திங்கள், 3 டிசம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 18நான் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றியபோது 
அநேகம் பேருக்கு கல்விக்கடன் கிடைக்க உதவியிருக்கிறேன்.
பொறியியல் மருத்துவம் வேளாண்மை போன்ற 
தொழிற்கல்வி படிப்புகளில் சேர விரும்பிய மாணவர்களுக்கு 
தாமதப்படுத்தாமால், விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் 
கல்விக்கடனை ஒப்பளிப்பு (Sanction) செய்து அவர்களுக்கு உதவியிருக்கிறேன்.

அப்படி கல்விக்கடன்  பெற்றவர்களில்  ஒருவர் வேறொரு 
விதமாக என்னை ஆச்சரியப்படுத்தினார். அந்த இளைஞர் 
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பள்ளி இறுதி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் 
அவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் 
கிடைத்திருந்தது. அந்த படிப்பை தொடர கல்விக் கடன் கேட்டு 
எங்கள் வங்கிக்கு வந்தபோது அவருக்கு உடனே அந்த 
கடனைக் கொடுத்து உதவினேன்.

எங்கள் வங்கியின் விதிப்படி ஒவ்வொரு ஆண்டும் 
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் ஆண்டுத்தேர்வில் 
தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலைத் தரவேண்டும்.
அப்போதுதான் அடுத்த ஆண்டுக்கான கல்வித் தொகையை 
வங்கியில் தருவார்கள்.

அவரும் முதலாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 
பட்டியலை அனுப்பியிருந்தார். கல்லூரியிலேயே முதல் 
மாணவனாக வந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதை 
அறிந்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தேன்.
அவரது கல்லூரியின் பெயரில் கேட்பு காசோலை 
எடுத்து அனுப்பியிருந்தேன்.

இரண்டாம் ஆண்டு முடிந்ததும் ஒரு நாள் எனக்கு ஒரு 
வாழ்த்து அட்டை வந்தது. எந்த பண்டிகையும் இல்லாத 
இந்த நாளில் நமக்கு யார் வாழ்த்து அனுப்பியிருக்க 
முடியும் என எண்ணி அதை பிரித்துப் பார்த்தேன். அது 
நன்றி தெரிவிக்கும் அட்டை என்பதும் அதை அனுப்பியவர் 
அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்தான், என்பதை 
அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போது எதற்காக நன்றி தெரிவித்து வாழ்த்து 
அட்டை அனுப்பியிருக்கிறார் என்று குழம்பியபோது 
கூடவே அவர் இணைத்திருந்த கடிதம் எனது குழப்பத்தை 
போக்கியது.மேலும் அதே நேரத்தில் ஆச்சரியத்தையும் 
கொடுத்தது.

அந்த மாணவர் அந்த ஆண்டு  உடற் கூறியல் (Anatomy) 
பாடத்தேர்வில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் 
பெற்றிருப்பதாகவும், அந்த நற்செய்தியை பெற்றோருக்குக் கூட தெரிவிக்காமல் முதலில் வங்கிக்குத்தான் 
தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

அதற்கு அவர் தெரிவித்திருந்த காரணம் என்னை வியப்பில் 
ஆழ்த்தியது. எங்கள் வங்கியை அவர் ஒரு வளர்ப்புத் 
தந்தைக்கு (Foster Father) ஈடாக நினைத்ததால், எங்களுக்கு 
முதலில் தெரிவிப்பதாக எழுதிருந்ததை படித்ததும்

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.”

என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு 
எங்கள் வங்கி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் 
தெரிவித்தேன்.

கடன் பெற்று படித்துவிட்டு அதையே மறந்துவிடும் 
சிலரைப்போல் அல்லாமல், வங்கியை மறக்காமல் 
நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்த இந்த மாணவரும், நான் 
முன்பு சொன்னதுபோல் வயதுக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் 
தொடர்பில்லை என்பதை உணர்த்திய இன்னொரு  
இளம் வாடிக்கையாளர்.

எப்படி எல்லா வங்கி மேலாளர்களும் உடனே கல்விக் 
கடனைத் தந்து விடுவதில்லையோ அதுபோல கல்விக் கடன் 
பெற்ற எல்லா வாடிக்கையாளர்களும் கடனை திருப்பித் 
தருவதில்லை என்பதும் உண்மை.  

அப்படி ஒரு வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல், 
அது பற்றி கேட்டபோது கடன் பெற்றதையே மறந்துவிட்டேன். 
எனச் சொல்லி என்னை கோபப்பட வைத்தார்.


அது பற்றிய அனுபவத்தை  அறிய காத்திருங்கள்!தொடரும்

22 கருத்துகள்:

 1. ஆபத்து காலத்தில் பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பவன் மனிதனே இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!

   நீக்கு
 3. அவர் போன்றோரின் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போது துணை நிற்கும்.
  அடுத்த வேறுபாடான மனிதரைப் பற்றி அறியக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தொடர்வதற்கும் காத்திருப்பதற்கும் நன்றி!

   நீக்கு
 4. அருமையான பகிர்வு ஐயா, தனது தாய் தந்தைகளுக்கு பண நெருக்கடி வந்த சமயத்தில் தனது படிப்பிற்காக, பணம் கொடுத்து உதவியது இந்த வங்கிதான் என்று அவர் நன்றியுள்ளவராக இருந்துருக்கிறார். ம்ம்ம்ம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு செம்மலை ஆகாஷ் அவர்களே!

   நீக்கு
 5. // எப்படி எல்லா வங்கி மேலாளர்களும் உடனே கல்விக்
  கடனைத் தந்து விடுவதில்லையோ அதுபோல கல்விக் கடன்
  பெற்ற எல்லா வாடிக்கையாளர்களும் கடனை திருப்பித்
  தருவதில்லை என்பதும் உண்மை. //

  நல்ல அனுபவ மொழி என்பதோடு பொன்மொழியும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 6. அந்த மாணவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "நன்றி மறப்பது நன்றன்று" வள்ளுவரின் குறளே நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,அந்த மாணவரை பாராட்டியதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 7. True. Only a handful of students appear to remember the assistance rendered by the Banks if the figures of unrecoverable educational loans are any indication.Most of the students do not even bother to keep the Bank informed about developments. Even the Finance Ministry appears to be concerned about the burgeoning delinquency in this segment. This is one of the reasons why Banks seem to be hesitant to entertain Educational loans . In the process really deserving students are affected. Govt should do something about this. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! இந்த கல்விக்கடன் பற்றியும் அதைப் பெற மாணவர்கள் படும் அல்லல் பற்றியும் அதைக் கொடுத்த பிறகு திரும்பப் பெற வங்கிகள் படும் கஷ்டம் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். என்னைப் பொறுத்தவரை கல்விக்கடனை தேவையானவர்களுக்கு கொடுக்க வங்கிகள் தயங்கக் கூடாது.அதே போல கடன் பெற்றவர்கள் ஒழுங்காக திருப்பிக் கட்டவேண்டும். இது நடக்கும் என நினைக்கிறேன்.

   நீக்கு
 8. அந்த மாணவரை நினைத்தால் வியப்பாகத் தான் உள்ளது..,

  ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 9. Dear Sir

  In my view education loan should be from the government not from the bank. Here in Australia education loan is given by the government. And it should be repaid by the student after taking up a job. Every citizen must file their tax return as long as they have an income. So the government will automatically take the money from the tax return. Every child belongs to the government. I had an experience, we were warned by the authority that our child will be taken away to foster care for a negligible incident in Indian view. Here every child gets money for their living expenditure from the government based on their family income. A family with four children can live without working with that kind of money. Normally Indians don’t do that.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரி. ஆனால் இங்கோ அரசு எல்லாவற்றையும் விலையில்லாமால் (இனாம் என்று சொல்லக்கூடாதாம்!) தருவதால், மக்கள் அரசு தரும் எல்லாவற்றையும் ஒரு கொடை போலவே நினைக்கிறார்கள். எனவே கல்விக்கடனையும் அரசு கொடுத்தால் அதை திருப்பித் தரமாட்டார்கள் என்றுதான், வங்கி மூலம் தருகிறார்கள். அப்படியும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கினால் தர வேண்டாம் என்ற எண்ணத்தை அரசியல்வாதிகள் மக்கள் மனதில் உருவாக்கிவிட்டதால் கடனை திருப்பிக் கட்டுவதில்லை அநேகம் பேர். நான் மேலாளராக இருக்கும்போது சிலர் வந்து இந்திரா காந்தி கடன் (அதாவது திருப்பி செலுத்த தேவையில்லாத கடன்) கிடக்குமா என்று கேட்டிருக்கிறார்கள்! நீங்கள் சொல்லும் ஆஸ்திரேலிய அரசின் திட்டம் போன்ற திட்டம் இங்கும் வர பல ஆண்டுகள் ஆகலாம். வரவேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

   நீக்கு
 10. “திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
  கொள்வர் பயன்தெரி வார்.”

  என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு
  எங்கள் வங்கி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத்
  தெரிவித்தேன்.

  வியப்பளித்த மாணவருக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 11. அன்பின் நடன சபாபதி - வங்கிக் கடனை நினைவில் வைத்திருக்கும் இவர் ஆயிரத்தில் ஒருவர். வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதுடன் மட்டுமல்ல - தன் முன்னேற்றத்தினை தன் பெற்றோருக்கு அறிவிக்கும் முன்னரே - வங்கியுடன் பகிர்ந்து கொள்வதில் ஈடுபடும் இவர் பண்பு பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் நட்ன சபாபதி - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. இவரைப் போன்றவர்கள் இருப்பது மிகவும் குறைவு என்பதுதான் வருத்ததுக்குரியது.

   நீக்கு