வியாழன், 29 நவம்பர், 2012

BSNL ன் கைப்பேசி சேவையும்(?), அவர்களின் கையாலாகாத வாடிக்கையாளர் உதவி(!) மய்யமும்



அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் எப்பொழுதுமே 
மெதுவாகத்தான் செயல்படும் என்பது எல்லோரும் சொல்வது.
அது உண்மையும் கூட. மேலும் அவர்களிடம் உதவி நாடி 
சென்றால் நமக்கு பலன் கிடைக்காது என்று தெரிந்தும் நாம் 
வேறு வழியின்றி பல நேரங்களில் அவைகளையே சார்ந்து இருக்கவேண்டியிருக்கிறது என்பது தான் வேதனை.  

நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப்   
பார்க்கும் பொழுது கூடியவரையில் அரசு நிறுவனங்களை 
நாடாமல் இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

எனது மாமா மகன், அவரது கைப்பேசி இம்மாதம் 
மூன்றாம் தேதியிலிருந்து இணைப்பு கிடைக்காததால் 
பயனற்று இருப்பதாகவும் பலமுறை புகார் செய்தும் 
ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொன்னார். முடிந்தால் 
நீயும் புகார் செய்து பார். என்றார்.

உடனே நேற்று மாலை BSNL ன் Help Line எண்ணான  
94440 24365 க்கு எனது தொலைபேசி மூலம் தொடர்பு 
கொண்டேன். வழக்கம்போல் முன்பே பதிவு செய்யப்பட்ட 
குரல் ஒலித்தது. தமிழில் பேச எண் 1 ஐயும் 
ஆங்கிலமானால் எண் 2 ஐயும்,  இந்தியில் பதில் 
வேண்டுமென்றால் எண் 3 ஐயும் அழுத்துமாறு 
சொல்லப்பட்டது.

நான் தமிழில் பேச  எண் 1 ஐ தேர்ந்தெடுத்தேன். அங்கும் 
ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு எண் தரப்பட்டது. 
எனது உறவினரின் கைப்பேசி மாத இறுதியில் கட்டணம் 
கட்டும் சேவை (Post Paid Connection) ஆதலால் அதற்காக 
உள்ள 2 ஆம் எண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.

அங்கும் ஒவ்வொரு சேவையைப்பற்றி அறிய வெவ்வேறு 
எண் கொடுக்கப்பட்டது. கைப்பேசி 20 நாட்களாக  வேலை 
செய்யவில்லை என விவரமாக சொல்லவேண்டி இருந்ததால், 
சேவை மய்ய அதிகாரியை தொடர்பு கொள்ளும் எண்ணான 
9 ஐ தொடர்பு கொண்டேன்.

சிறிது நேரம் காக்க வைத்த பின் ஒருவர் தொடர்பில் வந்து 
பேசினார். என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக 
கூப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான் பழுதடைந்த கைப்பேசி 
எண்ணை சொல்லி, அது 3 ஆம் தேதியிலிருந்து செயலிழந்து 
இருக்கிறது அது குறித்து பலமுறை புகார் செய்தும் எந்த 
நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே கடிதம் 
மூலம் புகார் செய்ய விரும்புகிறேன்.
யாருக்கு கடிதம் ழுதவேண்டும்? என்றேன்.


அதற்கு அவர் ஒழுங்காக மாதக் கட்டணத்தை செலுத்தினீர்களா?’ 
என்றார். நான் மாதக்கட்டணம் Electronic Clearing Service மூலம் செலுத்துவதால் அந்த கேள்விக்கே இடமில்லை. என்றேன். 
உடனே அடுத்த கேள்வி கேட்டார் பாருங்கள். அதைக் 
கேட்டதும் எனக்கு சுருக்கென கோபம் வந்தது

எப்போதிலிருந்து உங்கள் Land Line வேலை செய்யவில்லை?’ 
என்பதுதான் அந்த கேள்வி. நான் ஆரம்பிக்கும் போதே 
கைப்பேசி எண்ணை சொல்லி, அது வேலை செய்யவில்லை 
என்றுதான் சொன்னேன். அப்படி இருந்தும் அந்த கேள்வியைக் 
கேட்டதும் எனக்கு கோபம் வராமல் என்ன செய்யும்.

அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னங்க, நான் 
ஆரம்பிக்கும்போதே Mobile Phone வேலை செய்யவில்லை 
என்றுதானே சொன்னேன். நீங்கள் என்னவென்றால் நான்   
சொன்னதை கவனிக்காமல் Landline பற்றி கேட்கிறீர்களே?’ 
என்றேன்.

அதற்கு அவர்  நீங்கள் Landline லிருந்து தானே பேசுகிறீர்களே 
அதனால் கேட்டேன். என்றார். (என்ன Logic பாருங்கள்!) 
அப்போதுதான் கோபத்தோடு சொன்னேன். Mobile Phone  
சரியில்லை என்றால் Landline மூலம் சொல்லக்கூடாதா? 
என்ன இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில்அளிக்கிறீர்கள்? வாடிக்கையாளர்கள் என்றால் உங்களுக்கென்ன  
கிள்ளுக்கீரையா? எங்களுக்கு உதவத்தானே நீங்கள் 
இருக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை. 
அதை புரிந்துகொள்ளுங்கள். சரி இனி உங்களோடு பேசி 
பயன் இல்லை. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து 
கொள்ளலாமா?’ என்றேன். அவ்வளவுதான்.அவர் 
இணைப்பைத் துண்டித்துவிட்டார்!  

இதுதான் அந்த சேவை மய்யம் செய்யும் சேவை 
எனப் புரிந்துகொண்டேன். எனக்கு ஏற்பட்ட ஐயம் இதுதான். 
இவ்வாறு  நல்ல சேவையைக் கொடுத்தால் 
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வேறு நிறுவனங்களை 
தேடி சென்றுவிடுவார்கள் என்பதுதான் அவர்களின் 
எண்ணமா? அல்லது அவர்களால் அந்த சேவையை 
செய்ய முடியவில்லையா?

காரணம் எதுவாயினும் இப்போதாவது  BSNL விழித்துக் 
கொள்ளாவிட்டால் தனியார் காட்டில் மழைதான். ஏனென்றால் 
இப்போது அதே எண்ணோடு வேறு தொலைத்தொடர்பு 
நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வசதி இருப்பதால்  
அநேகம் பேர் மாற வாய்ப்புண்டு. 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

28 கருத்துகள்:

  1. கூடியவரையில் அரசு நிறுவனங்களை
    நாடாமல் இருப்பதே மேல்.

    நிறைய பேர் இப்படித்தான் கூறுகிறார்கள். இதனால் தான் தனியார் நிறுவனங்கள் பல பெருகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  2. arasangam vellai ninachalla payam varum.oru marraige registration certificate vanga naan padda padu iruuka ,yapa yappapa.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சுந்தர்மீனாட்சி அவர்களே!

      நீக்கு
  3. அரசு ஊதியம் பெருபவர்கள் எப்போதுமே பொதுமக்களை கிள்ளுகீரையாகத்தானே என்னுகிறார்கள் இதில் என்ன சந்தேகம். அருகிள் உள்ள பி எஸ் என் எல் பொதுமேலாலரை அனுகலாம் ஆனால் நீங்கள் ஊழிர்கள் மேல் கூறும் எந்த புகாருக்கும் அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு புரட்சித் தமிழன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  4. சிலமுறை அப்படித்தான் நடக்கின்றது என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தொழிற்களம் குழு நண்பர்களே!

      நீக்கு
  5. நிறைய பேர்கள் வேறு தொலைத் தொடர்புக்கு மாறி விட்டார்கள்...
    tm3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. தனியார் காட்டில் மழைதான். \\ BSNL ஊழியர்கள், நமது அரசாங்கம், கடைசியா தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து BSNL ஐ ஒழிக்கப் பார்க்கிறாங்க, தெய்வாதீனமா அது யாருடைய தயவும் இல்லாம போராடுது. இன்னைக்கும் வருமானம் இல்லாத இடத்திலும் சேவை மனப்பான்மையில் செயல்படுவது BSNL மட்டுமே தனியார் காரன் அப்படிச் செய்ய மாட்டான் லாபம் வரும் இடத்தில் மட்டும் தான் பிசினஸ் பண்ணுவான். எத்தனை பிரச்சினிகள் வந்தாலும் மக்கள் தொடர்ந்து BSNL ஐ ஆதரிக்க வேண்டும். தனியார் ஒழிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு ஜெயதேவ் தாஸ் அவர்களே! நானும் தனியார் நிறுவனங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் அரசு நிறுவனத்தில் பணிபுரிவோர் வாடிக்கையாளரிடம் பாராமுகமாக இருப்பதாலேயே அவ்வாறு சொன்னேன். கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  7. சேவை மய்யம் செய்யும் ‘சேவை’ வருத்தப்படவைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  8. Dear Sir

    I had a problem with ICICI bank. They tried to swallow good amount from me. I spent quite a bit of money in phone calls to recover it. The manager was thinking that, I could not do anything. But I had e-mail proof for his treacherous work.

    I sent a complaint to banking ombudsman in Chennai, with proof. Then I was flooded with phone calls from ICICI. Finally everything went fine in favour of my side, within a week.

    Why I am telling is, there is an ombudsman for telecom as well. But you have to go with proof of everything. Whenever you talk to an officer, it is good to get their details at the beginning. They are obliged to give that. If they ask why, just tell them it is for record sake. If we don’t help ourselves, no one will.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்த மாதிரி ‘வரவேற்பு’ கிடைக்கும் என எதிர்பார்க்காததால், முதலிலேயே அவரது பெயரைக் கேட்கவில்லை. இப்போது ‘சூடு கண்ட பூனை’ போல் ஆகிவிட்டதால் இனி கவனமாக இருப்பேன். தங்களது ஆலோசனைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. Our experience with airtel is also bad. What is worse is after surrendering the connection, airtel was sending bills for sisx months which was not paid by the customer. Airtel sent a lawyer's notice. Atleast, you have a BSNL office in all places. For Airtel, the local ofices are agencies who do not respond at all. BSNL atleast does not cheat the customers. Do not think that I am siding BSNL. Experiences with Airtel are worse. Some public sector undertakings like banks are definitely better than the private sector.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு L.N. கோவிந்தராஜன் அவர்களே! எனக்குத் தெரியும் தனியார் நிறுவனங்கள் தரும் தொல்லைகள் பற்றி. அதனால் தான் சொன்னேன் ‘BSNL விழித்துக் கொள்ளாவிட்டால் தனியார் காட்டில் மழைதான்.’என்று. தங்களது மேலான கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  10. சிரமம்தான். ஆனாலும் கொஞ்சம் கிரீஸ் போட்டால் அரசு இயந்திரம் ஸ்மூத்தாக ஓடுமே? இன்று தனியார் நிறுவனங்களும் ஓன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் நிதரிசன உண்மை.

    என்ன, இவ்வளவு நீதி, நியாயம் பேசுகிறவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். வாழ்க்கையில் எவ்வளவோ காம்பிரமைஸ் பண்ணவேண்டியுள்ளது. கொள்கைக்காக உயிரைக்கொடுக்க நான் விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே! அரசு நிறுவனங்கள் சீராக நடக்க அரசு மட்டுமல்ல, அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களும் உண்மையாக உழைக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லையே என்பதே எனது ஆதங்கம். சில சமயம் நாம் விரும்பாவிட்டாலும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகவேண்டி இருப்பது உண்மைதான்.உங்கள் கருத்து சரியே!

    பதிலளிநீக்கு
  12. sir, this is my post in your blog..but i am a regular reader of your blog..regd. bsnl service, contact their customer care directly and complain, that will work..nowadays i think bsnl service improved a lot..i surely tell that bsnl is better that any other mobile provider..this is my personal experience..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி Elite Traader நண்பர் அவர்களே! ஆலோசனைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  13. Thanks you very much for highlighting the lackadaisical way of functioning of customer care division of BSNL; I am sure most of us must have borne the brunt of brusque behavior of helpline staff and must have felt helpless. More often than not the staff at help line do not pick up the phone and if you are lucky as you have rightly pointed out the customer is made to navigate endlessly to talk to some one. The so called customer service staff in my opinion are not trained properly and one may notice repeat parrot like some standard sentences. I have often wondered why not give the option to talk to customer service executive directly in the first instance itself instead of exhausting all options.
    Thanks once again for articulating the feelings of many.
    Vasudevan

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும், கருத்துக்கும், எனது ஆதங்கத்தை ஆதரித்தமைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. நானும் கடந்த வாரத்தில் 10 நாட்களாக இனைய இணைப்பின்றி நொந்து போனேன்.அதையும் பதிவாக்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  16. Indian government with the view of demolishing the public sector institutions is a fact that is also propagated by the BSNL communist oriented union.But the employees are also as the government not service based.Employees are the main reason for the bad service that can not be refused,is the fact they should remember.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கார்த்திகேயன் பசுபதி அவர்களே!

      நீக்கு