வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவு






வலையுலகில் முதல் பதிவு வெளியிட்டபோது ஏற்பட்ட சந்தோச தருணங்களையோ அல்லது முதல் ஊக்கமளித்த கருத்துரையையோ அல்லது என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று எண்ணவைத்ததோ அது பற்றியோ எழுதவேண்டும் என்று நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னைப் பணித்திருக்கிறார்.  

அவரது வேண்டுகோளுக்கிணங்கி எழுதிய எனது தொடர் பதிவு இதோ.  

பணி நிறைவு பெற்று 2004 ஆகஸ்ட் திங்களில் சென்னைக்கு வந்து தங்கிய பிறகு இணையத்தில் உலாவர நேரம் கிடைத்ததால், அநேக பதிவர்களின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எனக்கு G mail இல் கணக்கு இல்லாததாலும். தமிழ் எழுத்துரு (Fonts) மூலம் தட்டச்சு செய்யத் தெரியாததாலும். அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமாக எனது கருத்துக்களை,ஆங்கிலத்திலேயே தந்ததால், முகவரி இல்லாத அனானி (Anonymous)யாகவே கருதப்பட்டேன்.

எனது முதல் பின்னூட்டத்தை வலைப்பதிவில் பார்த்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பெயரில்லா பின்னூட்டம் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

பின்பு தமிழ்மணத்தில் வந்த  வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது
ஒரு பதிவைத்தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததும் மார்ச் 2008 இல் பிளாகரில் ‘Ninaiththu Parkkiren' என்று தான் வலைப்பதிவை தொடங்கினேன்.

ஆனாலும் ஓராண்டு காலம் எப்படி தமிழில் எழுதுவது, அதை எப்படி பதிவேற்றுவது எனத் தெரியாததால் யாராவது வழி காட்டுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன்.  

பின்பு அதிரை வலைப்பதிவில் மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களின் சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? என்ற தொடரைப் படித்ததும், தைரியமாக வலைப்பதிவின் பெயரை  நினைத்துப்பார்க்கிறேன்  என்று மாற்றி 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள் சோதனைப்பதிவு-முன்னூட்டம் என்ற எனது முதல் பதிவை வெளியிட்டேன்.

மூன்று பதிவிட்டபின் தான் தமிழ் மணத்தில் இணைக்கமுடியும் என்பதால் உடனே எனது வலைப்பதிவை இணக்கவில்லை. அதனால் எனது வலைப்பதிவை பல பேர், ஏன் யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனது வலைப்பதில் பதிவிட்டபின், திரு மஸ்தூக்கா அவர்களுக்கு அவரது தொடரைப் படித்து நான் வலைப்பதிவு தொடங்கியது குறித்து நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தேன். அதில் எனது வலைப்பதிவின் முகவரியையும் கொடுத்திருந்தேன்.

எனது பதிவைப் படித்து, எனது வலைப்பதிவின் தலைப்பை வைத்தே அவர் எழுதிய அந்த முதல் பின்னூட்டம் என்னுள் ஒரு உற்சாகத்தையும் அளவற்ற மகிழ்ச்சியையும் தந்தது என்பது உண்மை. அவரது முதல் பாராட்டுதான் என்னை மேன்மேலும் எழுத முடியும் என்ற ஊக்கத்தையும் கொடுத்தது என்பதால், அதை  இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.அவருக்கு திரும்பவும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு மஸ்தூக்கா அவர்களின் பின்னூட்டம் இதோ.
//நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.
எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'
முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்'
தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அன்புடன்
மஸ்தூக்கா// 

பின் பதிவு எழுதத் துவங்கிய புதிதில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் திரு சென்னைபித்தன் அவர்கள் திரு க.வாசுதேவன்  அவர்கள் 
மற்றும் சிட்னி வாழ் பொறியாளர் திரு N.பக்கிரிசாமி அவர்கள் ஆகியோரது பின்னூட்டங்களும், எனது அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும் அவ்வப்போது எனது பதிவைப் படித்து மின்னஞ்சல்  மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் கொடுத்த ஊக்கமும் எனக்கு உரமாக இருந்தது உண்மை. 


இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் முதல் மார்ச் 10 ஆம் நாள் வரை என்னை வலைச்சரம் ஆசிரியாக இருக்கப் பணித்த திரு சீனா அவர்களுக்கு நான் அவசியம் நன்றி சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் தந்த அந்த பணியை செம்மையாய் செய்ய நான் அதிகம் உழைக்கவேண்டியிருந்தது.

அவர் அந்த பணியைத் தந்திராதிருந்தால் எனக்கு பல புதிய அறிய தகவல்கள் கிட்டியிருக்காது.மேலும் பல பதிவர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருக்காது. 

அனேகம் பேர் எனது பணியை பாராட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே தர இயலாது என்பதால் இருவர் தந்த கருத்துக்களை மட்டும் இங்கே தருகிறேன். 

சிரித்துவாழவேண்டும் என்று விடைபெறும் நாளான  ஏழாம் நாள் வலைச்சரத்தில் நான் தந்த பதிவுக்கு திருமதி சசிகலா அவர்கள் தந்த பின்னூட்டம் எனது வலைச்சர ஆசிரியர் பணிக்குத் தந்த பாராட்டு சான்றிதழாகவே எண்ணுகிறேன்.  அது கீழே. 

//தகுந்த பாடலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தங்கள் ஒரு வார ஆசிரியர் பணி சிறப்பு மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்தாலும் மகிழ்வோம். நன்றிங்க.//

"இந்த ஏழு நாட்களில் மக்கள் அறியவேண்டிய அரிய செய்திகளை எடுத்துச் சொன்னதற்கு தமிழ் உலகம் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லவேண்டும்.’’ என்று சுப்பு தாத்தா என்கிற திரு சூர்யசிவா அவர்கள் என் மேல் உள்ள அன்பால் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், அவரது பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்தியது நிஜம்.

என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று நினைக்க வைத்ததென்றால்  40 பதிவுகளாக  எழுதிய Boss கள்பல விதம் என்ற தொடர்தான். அதுதான் என்னை பல பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பேன். 

கடைசியாக இந்த தொடர் பதிவை எழுதச் சொன்ன நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! அவர் சொன்னது போல் இந்த தொடரைத் தொடர ஆறு அன்பர்களை அழைக்க நினைத்தேன்.

ஆனால் இளைஞர்களுக்காக ஒரு வலைப் பதிவை நடத்தும் இளைஞர் திரு குட்டன், ஆறு பேரென்ன நூறு பேருக்கு சமம் என்பதால் அவரையே இந்த தொடர் பதிவை தொடர அழைக்கிறேன்!

44 கருத்துகள்:

  1. சுவையான நினைவுகள்! அருமையாக நினைத்து பார்த்து நினைவுகூர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  2. நினைத்துப்பார்க்கிறேன்... என்ற தங்கள் தள தலைப்பை வைத்து மஸ்தூக்கா எழுதிய வரிகள்
    நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.
    எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'
    முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்'
    தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
    தாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
    தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
    அன்புடன்...
    மிகவும் கவர்ந்தன. குறிப்பாக பின்னூட்டமிட்டவர்களையும் மறக்காமல் எழுதிய விதம் கவர்ந்தது. சிறப்பான பகிர்வு ஐயா பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  3. நினைத்துப்பார்க்கிறேன் என்று மலர்ந்த தங்கள் மலரும்
    நினைவுகள் நிறைவளித்தன ..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. முதல் பதிவைப் பற்றி சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். வலை உலகில் ஒரே துறை அனுபவங்களை சிறப்பாகவும் சுவாரசியாமாகவும் பகிர்ந்தது தாங்கள் ஒருவர் மட்டுமே என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  6. முதல் கருத்துரை உட்பட அனைவரையும் குறிப்பிட்டது சிறப்பு... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர் பதிவிட வாய்ப்பு தந்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. வலைப்பதிவு தொடங்கிய அனுபவத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  8. அனைவரையும் நினைவுகூர்ந்த விதம் அருமை!
    உங்கள் கட்டளைப்படி எழுதி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது அழைப்பை ஏற்று தொடர் பதிவிட இருப்பதற்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  9. முதல் பதிவை நினைத்துப்பார்த்த விதம் அருமை ஐயா... மற்ற பதிவர்களையும் குறிப்பிட்டது சிறப்பு..... நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்கூல் பையன் அவர்களே!

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி திரு ஸ்கூல் பையன் அவர்களே! நான் முதல் வருகை எனக் குறிப்பிட்டது, தாங்கள் முதன்முதலாக எனது வலைப்பதிவிற்கு வந்ததை! இந்த பதிவிற்கு அல்ல.

      நீக்கு
  10. என் பெயரையும் நினைவில் நிறுத்தி குறிப்பிட்டமைக்கு நன்றி. தங்களை அழைத்த திரு.திண்டுக்கல் தனபாலனுக்கும் எனது நன்றிகள்.
    அன்புடன்
    பக்கிரிசாமி.N

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ‘நன்றி மறப்பது நன்றல்ல.’ அல்லவா?

      நீக்கு
  11. மலரும் நினைவுகள்
    என்றுமே இனிமையானவை
    சுகமானவை
    தங்களின்
    முதல் பதிவின் சந்தோசம்
    அருமை ஐயா
    அனைவரையும் மறவாது
    குறிப்பிட்டது
    நிறைவளிக்கின்றது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. மிகவும் சுவையாக எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்திருக்கிறீர்கள், ஐயா, வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இரஞ்சனி நாராயணன் அவர்களே!

      நீக்கு
  14. முதல் பதிவின் அனுபவத்தினை சுவைபட எழுதி இருக்கீங்க....

    நல்ல அனுபவம். தொடரட்டும் பதிவுகள்.... நானும் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  15. I suppose the first creation can be compared to first love/first kiss that are very special and are cherished through out one's life.
    vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வாசு அவர்களே! சரியாய் சொன்னீர்கள்.

      நீக்கு
  16. சர்வீஸ்ல இருந்தப்போ ஆஃபீஸ் நேரத்துல படிச்சிக்காம (என்னைப் போல) ரொம்பவும் சின்சியரா இருந்துருக்கீங்க. ஆனாலும் எனக்கு ஒரு வருசம் முன்னாடியே பதிவுலகம் வந்துட்டீங்க. வாழ்த்துக்கள். அருமையா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே!

      நீக்கு
  17. மிக நன்று ரசித்தேன் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும், தொடர்வதற்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு
  18. உங்கள் முதல் பதிவுக்கு உடனே வந்த பின்னூட்டம். இரட்டிப்பு சந்தோஷம் அடைந்து இருப்பீர்கள். முதல் பதிவையும், முதல் பின்னூட்டத்தையும் நமக்கு நாமே எத்தனை முறை படித்து இருப்போம். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
    2. அது ஒரு மறக்க முடியாத அனுபவம் சகோ. தி.தமிழ் இளங்கோ அவர்களே. தங்கள் அனுவத்தையும் சொல்லுங்களேன்

      நீக்கு
    3. திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் நாள் தனது ‘எனது எண்ணங்கள்’ என்ற வலைப்பதிவில் அவரது அனுபவத்தை கூறியுள்ளார்கள். அதைப் படிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள் மதிற்பிற்குரிய நண்பர் மஸ்தூக்கா அவர்களே! (http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html)

      நீக்கு
  19. அய்யா! அடிக்கடி இணையத்தில் வர இயலாவிட்டாலும் வரும்போதெல்லாம் தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து மகிழ்ந்து வருகிறேன். 'இணையத்தில் இதுவரை நீ என்ன சாதித்திருக்கிறாய்?' என்று என்னிடம் கேட்ட எனது சக நண்பர்கள் அனைவருக்கும் தங்கள் வலைப்பதிவைக் காட்டி 'ஓர் அறிஞர் தம் வாழ்க்கையின் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை நினைத்துப்பார்க்கவும், அதன் மூலம் ஏராளமானோர் பயன் பெறவும் வைத்திருக்கிறேன்' என்று சொல்வேன்.
    தங்கள் இடுகைகளுக்கு பின்னூட்டமிடும் ஒவ்வொருவருக்கும் உடனுக்குடன் நன்றி தெரிவிக்கும் தங்கள் உயர்ந்த பண்பாட்டை நினைத்துப் பார்க்கிறேன், இறுதியாக கல்லூரியில் பயிற்றுவித்த பேராசிரியர்களையே மறந்து விடும் மாணாக்கர்களுக்கு மத்தியில் துவக்கதில் அரிச்சுவடிப் பாடம் நடத்திய ஆசிரியரை இன்றளவும் நினைத்துப் பார்க்கும் தங்களின் மேலான நற்குணத்தை நினைத்துப் பார்க்கிறேன்.(இந்த இடத்தில் என்னை ஆசிரியராகவும் தங்களை மாணவராகவும் குறிப்பிட்டதற்கு தங்கள் மேலான சமூகத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்)
    'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?' என்று அன்று கட்டுரை எழுதிய நான், 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்று இன்று தங்களிடம் பாடம் படிக்க வேண்டும்.

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பதிவிட்ட தாங்கள் எனது வேண்டுகோளை ஏற்று 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டால் சக பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    அய்யா அவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்து பின்னூட்டமிடும் அனைத்து சகோதர சகோதரிகளும் எனது வேண்டுகோளுக்கு அய்யா அவர்களிடம்பரிந்துரை செய்வீர்கள் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, மதிப்பிற்குரிய நண்பர் மஸ்தூக்கா அவர்களே! பதிவுலகத்தில் நான் காலூன்ற உதவிய நீங்கள்தான் என் ஆசான். அந்த அரிச்சுவடி பாடம் தங்களிடம் நான் படிக்காதிருந்தால் பதிவுலகத்திற்கே வந்திருக்கமாட்டேன். இதைத் திரும்பத் திரும்ப சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். எனவே தங்களை ஆசிரியராகவும் என்னை மாணவனாகவும் நீங்கள் குறிப்பிட்டது சரியே. தங்களது வேண்டுகோளை, கட்டளையாக ஏற்று 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் விரைவில் பதிவிடுகிறேன்.தங்களுக்கு எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  20. முதல் பதிவின் சந்தோஷ நினைவுகள் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு