பொருளாதார வசதியின்மையால், தகுதி உள்ள மாணவர்கள்
தொழிற்கல்வி உட்பட உயர் கல்வியை பெறமுடியாமல்
படிப்பை நிறுத்தக்கூடாது என்பதற்காக, மைய அரசு
மேலே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக்
கடனை
தரவேண்டும் என்று வங்கிகளுக்கு ஆணை இடுவதும்,
அப்படியும் கடன் தர மறுக்கின்ற அல்லது
தயங்குகின்ற
வங்கிகளின் கிளைகளுக்கு நீதிமன்றமே
தலையிட்டு
கல்விக் கடன் கொடுக்கும்படி ஆணையிடுவதும்
இப்போது
நடக்கின்ற மற்றும் நாம் பார்க்கின்ற ஒன்று.
ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப் படுவதற்கு
முன்பே,
அதாவது 19 ஜூலை 1969 க்கு முன்பே, மாணவர்களும்
பெற்றோர்களும் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள்
கல்லூரியில் படிப்பைத் தொடர கல்விக் கடன் திட்டத்தை
கொண்டு வந்தது எங்கள் வங்கிதான் என்பதை இந்த
நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படித்தவுடன்
எங்கள் வங்கி ஆரம்பித்தது. பின்னால் மற்ற
படிப்புகளுக்கும்
அதை விரிவுபடுத்தியபோது அதனால் பயன்
பெற்றோர் பலர்
என்பது பதிவு செய்யவேண்டிய செய்தி.
ஆனால் எங்கள் வங்கியில் அந்த
சிறப்புத்திட்டம் இருந்தும்
ஒரு சில கிளை மேலாளர்கள், கல்விக்கடன் கொடுக்க
தயங்கினர் என்பது உண்மை.
கல்விக் கடனைப் பெற்றவர்கள் படித்து
முடித்தபின் ஏழு
ஆண்டுகளில் தவணைத்தொகையாக திருப்பி செலுத்தலாம்
என்பது வங்கியின் விதி.
கல்விக்கடன் தரும் மேலாளர்கள், மூன்றிலிருந்து ஐந்து
வருடங்கள் தான் ஒரு கிளையில் இருப்பார்கள்.அவர்கள்
இருக்கும் வரை அவர்கள் தந்த அந்த கடன்களை
திருப்பி
செலுத்தும் காலம் வராது என்பதால் அவர்களால்
அந்த
கடன் பெற்றவர்கள் தவணை கட்டும் காலத்தில் ஒழுங்காக
தவணைத் தொகையை திருப்பிக் கட்டினார்களா
என்பதை Follow up
செய்யமுடியாது.
அடுத்து வரும் மேலாளர் அதை வசூலிப்பதில்
சுணக்கம்
காட்டினால்,கடன் கொடுத்த மேலாளர் ஓய்வு பெறும்போது
அந்த வாராக் கடன்களால் அவருக்கு சிக்கல்
ஏற்பட வாய்ப்பு
உண்டு என்பது தான் சிலர் கல்விக்கடன் தர
தயங்கிய
காரணம்.
நான் சக ஊழியர்களிடம் சொல்வதுண்டு. ‘கடன்
தேவைப்படுவோருக்கு உதவவே, இந்த பொறுப்பை வங்கி
நமக்கு தந்திருக்கிறது. எனவே பதவியில்
இருக்கும்போது
அதை நல்லபடியாக செய்வோம் என்று’.
கல்விக் கடன் பெற்றவர்கள் தாங்கள் உயர்
கல்வி பெற
உதவிய வங்கியை ஏமாற்றமாட்டார்கள் என்ற
நம்பிக்கை
எனக்கு இருந்ததால், வங்கிக் கிளையின்
மேலாளராக இருந்த
15 ஆண்டுகளில், நான் அநேகம் பேருக்கு கல்விக்கடன்
கொடுத்து அவர்கள் படிப்பைத் தொடர உதவியிருக்கிறேன்.
அப்படி எனது கிளையில் கல்விக் கடன் பெற்ற இரு
இளம் வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் நான் சந்தித்த
மற்ற வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட
அனுபவங்களிலிருந்து
மாறுபட்டது.
தொடரும்