புதன், 9 டிசம்பர், 2015

சென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.

சென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, தங்க இடம் இடம் இன்றி, மழையில் மொட்டை மாடியிலும் இன்ன பிற இடங்களிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா முழுதும் உள்ள நல்ல உள்ளங்கள் சாதி இனம் மொழி கடந்து உதவ முன் வந்திருக்கும்போது, இந்தி வெறியர் ஒருவர் எந்த அளவுக்கு இனவெறியோடு இந்த அழிவை விரும்புகிறார் என்பதை கீழே தந்துள்ளேன்.



Facebook இல் ஆசிஷ் செளத்ரி என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் தமிழர்கள் இறப்பதைதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று எழுதியிருக்கிறார். அதற்கு அனுஷா நடராஜன் என்பவர் தக்க பதிலை அளித்துள்ளார். Facebook இல் வந்த அவர் எழுதியிருந்ததையும் அதற்கு அனுஷா நடராஜன் அவர்கள் தந்திருக்கின்ற பதிலையும் அப்படியே கீழே தந்திருக்கிறேன்.


ஆசிஷ் செளத்ரி

''I don't mind if Tamil people die. They never considered
themselves as Indians.''

And then I ask myself. The land who do not accept our
national language and prefer British English more in conversation
to native Indians are asking help from Hindi language people''.


அனுஷா நடராஜன்


'Dear Ashish Chaudhary,

First of all the good news. We ''Tamilians'' made it alive and
stronger than ever. Now for the bad news. Your intellect is even teenier and tinier than the size of your brain. Let me explain why.
1. Hindi is not our National Language. India has many officially
recognized languages.
2. I see you are from Mumbai and that means you are technically not from the Northern part of India.
3. “Hindi language people” is not a thing. Not at least where you come from.
4. The people from the south aka ''Dravidians'' are the real Indians. You guys are immigrants from Persia.(Not to hurt anyone's feelings.) We love you all and will come for your rescue
if and when needed.
5. So we embrace English....Big deal! It helps us become CEOs
of bigger companies around the world. While you are still stuck doing something completely useless on MTV.
And finally! You are brainless... I can tell you this because while you accused us of embracing English you typed both your posts in English... Not too sharp buddy!!...Not too sharp!
Sincerely,
Everyone!


திரு ஆசிஷ் செளத்ரி யின் பதிவுக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் வந்து குவிந்திருக்கின்றன. ஆனால் அவரைப் போன்ற இந்தி வெறியர்கள் இதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திரு ஆசிஷ் செளத்ரி போன்றோரின் ஆசை நிறைவேறப் போவதில்லை. எனவே நாம் அது குறித்து கவலைப்படவேண்டாம். மேலும் அவரது தணியாத ஆசைக்கு தகுந்த பதிலை அனுஷா நடராஜன் அவர்கள் தந்து விட்டார். எனவே இதை உதாசீனம் செய்வதே நல்லது.

ஆனால் துரதிர்ஷடவசமாக நமது தமிழக அரசின் கல்வித்துறையே இந்தியாவின் தேசிய மொழி இந்தி என நினைத்துக்கொண்டிருக்கிற போது அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?

இது குறித்து ‘இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?’ என்று 20-07-2015 அன்று நான் வெளியிட்ட பதிவில் இந்தி நமது நாட்டின் தேசிய மொழி அல்ல அது ஒரு அலுவலக மொழி (Official Language) தான் என்பதை தமிழக கல்வித்துறையினரே அறியவில்லை.அதனால் தான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்று சமூகவியல் பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டு மாணவர்களை குழப்பியிருக்கிறார்கள் என சொல்லியிருந்தேன்.

எனவே நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள செய்யவேண்டியது அரசின் கடமை. ஆனால் அதை செய்வார்களா என்பது ஐயமே. அதுவரை இது போன்ற பிதற்றல்களை நாம் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.






28 கருத்துகள்:

  1. விரிவான விளக்கம் ஒன்றை பதிவாக்கிய அய்யா VNS அவர்களுக்கு நன்றி. சகோதரி அனுஷா நடராஜன் மிகவும் பாராட்டுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! இந்த பாராட்டை பெற காரணமாக இருந்த சகோதரி அனுஷா நடராஜன் அவர்களுக்கும் நன்றி!

      நீக்கு
  2. அனைத்தையும் பற்றி விரிவாக எடுத்துச்சொல்லி, அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. பிரிட்டீஷ் ஆதிக்கத்தின் போது உருவாக்கப்பட்ட படைகளில் பலமொழி பேசும் மக்கள் கலந்து கொண்டதன் விளைவாக உருவான மொழி தான் (படைஞ்சர் மொழி ) ஹிந்தி என்று என் ஆசிரியர் கூற கேட்டிருக்கிறேன் அப்படிப்பட்ட மொழியை தேசிய மொழி கூறுவது
    வலுக்கட்டாயமாக திணிப்பது தவறுதான் .
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு விமல் அவர்களே!

      நீக்கு
  4. சகோதரி அனுஷா நடராஜன் அவர்கள் பாராட்டுக்குறியவர் நல்ல பதிலடி பதிவுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  5. மொழி என்பது எண்ணப் பரிமாற்றத்துக்கு உதவ வேண்டும் 1965-ல் எனக்கு நடந்த ஒரு நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு நான் ஆங்கிலத்தில் பதில் கொடுத்ததை ரசித்த தேர்வதிகாரி சென்னையில் தமிழில்தான் பேச வேண்டும் என்னும் அறிவுரையும் வழங்கினார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம் அது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! எந்த மொழியையும் யார் மேலும் திணிக்கக்கூடாது என்பதே சரி. ஆனால் தேசிய மொழியாக இல்லாத ஒன்றை, அது தான் தேசிய மொழி என எண்ணிக்கொண்டு இன்னொரு இனமே அழிந்து போவதைப்பற்றி கவலை இல்லை என்பவரை பற்றி என்ன சொல்வது. மேலும் தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது தவறா என்ன ?

      நீக்கு
  6. Good Shot Anuja!

    We do Speak British English and no wonder the way we Indian speak English will make out if he/she is from Where in Inda? It applies from Saruk khan to Kamalahasan and Maduri Dixit to now latest Sruthihasan.

    Let Indian government make it is a compulsory to study in any one of South Indian languages and we will go for Hindi.No big deal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ராஜ நடராஜன் அவர்களே! இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் மய்ய அரசு இந்தி பேசும் மக்களை தென்னிந்திய மொழி ஒன்றை படிக்க சொல்லும் என்று தோன்றவில்லை.

      நீக்கு
  7. அனுஷா நடராஜனுக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே!

      நீக்கு
  8. நானும் அதைப் பார்த்தேன். நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார் அனுஷா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  9. அருமையான பதிலடி. பகிர்ந்த தங்களுக்கு நன்றி.
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் S.P.செந்தில்குமார் அவர்களே!

      நீக்கு
  10. இந்தி வெறியர்களை என்ன சொல்லியும் திருத்த முடியாது. ஆனாலும் இப்படிப்பட்டவர்களை அப்படியே விட்டுவிடவும் கூடாது. சாட்டையடி போல் சரியான பதில் தரப்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களே!

      நீக்கு
  11. ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தமிழக கல்வித்துறையையும் ஒரு பிடி பிடி பிடித்து இருக்கிறீர்கள்.
    பதிவுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  12. அனிஷா நடராஜனுக்கு பாராட்டுகள்,

    சரியான சமயத்தில் தக்க பதிலளித்திருந்தார் அனுஷா.
    பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி நிஷா அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. வடவரின் வேடம் வெளிப்பட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா! தென்னிந்தியர்கள் பேரில் குறிப்பாக தமிழர்கள் மேல் அவர்களுக்கு உள்ள வெறுப்பு நீறு பூத்த நெருப்பு போன்றது என்பது தெரிந்ததுதானே!

      நீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு