திங்கள், 11 ஜூலை, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 7

நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்

விவசாயி :(வங்கி மேலாளரிடம்) ஐயா,
கறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா?

வங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்
எப்படி கட்டுவீர்கள்?

விவசாயி : கயிற்றால்தான்.

வங்கி மேலாளர்: ?????


வாடிக்கையாளர்: (வங்கி மேலாளரிடம்) சார்!
சிறுதொழில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.
என்ன செய்யவேண்டும்?

வங்கி மேலாளர்: முதலில் பெரிய தொழில்
ஒன்று ஆரம்பியுங்கள். பிறகு ஆறு மாதம்
காத்திருங்கள். பிறகு தானே அது சிறிய
தொழிலாகிவிடும்
.
வாடிக்கையாளர்:??????


டாக்டர் (இதய நோயாளியிடம்): உங்கள்
இதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்
பொறுத்தவேண்டும். விபத்தில் இறந்த
சிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

நோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி
மேலாளருடைய இதயம் இருக்கிறதா? இருந்தால்
அதை பொருத்துங்கள்.

டாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்
இதயம் அத்தனை சிறப்பானதா? அதுதான்
வேண்டும் என்கிறீர்கள்
.
நோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.
அதுதான் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டிருக்காது.
அதனால்தான்
.
டாக்டர்: !!!!!!!!!


ஒரு வங்கி மேலாளர், முதன் முதல் ‘சூட்’
போட நினைத்தார். ஊரிலேயே இருந்த புகழ்
வாய்ந்த தையல் கலை நிபுணரிடம் சென்று
அளவுகளைக் கொடுத்து வந்தார்.

ஒரு வாரம் கழித்து சென்றபோது அவரது ‘சூட்’
தயாராக இருந்தது. அதை அணிந்து கொண்டு
கண்ணாடி முன் நின்று பார்த்தபோது அவருக்கு
அது மிகவும் பொருத்தமாகவும், கச்சிதமாகவும்
இருந்தது.

ஆனால் ஏதோ குறை இருப்பதாக அவருக்கு
தெரிந்தது. என்ன என்று பார்த்தால் அந்த
‘சூட்’ டில் கை வைக்க ‘பாக்கெட்’ டே
இல்லை என்பது.
தையல்கலை நிபுணரிடம் அது பற்றி
கேட்டபோது, அவர் “சார். நீங்கள் வங்கி
மேலாளர் என்றுதானே சொன்னீர்கள்”என்றார்.

“ஆமாம்” என்று வங்கி மேலாளர் சொன்னதும்,
தையற்காரர் சொன்னார். “எந்த வங்கி மேலாளர்
தனது ‘பாக்கெட்’டில் கை வைக்கிறார்? அதனால்
தான் வைக்கவில்லை”

வங்கி மேலாளர் வாயடைத்து நின்றார்.


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

14 கருத்துகள்:

 1. வருகைக்கும், நகைக்சுவை துணுக்குகளை இரசித்தமைக்கும்,
  நன்றி திரு சாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. நல்ல தொகுப்பு!சிரித்து மகிழ்ந்தேன்!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும், பதிவைப்படித்து சிரித்து மகிழ்ந்ததற்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. சுப்பர் ஜோக்..
  சிரித்தேன் நகைச்சுவையைப்பார்த்து....
  வாழ்த்துக்கள்...  can you come my said?

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும், பதிவைப்படித்து, சிரித்து மகிழ்ந்ததற்கும் நன்றி திரு விடிவெள்ளி அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும், கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
  பகிர்வுக்கு மிக்க நன்றி...எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும்
  பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன். வாருங்கள் உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும்
  அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திருமதி அம்பாளடியாள் அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும் ஊக்குவித்தமைக்கும் நன்றி திரு மாணிக்கவீரா அவர்களே!

   நீக்கு
 10. பதில்கள்
  1. வருகைக்கும், பதிவைப் படித்து இரசித்தமைக்கும் நன்றி திருமதி J.சாரதா அவர்களே!

   நீக்கு