலோசனைகளும் சிந்திக்கவைத்தது உண்மைதான். எங்கல்து கனடா பயணம் பற்றி பின்னர் எழுதுவேன்.

   நீக்கு
 3. உயில் - முக்கியம். நினைவுபடுத்திக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நெல்லைத் தமிழன் அவர்களே! இன்றைய காலகட்டத்தில் உயில் எழுதுவது முக்கியம் தான்.

   நீக்கு
 4. உயில் எழுதி வைப்பது மிகவும் முக்கியம்.

  அனைத்துவிதமான சேமிப்புகள் + வங்கிக்கணக்குகள் பற்றிய எல்லா விபரங்களும் ஒரே இடத்தில் பத்திரமாக இருப்பதும், அவைபற்றி மனைவி + நம்பிக்கைக்குரிய பொறுப்பான மகன்/மகள்(கள்) ஆகியோருக்குத் தெரிவித்து விடுவதும் மிகவும் நல்லது.

  இந்தப் பகிர்வு மிகவும் அருமை + பயனுள்ளதாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நாளை நடப்பதை யார் அறிவார். எனவே இன்றே செய்யவேண்டியதை செய்துவிடுதல் நல்லது. அதில் உயில் எழுதுவதும் ஒன்று.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வாருங்கள் (வரும் பதிவுகளில்) படகில் பயணிக்கலாம்!

   நீக்கு
 6. அடியேனின் வாழ்வையே புரட்டிப் போடப்போது ஆறுதல் தந்த அந்த பாடல் வரிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கு ஆறுதல் தந்த வரிகளைக் கொண்ட அருமையான பாடலைத் தந்த கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டுவோம்.

   நீக்கு
 7. #திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக் கெட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு#
  முதலில் திருத்துங்கள் அய்யா ,அருமையான ஆலோசனை கேட்டு, கெட்டு போக சான்ஸேஇல்லை :)
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தவறை சுட்டிக் காண்பித்தமைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! உண்மைதான். திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக்கேட்டு யாரும் கெட்டுப்போகமாட்டார்கள்.

   நீக்கு
 8. உயில் எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன் என் உயிலில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தின்பலனும் என் மனைவிக்கும் மக்களுக்கும் என்று எழுதி இருந்தது நினைவு செய்த பாவங்களும்புண்ணியங்களும் தான் சொத்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உயில் எழுதுவது பற்றிய பதிவின் இணைப்பைத் தாருங்கள்.அவசியம் படிப்பேன்.

   நீக்கு
 9. உயில் எழுதுவதும், பெண்களுக்கு நிதி குறித்து அறிந்துகொள்ள வைப்பதும் இந்தக் காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நடைமுறைக்கு தேவையான அறிவுரைகள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

   நீக்கு
 10. வங்கிக் கணக்குகளை கணவன்-- மனைவி, மனைவி--கணவன் என்று சேர்ந்த கணக்குகளாக வைத்துக் கொள்வது (Joint accounts) பல விஷயங்களில் அனுகூலங்களைத் தரக்கூடிய விஷயம். மனைவியும் சம்பாதிக்கக் கூடிய earning member-ஆக இருந்தால் எல்லா செலவுகளையும் இருவரும் பகிர்ந்து கொள்கிற மாதிரியான ஏற்பாடுகளுக்கு அனுகூலமாக இருக்கும். காசோலை
  வழங்குதல் மூலம் செலவுகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதற்கும் செளகரியம். இப்படிப் பல..

  பயண அனுபவங்களை சுவாரஸ்யமாகச் செல்லிக் கொண்டு வருகிறீர்கள். நடுவில் கொஞ்சம் விட்டுப் போனாலும் தொடர்ந்து வாசித்து வருவேன்.

  காயல் அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும், நன்றி திரு ஜீவி அவர்களே!

   நீக்கு
 11. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

   நீக்கு
 12. உயில் சமாச்சாரமும், அதற்கு அவர் சொன்ன காரணங்களும் என்னை யோசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! திருமதி அய்யம்பெருமாள் அவர்கள் உயில் எழுதவேண்டிய அவசியம் பற்றி சொன்னது அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

  பதிலளிநீக்கு
 14. திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்வியும் பதிலும் அருமை.
  பயண அனுபவம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

   நீக்கு