திங்கள், 1 ஆகஸ்ட், 2011

முத்தான மூன்று! தொடர் பதிவு...

நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் விடுத்த அன்பு
அழைப்பை ஏற்று மூன்று பற்றிய தொடர் பதிவிட நானும்
களத்தில் இறங்குகிறேன்.

மூன்று என்றாலே நினைவுக்கு வருபவை,முத்தமிழும்,
முக்கனியும்,மூவுலகமும்,முக்காலமும்,மூவேந்தர்களும்
என சொல்லிக்கொண்டே போகலாம்.

மூன்றுக்கும் எனக்கும் கூட தொடர் உண்டு.எனது பிறந்த
தேதியான 12 ஐ கூட்டினால் வரும் எண் கூட 3 தான்.
எனவே எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத மூன்று பற்றி
இதோ.

1)எனக்குப் பிடித்த மூன்று
அ) நேரம் தவறாமை
ஆ) சொன்ன சொல்லை காப்பாற்றுவது
இ) வெளிப்படையாக பேசுவது

2) எனக்குப் பிடிக்காத மூன்று
அ) சாலை விதியை மதிக்காமல் செல்லும்
மாநகர (நரக) பேருந்துகள்
ஆ) பொது இடத்தில் சத்தம்போட்டு கைபேசியில்
பேசுவது
இ) வேலை செய்யும் நிறுவனத்திற்கு
விசுவாசமில்லாமல் இருப்பது

3) பிடித்த மூன்று எழுத்தாளர்கள்அ) கல்கி
ஆ) தேவன்
இ) சுஜாதா

4) பிடித்த மூன்று படைப்புகள்
அ) பொன்னியின் செல்வன்
ஆ) சிவகாமியின் சபதம்
இ) மிஸ்டர் வேதாந்தம்

5) பிடித்த மூன்று திரைப்படங்கள்
அ) பராசக்தி
ஆ) கப்பலோட்டிய தமிழன்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

6) அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்
அ) மன்னிக்க வேண்டுகிறேன்
ஆ) பனியில்லாத மார்கழியா
இ) கண்போன போக்கிலே கால் போகலாமா

7) பிடித்த மூன்று திரைப்பட கவிஞர்கள்
அ) கவிஞர் கண்ணதாசன்
ஆ) கவிஞர் வாலி
இ) கவிஞர் வைரமுத்து

8) இரசிக்கும் மூன்று
அ) டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
ஆ) செந்தில் கவுண்டமணி நகைச்சுவை
இ) வடிவேல் சிங்கமுத்து நகைச்சுவை

9) வலைப்பதிவில் விரும்பிப்படிப்பவை
அ) கணினி மென்பொருள் பற்றிய தகவல்கள்
ஆ) பின்னூட்டங்களும் பதில்களும்(குறிப்பாக
சென்னை பித்தனின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்)
இ) அறிவியல் பற்றிய தகவல்கள்

10) வலைப்பதிவில் பிடிக்காதது
அ) தனி நபர் தாக்குதல்
ஆ) தனி நபர் தாக்குதல்
இ) தனி நபர் தாக்குதல்

11) வலையுலகில் தடம் பதிக்க உதவியவர்கள்
அ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்
ஆ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்
இ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்

12) பிடித்த ஊர்கள்
அ) தெற்கு வடக்குப் புத்தூர் (பிறந்து, வளர்ந்த ஊர்)
ஆ) பொள்ளாச்சி
இ) தார்வார் (கர்நாடக மாநிலம்)

13) பிடித்த உணவு வகை
அ) முருங்கைக்காய் சாம்பார்
ஆ) வெந்தய புளிக் குழம்பு
இ) தேங்காய் துவையல்

எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காதவை அநேகம்
இருப்பினும் அவைகள் எல்லாவற்றையும் இங்கு
வெளியிட்டு படிப்போரை‘துன்புறுத்த’விரும்பவில்லை.
இனி நண்பர் திரு வாசுதேவன் அவர்களை
தொடர் பதிவிட அழைக்கிறேன்.

10 கருத்துகள்:

  1. எதார்த்தமாக இருந்தது தங்கள் பதிவு...

    தொடர்பதிவை தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. 1. இதனால் பல அனுபவங்கள் தங்களுக்கு கிடைத்திருக்குமே...
    2. மிக்க சரியானது.
    3, 4, 5 புதியவர்கள்....?
    6, 7. ஆகா.... ஆகா...
    8. அ- அப்படியா...
    9. ம்...
    10. ஆகா...
    11. நன்றிக்கடன்....
    12.அ- சரி, ஆ,இ- ????
    13. அ- ம்... நடக்கட்டும்... ஆ, இ- சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம்.
    இந்த வலைத்தளத்தில் நான் புதிதாக எதுவும் இடுகையிடப் போவதில்லை...
    அப்புறம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
    வாங்க... பாருங்க... பிடிச்சா பழகலாம்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு கவிதை வீதி சௌந்தர் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கவிமணி அவர்களே! நீங்கள் சொல்லியது போல் எதுவும் நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பு இல்லை. நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பதிவை இட்டேனே தவிர வேறெதையும் எதிர்பார்த்து அல்ல.

    பதிலளிநீக்கு
  6. // அப்புறம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
    வாங்க... பாருங்க... பிடிச்சா பழகலாம்.//

    நன்றி திரு கவிமணி அவர்களே! நீங்க சொன்னதுபோல ஆகட்டும்!!

    பதிலளிநீக்கு
  7. என் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்த மைக்கு நன்றி .உங்கள் பிறந்த எண் மூன்று என ஆரம்பித்து,மூன்று மூன்று முத்துக்களாகக் கோர்த்திருக்கிறீர்கள்! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. முத்தான முடிச்சுக்கள் அத்தனையும் அருமை...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விடிவெள்ளி அவர்களே!

    பதிலளிநீக்கு