அப்போது நண்பர்கள் முருகையன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் எங்களை அறிமுகம் செய்தார்கள். நாங்களும் மேடை ஏறி, படிப்பை முடித்து வெளியே பணிக்கு சென்றபிறகு எங்கெங்கு பணியாற்றினோம் எப்போது பணி ஓய்வு பெற்றோம் என்பதை சொல்லி எங்களது குடும்பத்தையும் அறிமுகப்படுத்தினோம்.
அண்ணாமலை நகரில் 2011 ஆம் ஆண்டு நடந்த சந்திப்பில் எங்களை அகர வரிசையில் நண்பர்கள் கோவிந்தசாமியும் நாச்சியப்பனும் அழைக்க, நாங்கள் குடும்பத்தினரோடு மேடை ஏறி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
சேலத்தில் 2013 ஆம் ஆண்டு சந்தித்தபோது முதன் முதல் புதிதாய் வந்தவர்கள் மட்டும் மேடை ஏறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
தஞ்சை சந்திப்பில் திரும்பவும் அறிமுக நிகழ்ச்சியை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. இது பொன்விழா சந்திப்பு என்பதால் நண்பர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க விரும்பியதோடு மட்டுமல்லாமல் ,அந்த பொன்னாடையை ஒவ்வொரு நண்பரும் அவர்களுடைய துணைவியருக்கு போர்த்தி அவர்களையும் சிறப்பிக்கவேண்டும் என்பதால்தான் இந்த ஏற்பாட்டை தஞ்சை நண்பர்கள் செய்திருந்தனர்.
நாங்கள் படிக்கும்போது எங்கள் வகுப்பில் இருந்த 75 பேரும் ஒரே சமயத்தில் செய்முறை பயிற்சி (Practical Training) எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் எங்களை A Batch மற்றும் B Batch என இரண்டு குழுக்களாக பிரித்திருந்தார்கள்.
பொன்விழா சந்திப்பில் நண்பர்களை அறிமுகப்படுத்திய நண்பர் கோவிந்தசாமி A Batch ஐ சேர்ந்தவர். அவர் A Batch நண்பர்களை அறிமுகப்படுத்தியதும், B Batch நண்பர்களை அதே Batch ஐ சேர்ந்த நண்பர் நாச்சியப்பன் அறிமுகப்படுத்தியதும் தற்செயலாக அமைந்தது.
நண்பர் கோவிந்தசாமி அகரவரிசைப்படி நண்பர்களை அவர்களது துணைவியார்களுடன் மேடைக்கு அழைத்து நண்பர்கள் பற்றிய சிறிய அறிமுகத்தைத்தர, எங்களில் ஒருவர் அந்த நண்பருக்கு பொன்னாடை போர்த்த, அதை எடுத்து அந்த நண்பர் அவரது மனைவிக்கு போர்த்தியபோது மற்ற நண்பர்கள் செய்த ஆரவாரமும் கைத்தட்டலும் அரங்கத்தையே அதிர வைத்தது.
(மேடை ஏறிய அனைவரின் படங்களையும் வெளியிட விரும்பினாலும் பதிவின் நீளம் கருதி சில படங்களை மட்டும் வெளியிட்டிருக்கிறேன்.
நண்பர் அய்யம்பெருமாள் பொன்னாடையை அவரது துணைவியாருக்கு போர்த்துகிறார்
நண்பர் அய்யம்பெருமாள் பின்னர் பேசும்போது கனடாவில் இருந்த தாங்களும் பொன்விழா சந்திப்பில் பங்குபெற வசதியாக சந்திப்பின் தேதியை தள்ளி வைத்தமைக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
நண்பர் பாலு அவரது துணைவியாருக்கு பொன்னாடை போர்த்துகிறார்
நண்பர் பாலு, அவரது துணைவியார்,பெயரன் நடராஜன் மற்றும் மருமகன் திரு N.சிவக்குமார்
நண்பர் முருகானந்தம் நண்பர் கோவிந்தசாமிக்கு பொன்னாடை போர்த்துகிறார்.அருகில் திருமதி கோவிந்தசாமி
நண்பர் முருகானந்தம் நண்பர் ஜனார்த்தனத்திற்கு பொன்னாடை போர்த்துகிறார்.அருகில் திருமதி ஜனார்த்தனம்
குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த நண்பர் ஜெயராமன்
நண்பர் நாகராஜன் நண்பர் முகமது உஸ்மானுக்கு பொன்னாடை போர்த்தியபோது அருகில் திருமதி உஸ்மான்.
நண்பர் உஸ்மான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரும் முதன்முறையாக சந்திப்பில் கலந்துகொண்டது எங்கள் எல்லோரும் மகிழ்ச்சியே.
நண்பர் பெத்தபெருமாள் நண்பர் முருகானந்தத்திற்கு பொன்னாடை போர்த்தியபோது அருகில் திருமதி முருகானந்தம்.
A Batch நண்பர்களின் அறிமுகம் முடிந்ததும் B Batch நண்பர்களை அறிமுகம் செய்ய வந்தார். நண்பர் நாச்சியப்பன்
தொடரும்
குடும்பத்தாருடன் உள்ள, சில படங்களுடன் கூடிய இந்தப் பதிவினைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
பதிலளிநீக்கு>>>>>
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்கு//படித்து முடித்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதல் 2007 ஆம் ஆண்டு புதுவையில் நாங்கள் சந்தித்தபோது அனைவருடைய தோற்றமும் மாறியிருந்ததால் அநேகம் பேருக்கு நண்பர்களை அடையால் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. அதனால் எங்களுக்கு அப்போது அறிமுகம் தேவையாய் இருந்தது.//
பதிலளிநீக்குமிகவும் நியாயமான விஷயம்தான். அறிமுகம் என்பது ஒவ்வொரு வருடக் கூட்டங்களிலும் அவசியமானதொரு தேவைதான்.
புதிதாகக் கலந்துகொள்வோருக்கு புரியக்கூடியதாக இருக்கும்.
வயதானதால் மறதி ஏற்பட்டுள்ளவர்களுக்கு ஓர் நினைவூட்டலாகவும் இருக்கும்.
படித்தபின் எங்கெங்கெல்லாம் என்னென்ன பணி செய்தார்கள் என்ற விபரங்கள் அவரவர்கள் வாயிலாகக் கேட்கும்போது சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். வயதாக வயதாக தோற்றம் மாறுபடுவதால் அறிமுகம் தேவைதான். அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது சிலரை அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
நீக்குஇது பற்றி “முடி துறந்தவர்கள் சிலர், முடி வெளுத்தவர்கள் சிலர்,
என எல்லோரிடமும் முதுமை ஊஞ்சலாடியதால்
அநேகம் பேரை அடையாளமே கண்டுபிடிக்கமுடியவில்லை.” என்று அண்ணாமலை நகரில் நாங்கள் இரண்டாம் முறை சந்தித்தபோது நடந்தவைகளை பிரிந்தவர் கூடினால்....???????? 2 என்ற தலைப்பில் 12-09-2011 இல் எழுதியிருக்கிறேன்.
முதல் தடவை பார்த்தபின் தொடர்பில் இருப்பதால் அனைவரையும் அடயாளம் கண்டு கொள்வது எளிதாக இருந்தது.
மகிழ்வான நிறைவு. ஒவ்வொரு வருடமும் இது தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளியில் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.
நீக்குஅருமை....
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குசிறப்பான நிகழ்வு
பதிலளிநீக்குஎன்றென்றும் மனதில் தங்கும் நிகழ்வு ஐயா
மகிழ்ந்தேன்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!
நீக்குமகிழ்ச்சி ஐயா. தொடர்கிறேன்...
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குபோட்டோக்கள் அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குஅருமை
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!
நீக்குAmbarnath Alumni Meet இந்த ஆண்டு ஃபெப்ருவரி 18 -19 தேதிகளில் நாக்பூரில்நடக்க இருக்கிறது நூற்றுக்கணக்கானவ கலந்து கொள்வர் என்னால் போக இயலவில்லை அறிமுகம் செய்தாலும் தொடர்பில் இருந்தால்தான் நினைவில் நிற்கும் வாழ்த்துகள் மேன் மேலும் தொடர
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் நாக்பூர் சந்திப்பில் கலந்து கொள்ளலாமே.நீங்கள் சொல்வது சரியே. நண்பர்களோடு தொடர்பில் இருந்தால் தான் நேரில் பார்க்கும்போது அடையாளம் எளிதாக கண்டுகொள்ளமுடியும்.
நீக்குஞாபகம் வருதே! ஞாபகம் வருதேன்னு பாட்டு பாடலியாப்பா?! மலரும் நினைவுகள் அருமை
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! நாங்கள் ‘ஞாபகம் வருதே ‘ என்று பாடவில்லை. ஆனால் ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே!நண்பனே!’ என்று சொல்லிக்கொண்டோம்.
நீக்குஒரே பொன்னாடை; அதை கணவன்-- மனைவி இருவரும் பகிர்ந்து கொள்ள என்ற ஏற்பாடு என்பது ஒன்றே போதும்.
பதிலளிநீக்குஒரு சின்ன விஷயம் தான். அதில் தான் எவ்வளவு தாத்பரியத்தை அடக்கி வைத்துச் செய்கிறார்கள் என்று வியக்கிறேன்.
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு போர்த்தப்படும் பொன்னாடையை தங்களது துணைவியாருக்கு போர்த்தி சிறப்பித்து ‘மனவிக்கு மரியாதை’ தரவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை தஞ்சை நண்பர்கள் செய்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் தீவிரமாக ஆலோசித்து சிந்தித்து அவைகளை சந்திப்பில் சேர்த்திருக்கிறார்கள் என்பது உண்மை.
வெளியூர் பயணம் ஆகவே வர தாமதம்
பதிலளிநீக்குநிகழ்வுகளின் விவரிப்பு அருமை தொடர்கிறேன்
த.ம.2
நீக்குவருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!