ஞாயிறு, 9 டிசம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 19


வாடிக்கையாளர்கள் அனைவருமே வங்கியின் 
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் 
வங்கிகளில் பணிபுரிவோருக்கு வேலை சுலபமாக 
இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலை 
இருக்குமானால்  வங்கிகளில் பணிபுரிவோருக்கு, 
சவால்கள் இருக்க வாய்ப்பில்லை.

சவால்கள் இல்லாத எந்த பணியிலும் நிச்சயம் ஆர்வம்/ 
ஈடுபாடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  

அந்த வகையில் நான் சில வாடிக்கையாளர்களுக்கு நன்றி 
சொல்லத்தான்  வேண்டும்.ஏனெனில் அவர்கள் எனக்கு 
சவால்களை துணிவோடு எதிர்கொள்ளவும், அவைகளை வெற்றிக்கொள்ளும் திறனையும் பெற வாய்ப்பை 
உண்டாக்கினார்கள்.

நான் முதன்முதல் கிளை மேலாளராக 
பணியாற்றிய இடத்தில்,கல்விக்கடன் கொடுத்தபோது 
பெற்ற அனுபவமும், அந்த வாடிக்கையாளர்கள் 
நடந்துகொண்ட விதமும் கல்விக்கடன் பெற்றோர் 
அனைவரும் அப்படியே இருப்பார்கள் என 
என்னை நம்பவைத்தது.

ஆனால் எல்லோரும் அப்படி இருக்கமாட்டார்கள் என்பதை 
வேறொரு கிளையில் பணியாற்றிய போது 
தெரிந்துகொண்டேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்றதால் 
கேரளாவில் உள்ள ஒரு கிளைக்கு முதன்மை 
மேலாளராக மாற்றப்பட்டேன். 1960 ல் ஆரம்பிக்கப்பட்ட 
அந்த கிளைக்கு 33 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக
மலையாளம் தெரியாத ஒருவர் மேலாளராக வருவது 
நான் தான் என்பது ங்கு சென்றதும் தான் தெரிந்தது.


முதல் நாள் வங்கி நண்பர்களோடு பேசிக்கொண்டு ருந்தபோது, 
புதிய இடம் மற்றும் தெரியாத மொழி என்பதால் 
அனைவருடனும் நெருங்கிப் பழக முதலில் மலையாளத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக சொன்னேன்.


அதற்கு அவர்கள் கேரளாவுக்கு வரும் தமிழர்கள், இங்குள்ள பெரும்பான்மையோருக்கு தமிழ் பேசினால் புரிந்துகொள்ளமுடியும் என்பதாலும் பலர் தமிழிலேயே பேசமுடியும் 
என்பதாலும் மலையாளத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் 
காட்டுவதில்லை. மலையாளத்தைக் 
கற்றுக்கொள்ளாமலேயே இங்கு பணியாற்றிவிட்டு 
சென்றுவிடுவார்கள். என்றார்கள். 

அதாவது மறைமுகமாக, நானும் அவ்வாறுதான் இருப்பேன் 
என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

அதற்காகவாவது மலையாளத்தைக் கற்றுக்கொள்ள நினைத்து அன்றிலிருந்தே சுயமாகவே அந்த மொழியை 
கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மூன்றே மாதங்களில் 
மலையாளத்தில் எழுத,படிக்க,பேச கற்றுக்கொண்டேன்.

(அந்த அனுபவம் பற்றி பின் எழுதுவேன். தமிழ அரசின்

பணியில் இருந்திருந்தால் கிடைத்திராத, கன்னடம் 
கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தந்த தேசிய விதைக் 
கழகத்திற்கும், மலையாளம் மற்றும் இந்தி கற்றுக்கொள்ள 
வாய்ப்பை தந்த சிண்டிகேட் வங்கிக்கும் எனது நன்றியை 
இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.)

புதிய இடத்தில் வாடிகையாளர்கள் அனைவரையும் 
சந்திப்பதிலும் அங்குள்ள வணிக சூழ்நிலையை அறிந்து
கொள்ளவே மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.

பின்பு ஒரு நாள் வங்கியில் உள்ள வாராக் கடன்களின் 
பட்டியலை ஆய்வு செய்தபோது கல்விக் கடன் பெற்ற 
பயனாளி ஒருவர் பெயரும் அதில் இருந்தது. 

அந்தப் பயனாளி பொறியியல் படிக்க கடன் வாங்கியிருந்தார்.
அவர் படித்து முடித்து பல ஆண்டுகளாகியும் தவணைத்
தொகைகளையோ அல்லது வட்டித் தொகைகளையோ 
எதுவும் கட்டவில்லை என்று எனது மேலாளர் சொன்னார்.

அவர் இப்போது எங்கே இருக்கிறார்?’ எனக் கேட்டதற்கு 
உள்ளூரில்தான் இருப்பதாகவும், மிளகு ஏற்றுமதி வணிகத்தில் 
மிகவும் சிறப்பாக நிலையில் இருப்பதாகவும் சொன்னார்.

நான் உடனே அவரது தொலைபேசி எண்ணைப் பெற்று 
அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். என்னை 
அறிமுகம் செய்துகொண்டு அவரை சந்திக்க விரும்புவதாகவும் 
எப்போது வந்து எனது மேலாளரோடு வந்து பார்க்கலாம் 
எனக் கேட்டேன். அதற்கு அவர் என்ன விஷயமாக 
சந்திக்க விரும்புகிறீர்கள்?’ எனத் திருப்பிக் கேட்டார்.

அதற்கு நான் அதை நேரில் வந்து தெரிவிக்கிறேன்.எனது  
எப்போது வரட்டும்?’ எனக் கேட்டதற்கு அவர். வேண்டாம். 
நீங்கள் வரவேண்டாம். நானே அங்கு வருகிறேன். என்றார்.

சொன்னது போலவே அவர் அன்று மதியமே எங்கள் 
கிளைக்கு வந்தார்.


தொடரும்

18 கருத்துகள்:

  1. அனுபவம் சுவாரஸ்யமாக இருக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  2. “சஸ்பென்ஸ்” உடைபடும் அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  3. நீங்கள் எப்படி இந்தப் பிரச்சனைகு தீர்வு கண்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்அவர்களே!

      நீக்கு
  4. ம்ம்ம்ம் என்ன நடந்தது, தொடருங்கள் ஆவலாக உள்ளேன். நானும் எனது தொழிலுக்காக மலையாளம் எழுத படிக்க கற்றுக்கொண்டேன்.

    தோழருக்கு நேரம் கிடைக்கும்போது எனது வலைப்பதிவு பக்கமும் வந்து போகவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு செம்மலை ஆகாஷ் அவர்களே! தாங்களும் மலையாளம் கற்றுக்கொண்டது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. என்ன காரணம் சொன்னார் அவர்?எப்படிப்பேசினார்?காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி!

      நீக்கு
  6. நல்ல பதிவு உங்கள் பதிவில்.
    மிக்க நன்றி.


    Australia Tamil News

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு M.சண்முகம் அவர்களே!

      நீக்கு
  7. 3 மாதத்தில் ஒரு மொழியை கற்றுக்கொண்டிர்களா ? திறமைசாலிங்க நீங்க. அப்படி என்ன தான் சொல்லி இருப்பாங்க அவங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  8. அய்யா தங்களின் பதிவுகள் அத்தனையும் அனுபவச் சுவடுகள் ...நான் பதிவு உலகம் வந்த காலம் தொட்டு படித்து வருகிறேன் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு பரிதி முத்துராசன் அவர்களே!

      நீக்கு
  9. அன்பின் நடன சபாபதி - செய்யும் பணியில் சவால்கள் இருந்தால் தான் முழு ஈடுபாட்டுடன் பணி புரிய இயலும். சவாலக்ளைச் சந்தித்து வெற்றி பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அடுத்த தொட்ரினப் படிக்கிறேன் - ஆவல் அதிகம் ஆகிறது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு