வெள்ளி, 6 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 1

நகைச்சுவை பல ரகம்.பிறர் மனதை புண்படுத்தாத
வகையில் படிப்போருக்கும்,கேட்பொருக்கும் அவை
சிரிப்பை அல்லது புன் சிரிப்பை உண்டாக்குமானால்
உண்மையில் அவை நகைச்சுவைதான்.

நம்மிடையே உலாவி வரும் நகைச்சுவை
துணுக்குகளை வகைப்படுத்தினால் அவை இனம்
சார்ந்த,மொழி சார்ந்த,தொழில் சார்ந்த,
நகைச்சுவைகள் என்ற பல தலைப்பின் கீழ்
பிரிக்கலாம்.

இங்கே நான் வங்கித்துறையைச் சேர்ந்தவன்
என்பதால் வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
துணுக்குகள் மற்றும் வங்கியாளர்களை பற்றிய
மற்ற துணுக்குகளையும் தரலாமென நினைக்கிறேன்.


நான் படித்த, கேட்ட, மின் அஞ்சலில் வந்த
என் வங்கி பயிற்சி கல்லூரியில் சொன்ன
துணுக்குகளைத்தான் பதிவேற்ற இருக்கிறேன்.
மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.

மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு Rhymes
எனப்படும் எதுகை மோனை உடன் கூடிய பாடல்களை
சொல்லிக்கொடுப்பார்கள். அப்படிப்பட்ட பாடல்
ஒன்றை மாற்றி, வங்கியாளர்களுக்கு பொருந்தும்
வகையில் எழுதப்பட்ட ஒரு பாடல் எனக்கு
மின் அஞ்சலில் வந்தது. அதை கீழே தந்திருக்கிறேன்.
தமிழில் மொழி பெயர்த்தால் அதனுடைய வீச்சு
குறைந்துவிடுமோ என்ற ஐயத்தால் அதை
ஆங்கிலத்லேயே தந்திருக்கிறேன்.

A BANKER'S RHYME


Johny Johny! Yes Papa!
Banking service? Yes Papa!
Many tensions? Yes Papa!
Work pressure? Yes Papa!
BP-Sugar? Yes Papa!
Family life? No Papa!
Wage revision? Ha Ha Ha!!!

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

7 கருத்துகள்:

 1. ஹா,ஹா,ஹா!நல்லாத்தான் இருக்கு நர்சரி ரைம்!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ADAM அவர்களே!

  இந்த பதிவில் வங்கியாளர்களைப்பற்றிய நகைச்சுவை துணுக்குகள் மற்றும் பிற துணுக்குகளை பதிவேற்ற இருக்கிறேன். இருப்பினும் தாங்கள் இதில் Joke இல்லை என சொன்னதால் அந்த சொல்லை தலைப்பிலிருந்தே நீக்கிவிட்டேன். மீண்டும் நன்றி தங்களுக்கு,

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ADAM அவர்களே!

  இந்த பதிவில் வங்கியாளர்களைப்பற்றிய நகைச்சுவை துணுக்குகள் மற்றும் பிற துணுக்குகளை பதிவேற்ற இருக்கிறேன். இருப்பினும் தாங்கள் இதில் Joke இல்லை என சொன்னதால் அந்த சொல்லை தலைப்பிலிருந்தே நீக்கிவிட்டேன். மீண்டும் நன்றி தங்களுக்கு,

  பதிலளிநீக்கு
 5. While the rhyme may look humorous it reflects the experience of many a banker without any exaggeration. vasudevan

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  இந்த மழலையர் பாடல் சிரிப்பை வரவழைத்தாலும், வங்கியாளர்கள் படும் கஷ்டத்தையும், அவலத்தையும் சொல்லாமல் சொல்கிறது என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு