சனி, 14 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 3

ஒரு வங்கி நடத்திய நேர்முகத்தேர்வில், அலுவலராக
பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞர் பணியில்
சேர ஆவலோடு குறிப்பிட்ட நாளில் அவர் வேலையில்
சேரவேண்டிய வங்கியின் கிளைக்கு காலையில் சென்றார்.

அவர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த வங்கியின்
கிளையின் முன் ஒரே கூட்டம்.என்னவென்று
எட்டிப்பார்த்ததில் வங்கியின் பூட்டப்பட்ட‘ஷட்டருக்கு’
வெளியே ஒரு கழுதை படுத்திருந்தது.

அதை எழுப்ப அங்கிருந்த வங்கிப் பணியாளர்கள்
உட்பட அனைவரும் முயற்சி செய்தும் அது சிறிதும்
அசைந்து கொடுக்கவில்லை. சில விளயாட்டு
பிள்ளைகள் அதன் வாலைக்கடித்தும் அது
எழுந்திருக்கவில்லை.

நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.வங்கி பணி ஆரம்பிக்கும்
நேரமான 10 மணி நெருங்கிக்கொண்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் வேறு வார ஆரம்பித்துவிட்டார்கள்.
வேலையில் சேர வந்த இளைஞனோ,‘என்ன இது.முதன்
முதல் வேலையில் சேர வந்த போதே தடங்கலாக
இருக்கிறதே’என எண்ணினாலும்,கழுதையைப்
பார்த்தால்,‘நல்ல சகுனம்‘ யாரோ சொன்னது
நினைவுக்கு வர சமாதானமானார்.

அந்த நேரத்தில் அந்த வங்கியின் கிளை மேலாளர்
அங்கு வந்து ‘ஏன், கிளையை திறக்கவில்லை?’
என விசாரித்தார். ஊழியர்களும்,
அலுவலர்களும் நிலைமையை சொன்னபோது,
அவர் ஒன்று சொல்லாமல் அந்த கழுதை அருகே
சென்று அதன் காதில் ஏதோ சொன்னார்.
அவ்வளவுதான் அந்த கழுதை திடீரென எழுந்து
ஓட்டம்பிடித்தது.

அதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த
மேலாளர் என்ன சொன்னார் அல்லது ஏதேனும்
மந்திரம் சொன்னாரா என்று அறிய எல்லோருக்கும்
ஆவல்.ஏன் வேலைக்கு சேர வந்த இளைஞனுக்கும்தான்.

வங்கியின் உள்ளே சென்றதும்,அலுவலர்கள் எல்லோரும்,
மேலாளரின் அறைக்கு சென்று அவர் எவ்வாறு
அந்த கழுதையை விரட்டினார் விசாரித்தார்கள்.

வெளியே வரும்போது எல்லோரும் சிரித்துக்கொண்டே
வந்தனர்.வேலையில் சேர வந்த இளைஞனுக்கோ
அதை தெரிந்த கொள்ள ஆவல் இருந்தும், தான்
வேலையில் சேர்வதுதான் முதல் வேலை என்பதால்
தயக்கத்தோடு மேலாளரின் அறைக்கு சென்று தனக்கு
வந்த நியமன உத்திரவை காண்பித்து வேலையில்
சேர்ந்தார்.

அவருக்கு தரப்பட்ட பணியை ஒரு முது நிலை
அலுவலரின் உதவியோடு செய்தாலும், மேலாளர்
எவ்வாறு கழுதையை விரட்டினார் என்பதே அவரது
மனதில் இருந்தது.

உணவு இடைவேளையில் பிற அலுவலர்களை
சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபோது,எல்லோரும்
ஒருவருக்கொருவர் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.

தயங்கிக்கொண்டே,அந்த புதிய அலுவலர், தனக்கு
வேலை சொல்லிக்கொடுத்த மூத்த அலுவலரிடம்.
‘சார். ஒரு சந்தேகம்.எல்லோராலும் முடியாததை
என்ன செய்து மேலாளர் அந்த கழுதையை விரட்டினார்?
தயை செய்து சொல்லுங்கள் என்றார்.

அவரும் சிரித்துக் கொண்டே‘அது ஒன்றும் இல்லையப்பா.
மேலாளர் அந்த கழுதையின் காதில் நீ இங்கிருந்து
செல்லாவிடில் உன்னை இங்கு ஆபீசராக ஆக்கிவிடுவேன்
என்றாராம். அதனால்தான் கழுதை பயந்து கொண்டு
ஓடிவிட்டது!’ என்றார்.

‘அது சரி சார். உணவு இடைவேளையின் போது
என்னைப்பார்த்து மற்ற ‘ஆபீசர்கள்’ஏதோ சொல்லி
சிரித்தார்களே என்ன சார் அது?’என்றார் அந்த இளைஞர்.

‘அதுவா,உன்னைப்பார்த்ததும் காலையில் மேலாளர்
சொன்னது அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது,
அதனால் "பொதியை சுமக்க இன்னொரு கழுதை
வந்துவிட்டது"
, என சொல்லி சிரித்தார்கள்.’ என்றார்!!


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

7 கருத்துகள்:

 1. The status of workers in Banks has been subtly and humorously narrated. Contrary to public perception, Bankers are really donkeys, who end up being the beast of burden doing donkeys works for donkeys years.So unglamorous are these animals that no body espouses their causes; nor these are adopted like other lucky pet animals. The lot of the bankers is really pathetic. I am thankful for providing a platform to articulate my suppressed feelings. I am sure that all fellow bankers would agree with me. Vasudevan

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!. உங்களுடைய கருத்துக்கு மாறுபட்ட எண்ணம் வங்கியாளர்களுக்கு இருக்கமுடியாது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பொது மக்களுக்கு வங்கியாளர்களின் படும் அவலம் தெரிவதில்லை.

  பதிலளிநீக்கு
 3. உண்மை நிலையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறீர்கள்!
  நன்று!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு மார்டின் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு மார்டின் அவர்களே!

  பதிலளிநீக்கு