ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, அந்த பொறியாளர் (கல்விக்கடன் பெற்ற
பயனாளி) ஒரு வாரத்திற்குள்
ஒரு கேட்புக் காசோலையையும்
(Demand Draft) அத்துடன் ஒரு கடிதத்தையும்
அனுப்பியிருந்தார்
என்றும் அவரது கடிதத்தைப்
படித்ததும் எனக்கு ஆச்சரியம்
ஏற்பட்டது என்றும்
சொல்லியிருந்தேன் அல்லவா. அதற்கு
காரணம் உண்டு.
பொதுவாக வங்கிகளில்
கடன் பெற்றவர்கள் (நான் இங்கே
குறிப்பிடுவது எல்லோரையும்
அல்ல) வங்கிக் கடனை ஒழுங்காக
குறிப்பிட்ட காலத்தில்
திருப்பிக் கட்டுவதில்லை. மற்றவைகளுக்கு
கொடுக்கும் முன்னுரிமையை
வங்கிக் கடனுக்குத் தருவதில்லை
என்பது மறுக்கமுடியாத, வருத்தப்படக்கூடிய உண்மை.
வங்கியின் வட்டி
விகிதம் குறைவு என்பதாலும், தவணைதவறிய கடன்களுக்கு வங்கிகள் அபராத வட்டி விதித்தாலும் அது வெளியே
வாங்கும் கடனுக்கான
வட்டியைவிட குறைவு என்பதாலும்
மெதுவாக சௌகரியப்படும்போது(!)
கட்டிவிடலாம் என
இருந்து விடுவதே அவ்வாறு
செய்வதன் காரணம்
என நினைக்கிறேன்.
மேலும் குறித்த நேரத்தில்
கடனை திருப்பி செலுத்தாவிட்டால்,
தனியார் போல, வங்கியில் உடனே மேல் நடவடிக்கை
எடுக்கமாட்டார்கள், அப்படி எடுத்தாலும் அது நீதி மன்றம்
மூலம் தான்
எடுப்பார்கள் என்பதால்,
அப்போது பார்த்துக்
கொள்ளலாம் என கடன்
பெற்றோரில் சிலர் இருந்து விடுவதும்
வழக்கம்.
ஆனால் இந்த
பயனாளியோ வழக்கத்துக்கு மாறாக நான்
தெரிவித்திருந்த
தொகையை விட மும்மடங்கு தொகையை அனுப்பியிருந்தார்.
மேலும் அவரது கடிதத்தில்
அந்த கடனை மூன்று
ஆண்டுகளுக்குள்
அடைக்கவேண்டுமானால்,மாதம்
எவ்வளவு கட்டவேண்டியிருக்கும் என்று கணக்கிட்டு வைக்குமாறும்,
ஒரு வாரத்தில்
ஊருக்கு வரும்போது நேரில் வந்து அதை
தெரிந்துகொண்டு போவதாகவும்
எழுதியிருந்தார்.
கடனை 72
மாதத்தவணையில் திருப்பி செலுத்தலாம் எனத்
தெரிவித்து
இருந்தும், அவர் அதை 36
மாதங்களில் திருப்பிக்கட்ட
விரும்புவதாக எழுதியிருந்தைப்
படித்ததும் எப்படி
ஆச்சரியம் வராமல்
இருக்கும்?
புதிதாய் வேலைக்கு
சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர்ந்தவுடன்
முதல் சம்பளத்தில்
பெற்றோருக்கு கொடுத்தது போக
(அநேகம் பேர் அவ்வாறுதான்
செய்கிறார்கள் என நினைக்கிறேன்.)
மீதியை தங்களுக்குத்
தேவையானவைகளை வாங்க செலவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சம்பளத்தின் பெரும்பகுதியை
முதலில்
வங்கிக்கு செலுத்த
நினைத்தது அவர் தான் என எண்ணுகிறேன்.
அதனால் எனக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது
உண்மை.
அவர் கேட்டிருந்தது
போல், மூன்று வருடங்களில்
அந்த கடனை
முடிக்க மாதம் எவ்வளவு
கட்டவேண்டும் எனக் கணக்கிட்டு
வைத்துவிட்டு, ஏன் அவ்வாறு விரைவாக கடனை முடிக்க
விரும்புகிறார் என
அறிய அவரது வருகைக்கு காத்திருந்தேன்.
சொன்னதுபோல், மறுவாரம் அவர் கிளைக்கு வந்தார். அவரது
கடிதமும் கேட்புக்
காசோலையும் கிடைத்ததை சொல்லி அவர்
முதல் சம்பளத்திலேயே
கடனை அடைக்கத் தொடங்கியதை
பாராட்டினேன்.
பின்பு ’வங்கியின் விதிப்படி கல்விக்கடனை 72
மாதத் தவணையில்
திருப்பி
செலுத்தலாம் என்று உள்ளபோது ஏன் 36 மாதங்களில்
அடைக்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டபோது அவர் சொன்ன
பதில் நான் எதிர்பாராத
ஒன்று.
தொடரும்
நாங்கள் எதிர் பார்க்கும் ஒன்று! விரைவில்...!
பதிலளிநீக்குவருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குஎதிர்பாராத பதிலைக் அறிய ஆவலாக இருக்கிறோம்..
பதிலளிநீக்குவருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்குநல்ல கேள்வி... அடுத்த வாரம் தெரிந்து கொள்கிறேன்...
பதிலளிநீக்குtm2
வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஎதிர் பாராத நல்ல பதிலையே தந்திருப்பார் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், நேர்மறை சிந்தனைக்கும் நன்றி!
நீக்குபதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் நாங்கள்
பதிலளிநீக்குவருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி ‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!
நீக்குஅந்த பதில் என்ன? ஆவலுடன் நாங்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும்,ஆவலுடன் காத்திருப்பதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்குஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்.தங்களின் அனுபவம் பிரருக்கு பாடமாக அமையும்.
பதிலளிநீக்குவருகைக்கும், \கருத்துக்கும் நன்றி திரு Arif.A அவர்களே!. தங்களின் ஆலோசனையை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.
நீக்குஎப்பவும் இப்படித்தான்,கொக்கி போட்டு நிறுத்தி விடுகிறீர்கள்.ஒரு நல்ல மனிதர் பற்றிய நல்ல பகிர்வு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.‘கொக்கி’ போடுவது உங்களைப்போன்ற நண்பர்களை பிடித்து வைத்துக்கொள்ளத்தான்!தயை செய்து பொறுத்துக்கொள்ளவும்.
நீக்குஇப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை ஒரு சிறுப்பு கூட்டத்திற்கு அழைத்து கௌரவப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் !!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ‘வசந்தமுல்லை’ ரவி அவர்களே! ஆண்டுதோறும் வங்கிகள் நடத்தும் ‘வாடிக்கையாளர் தின’த்தன்று இது போன்ற வாடிக்கையாளர்களை, வங்கிகள் கௌரவித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
பதிலளிநீக்குபதிலை அறிய ஆவலாக உள்ளோம்...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி ‘இரவின் புன்னகை’ திரு வெற்றிவேல் அவர்களே!
நீக்குஅன்பின் நடன சபாபதி - மனிதருள் மாணிக்கம் இவ்வாடிக்கையாளர் - இவர மாதிரி வங்கிக்கு ஒருவராவது கிடைத்தால் மேலாளர்கள் மனம் மகிழ்வர்- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவருகைக்கும் அந்த இளைஞரை பாராட்டியமைக்கும் நன்றி திரு சீனா அவர்களே!
பதிலளிநீக்கு