திங்கள், 16 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 4

ஒரு நாள் காலை ஒரு கால்நடை மருத்துவ மனைக்கு
ஒருவர் வந்து, அங்கிருந்த மருத்துவரைப் பார்த்து,
‘டாக்டர்,நான் பக்கத்து ஊரில் வேலை பார்க்கிறேன்.
தங்களிடம் சிக்கிச்சை பெறுவதற்காக விடுப்பில்
வந்திருக்கிறேன்.எனவே தயவு செய்து தாங்கள் எனக்கு
சிச்சை அளிக்கவேண்டும்.’என்றார்.

டாக்டர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து,‘நீங்கள்
தவறாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் செல்லவேண்டிய‘கிளினிக்’எதிர் சாரியில்
உள்ளது.’என்றார்.

உடனே அவர்,’இல்லை இல்லை டாக்டர். நான்
தங்களிடம் சிகிச்சைப் பெறத்தான் வந்திருக்கிறேன்.’
என்றார்.

டாக்டர் அவரிடம்,உங்களுக்கு தெரியும் என
நினைக்கிறேன்.நான் ஒரு கால்நடை மருத்துவர்.
மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் ஸ்பெஷலிஸ்ட்’
என்றார்.

அதற்கு வந்தவர்,‘எனக்கு தெரியும் டாக்டர் நீங்கள்
ஒரு கால்நடை மருத்துவர் என்று.ஆனாலும் நீங்கள்
தான் எனக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.’என்றார்
விடாப்பிடியாக.

டாக்டரோ பொறுமையாக,‘அது என்னால் முடியாது.
ஏனெனில் நீங்கள் என்னைப்போல் பேசுகிறீர்கள்.
என்னைப்போல் சிந்திக்கிறீர்கள். எனவே நீங்கள்
மிருகமல்ல.நீங்களும் என்னைபோன்ற ஒரு மனிதன்.
ஆகையால் நீங்கள் எதிரில் உள்ள ‘கிளினிக்’குக்கு
சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.’என்றார்.

அதற்கு அவர்,‘எனக்கு தெரியும் டாக்டர்.நானும்
ஒரு மனிதன் தான் என்று.ஆனால் எனக்கு ஒரு
சிக்கல்.

காலையில் எழுந்திருக்கும்போது ஒரு’குதிரை’
போல் எழுகிறேன். அலுவலகத்திற்கு ஒரு’மான்’
போல் ஓடுகிறேன். நாள் முழுதும் அலுவலகத்தில்
ஒரு’கழுதை’போல் வேலை செய்கிறேன்.எனது
மேலாளர் முன் ஒரு‘நாய்’போல்வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்.வீட்டிற்கு வந்ததும்,
என் குழந்தைகளுடன்,ஒரு’குரங்கு’போல்
விளையாடிக்கொண்டிருக்கிறேன்.என் மனைவி
முன் ஒரு‘முயல்’போல் பதவிசாக
நடந்துகொள்கிறேன்.அதனால் தான் தங்களிடம்
வந்தேன்.’என்றார்.

டாக்டர் அவரிடம்,‘நீங்கள் வங்கியில் வேலை
செய்கிறீர்களா?’
என்றார்.

அவர்‘ஆமாம்.'என்றதும்,டாக்டர்,உற்சாகத்தோடு,
‘அப்படியானால் என்னைத்தைவிர வேறு யாராலும்
உங்களுக்கு சிகிச்சை தர இயலாது.
உட்காருங்கள்.’என்றார்!!


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

8 கருத்துகள்:

 1. என்ன சார்,வங்கி ஊழியர்களை இப்படிக் கலாய்க்கறீங்க!உண்மைதான் என்றாலும்,கோபித்துகொள்ளப் போகிறார்கள்!
  நல்லாருக்கு!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  சர்தார்ஜி ஜோக்குகளைப்பற்றி திரு குஷ்வந்த் சிங் அவர்கள்,அதை தானும் ரசிப்பதாக கூறி,சிலஜோக்குகளை
  70 களில் தினமணி கதிரில் அவரும் எழுதியிருந்தார்.எனவே மேனாள் வங்கி ஊழியர்களான நாம், இத்தகைய நகைச்சுவைகளை ரசிக்காவிட்டால் வேறு யார்தான் ரசிக்கமுடியும்?

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவையாக நீங்கள் எழுதுவது நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதவும்

  பதிலளிநீக்கு
 4. நகைச்சுவையாக நீங்கள் எழுதுவது நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதவும்

  பதிலளிநீக்கு
 5. நகைச்சுவையாக நீங்கள் எழுதுவது நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதவும்

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும், நீங்கள் தந்த ஊக்கத்திற்கும் நன்றி
  திரு முரளி நாராயண் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. True. Bankers are like animals only in many respects. Bankers should learn to laugh at themselves . The behavior of the proverbial banker brought a smile on my face. Vasudevan

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  என்னோடு சேர்ந்து இரசித்தற்கு நன்றி.

  பதிலளிநீக்கு