சனி, 15 ஜூன், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 52மன்னிக்கவேண்டும். நான் வீட்டில் வங்கி கடன்கள் பற்றி பேசுவதில்லை.என்றதும், அந்த வாடிக்கையாளர், சார். அதற்காக நான் வரவில்லை.உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க வந்திருக்கிறேன்.  

ஆலோசனைதானே கேட்க வந்திருக்கிறார் என்பதால்  மேற்கொண்டு அவரை திருப்பி அனுப்பாமல் சரி சொல்லுங்கள்.என்ன வேண்டும்?’ என்றேன்.

அதற்கு அவர். சார் நான் நான்கு, ஐந்து சரக்குந்துகள் (Lorry) வைத்து வாடகைக்கு விட்டுக்கொண்டு  இருக்கிறேன். மேலும் பல சரக்குந்துகளை வாங்கி இந்த தொழிலை மேம்படுத்த எண்ணுகிறேன். அதற்கு உங்களைப் போன்றவர்கள் அருகில் இருந்து வழி நடத்தினால், தொழிலை இலாபகரமாகவும் ஒழுங்காகவும் நடத்த முடியும் என எண்ணுகிறேன். என்றார்.

நான் உடனே, சார். நான் இப்போது வங்கியில் நிரந்தர பணியாளனாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்த வேலையை விட்டுவிட்டு உங்கள் நிறுவனத்தில் வந்து பணி செய்ய விருப்பம் இல்லை. எனவே நீங்கள் வேறு யாரையாவது பணியில் அமர்த்திக்கொள்ளுங்கள். என்றேன்.

அதற்கு அவர், சார். எனக்குத் தெரியும் நீங்கள் வங்கியில் நல்ல பதவியில் இருப்பதால், அதை விட்டுவிட்டு வரமாட்டீர்கள் என்று. நீங்கள் வங்கியிலே பணிபுரியுங்கள். ஆனால் நான் கேட்பது நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகராகவும் இருங்கள் என்பதுதான்.என்றார்.  


நான் உடனே, சார். வங்கிப்பணியில் இருப்பதால், என்னால் உங்கள் நிறுவனத்திற்கு ஆலோசராக இருக்க முடியாது. நீங்கள் ஏன், இதே தொழிலில் அனுபவம் பெற்றவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டோ அல்லது அவர்களின் ஆலோசனை கேட்டோ தொழிலை விரிவுபடுத்தக்கூடாது?’ என்றேன்.

அதற்கு அவர், இல்லை சார். இதே தொழிலில் உள்ளவர்கள் என்னை போட்டியாளனாக நினைப்பார்களே தவிரே நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு உதவ முன் வரமாட்டார்கள். மேலும் எனக்கு இந்த கணக்கு வழக்குகளில் சரியான பரிச்சயம் இல்லாததால், நிறுவனத்தின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சரியாக கண்காணிக்க முடியவில்லை. அதற்குத்தான் உங்களைப்போல் வங்கியில் உள்ள மேலாளர்கள் அருகில் இருந்து நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எனக்கு ஆலோசனை சொன்னால் நிறுவனத்தை நன்றாக நடத்தமுடியும்  என நினைக்கிறேன். என்றார்.

சார். திரும்பவும் சொல்கிறேன். வங்கியில் வேலை பார்க்கும் நாங்கள், வேறு இடத்தில் வேலை பார்க்கவோ ஏன் ஆலோசகராக கூட இருக்கமுடியாது. வேண்டுமானால் ஒரு யோசனை சொல்கிறேன். நிதி சம்பந்தப்பட்ட விஷயம் உங்களுக்கு தெரியாது என சொல்வதால் நீங்கள் ஏன் ஒரு  பட்டயக் கணக்காளரின் (Chartered accountant) உதவியை நாடக்கூடாது?’ என்றேன்.

அதற்கு அவர், இல்லை.சார். கணக்காளர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்றாலும், உங்களைப்போன்ற வங்கி மேலாளர்கள் தான் வங்கியில் எப்படி தொழிலை விரிவு படுத்த கடன் பெறலாம் என்பதை சரியாக சொல்லி வழிகாட்ட முடியும் என நினைக்கிறேன். எனவே நீங்கள் எனக்கு உதவவேண்டும் சார். நீங்கள் எனது நிறுவனத்திற்கு வரவேண்டாம். நானே இங்கு வந்து  உங்கள் ஆலோசனை கேட்டு செல்கிறேன். என்றார்.

இது ஏதடா வம்பை விலை கொடுத்து வாங்கியது போல் இருக்கிறதே, இவரை நேற்று பார்க்காமல் இருந்திருக்கலாம் போல என நினைத்துக்கொண்டு, ‘மன்னிக்கவேண்டும்.வங்கிப் பணியில் இருக்கும்போது கடன் தருவதைத் தவிர வேறு எந்த விதத்திலும், நான் உங்கள் நிறுவனத்திற்கு உதவ முடியாது.

அப்படி தொழிலை விரிவுபடுத்த கடன் வேண்டுமென்றால் நாளை வங்கிக்கு வாருங்கள்.அங்கு பேசுவோம். அப்படி நான் தான் உங்களுக்கு ஆலோசனை சொல்லவேண்டும் என விரும்பினால், நீங்கள் 15 ஆண்டுகள் அதற்காக காத்திருக்கவேண்டும். ஏனென்றால் அப்போது தான் நான் பணி ஓய்வு பெற்று  சுதந்திரமாக இருப்பேன்.நீங்கள் போய் வாருங்கள். என சொன்னேன்.  அப்பவாவது அவர் அந்த இடத்தை விட்டு போய் விடுவார் என்ற நம்பிக்கையில்.

அப்போதும் அவர் அசராமல், சரி.சார். நீங்கள் பணி ஓய்வு பெற்று வரை காத்திருக்கிறேன். அதுவரை உங்கள் துணைவியார் எங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக சேரட்டும். ஏற்கனவே நானும் என் மனைவும் பங்குதாரர்களாக இருக்கிறோம். நீங்கள் வெளியே இருந்து உதவி செய்யுங்கள்.என்றார்.

எனக்கு அப்போதுதான் புரிந்தது அவர் எந்த நோக்கத்தோடு என்னிடம் வந்தார் என்று. நான் அதை ஒத்துக்கொண்டால், எனது மனைவி பங்குதாரராக இருப்பதால் வேறு வழியில்லாமல் முறையற்ற வழியில் (Out of the way) அந்த நிறுவனத்திற்கு கடன் வதிகளைத் தர நானும் உதவியாக இருப்பேன் என்று கணக்கு போட்டிருக்கிறார்.

இதுவும் ஒருவகையில் கையூட்டு தராமல் வேறு வழிமுறைகளை பயன் படுத்தி காரியத்தை சாதிக்க முயல்வதுதான் எனத் தெரிந்ததும் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, தயை செய்து போய் வாருங்கள். எனக்கு இது உடன்பாடு அல்ல. உண்மையிலேயே உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய எண்ணினால் நாளை காலை உரிய ஆவணங்களோடு கிளைக்கு வாருங்கள். வீட்டிற்கு இனி வரவேண்டாம். என கண்டிப்பாக கூறி அனுப்பிவிட்டேன்.

மறு நாள் மட்டுமல்ல நான் அந்த கிளையில் இருந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர் வங்கிக்கு கடன் கேட்டு வரவில்லை!

  


தொடரும்

22 கருத்துகள்:

 1. ஆகா... எப்படியெல்லாம் வலையை விரிக்கிறார்கள்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அது போன்ற மாய வலைகளில் நான் மாட்டிக்கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

   நீக்கு
 2. விடாக் கொண்டான் கொடாக் கொண்டானை சமாளித்தது பெரிய விஷயம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 3. It is difficult to control the major three urges, when someone tries to coax the other party using one of the three as a bait. Especially if one is under thirty years old. Based on science, our brain is fully matured only after thirty, for a normal person. Anyone can claim he is not corrupted. But whether he was put to a test to come clean may be a question. I can say you are fortunate to have a willpower to overcome such baits.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். சந்தர்ப்பங்கள் அமையாதவரை அனைவரும் நல்லவர்கள்தான் என்பார்கள். ஆனால் எனக்கு பலமுறை ‘அந்த’ சந்தர்ப்பங்கள் அமைந்தும், நான் நெறி பிறழாமல் இருந்தேன் என்பதில் எனக்கு பெருமையே!

   நீக்கு
 4. There are very subtle methods, to ‘give positive strokes’ and win over a person , tacitly…
  e.g.: if you go for walking, or if you play cards, or tennis or whatever, I gradually smuggle
  myself into your inner ‘orbit’ ..become your playmate and repeatedly loose myself and make
  you win; the laurels go to your head and you start looking for my company…
  in due course ,I melt you and make you do my bidding; ‘This’ is in fact the ‘game-play’
  involved in ‘corruption in high places’…
  Mawley.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி V.மாலி அவர்களே! மேலிடங்களில் இலஞ்சம் எவ்வாறு ஊடுருவுகிறது என்பதை அழகாய் விளக்கியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. வாடிக்கையாளர்களும் நானும் 51, 52
  நல்லவர்களுக்குத்தான் அடிக்கடி சோதனை வரும் என்பார்கள்.
  அந்த வகையில் உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே சிலபேர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! இதை சோதனை என்று சொல்லமாட்டேன். ஒரு பாடம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

   நீக்கு
 7. இதுவும் ஒருவகையில் கையூட்டு தராமல் வேறு வழிமுறைகளை பயன் படுத்தி காரியத்தை சாதிக்க முயல்வதுதான் எனத் தெரிந்ததும் //

  நேர்மையான சிந்தனையுடன்
  லஞ்சத்தைத்தவிர்த்தமைக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 8. உலகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் தான் என்பதை நீங்களும் கண்டிருப்பீர்கள் ஐயா.

   நீக்கு
 9. எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள்!
  இடம் தெரியாம வந்துட்டார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

   நீக்கு

 10. இந்த அங்கமும் வாசித்தேன மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கு நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 11. Sir pls do share your methodology of organising these posts. Its really wonderful. Your organised presentation makes it so easy for us to follow your trail of thoughts. I liked the episode where 100 rupees dropped off the bundle of papers. In such a situation I feel tht its important to be cautious about our reaction. Your post was vivid and gave a good idea about hw to b prepared for such situations...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! பதிவைத் தொடர்வதற்கும் நன்றி!

   நீக்கு
 12. ஜெகஜாலக் கில்லாடியா அந்தாளு. தப்பிச்சிங்க போங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வரதராஜலு.பூ அவர்களே!

   நீக்கு