சனி, 10 ஆகஸ்ட், 2013

தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி?





 முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவில், நான் பதிவு எழுத காரணமாக, தூண்டுகோலாக, ஏன் கிரியா ஊக்கியாக இருந்த மதிப்பிற்குரிய நண்பர்  
திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தேன்.
 
'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?' என்று, அன்று கட்டுரை 
எழுதிய  அவர், மேலே குறிப்பிட்டுள்ள பதிவைப் படித்துவிட்டு 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் ஒரு பதிவிடவேண்டும் என்று எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வலைப்பதிவை எவரும் தொடங்கிவிடலாம் ஆனால் அதை தொடர்ந்து நடத்துவது கடினம் என்பதை உணர்த்தவே அந்த தலைப்பில் எழுதச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். எனவே அது பற்றி  பதிவிடவேண்டும் 
என்ற அவரின் வேண்டுகோளை தட்டமுடியுமா என்ன?

வலைப்பதிவை ஆரம்பிப்பது தற்போது சுலபமே. ஏனெனில் எப்படி ஆரம்பிப்பது 
என்பது பற்றிய தொடர்கள் நிறைய வலைப்பக்கங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனால் நமது வலைப்பதில் நாம் எழுதுவதை படித்து, அதை 
விமர்சிக்க வாசகர்கள் வேண்டுமல்லவா?

நமது வலைப்பதிவில் நாம் வெளியிடுகின்ற படைப்புகள் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால், அது படிப்பவர்களை ஈர்க்க வாய்ப்பில்லை.நமது வலைப்பதிவுக்கு வருகையாளர்கள் இல்லையென்றால், பதிவில் எழுதி நமது நேரத்தை வீணடிப்பது ஆளில்லா தேநீர் கடையில் தேநீர் ஆற்றுவதைப் போலத்தான்!
 
ஆனால் நான் பதிவை ஆரம்பித்து  எழுத விரும்பியது எனது ஆத்ம திருப்திக்கு 
என்று பொய் சொல்ல விரும்பவில்லை. பணியில் சுறுசுறுப்பாக இருந்தது போல,எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற சுய நலம் காரணமாக  
 எழுத நினைத்தேன். மற்றபடி புகழ்பெற அல்லது பாராட்டு பெற அல்ல.

மேலும் பதிவுலகில் நமது எண்ணங்களை மற்றும் அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோமே என்ற எண்ணமும் இன்னொரு காரணம்.    

ஆனாலும் எல்லோரையும்போல எனது வலைப்பதிவிற்கும் நிறைய 
வருகையாளர்கள் வரவேண்டும் என ஆசைப்பட்டது உண்மைதான். 
அப்போதுதானே எனது கருத்துக்கள்/படைப்புக்கள் மற்றவர்களைப் 
போய் சேரமுடியும்.

நான் பதிவில் எழுத ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்பதையும், விளையாட்டு போல இதுவரை நான் 295 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதும், மாநில மற்றும் மைய அரசுகளின் பணியில் இருந்தபோதும் இருந்த என் நண்பர்களின் வட்டம், இந்த பதிவைத் தொடங்கியதும் இன்னும் விரிவடைந்துள்ளது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது வலைப்பதிவில், எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் பெற்ற அனுபவங்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அப்படி எழுதும்போது அது சுயபுராணத்தை சொல்வதுபோல் இருக்கக்கூடாது என்பதால்  
இடையிடையே  பணியில் ஏற்பட்ட நிகழ்வுகள், அவைகளை நான் 
எதிர்கொண்ட விதம், எனக்குப்பிடித்த கவிதைகள், நான் வரைந்த ஓவியங்கள், அறிவியல் செய்திகள் மற்றும் என்னை பாதித்த நிகழ்கால நிகழ்வுகள், 
என பல்வேறு தலைப்பில் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாத வகையில் 
எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதாவது அப்படி எழுதுவதாக 
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!

ஒன்றை மட்டும் எழுதும்போது நினைவில் கொள்வேன். நான் எழுதுவது 
பதிவுலகில் பிறரை புண்படுத்த அல்ல என்பதுதான் அது.

நான் பதிவில் எழுதுவதை முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்கிறேன். 
நினைவில் உள்ளவைகளை சிறு சிறு குறிப்புகளாக வெவ்வேறு தலைப்புகளில் 
எனது கணினியில் சேமித்து வைக்கொள்கிறேன்.பதிவு எழுதவேண்டுமே 
என்பதற்காக நான் அவசர அவசரமாக எதையும் எழுதுவதில்லை.

உதாரணமாக வங்கி வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி 
எழுது முன் நான் பணி புரிந்த ஊர்களின் பெயர்களையும், அங்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு வரியில் எழுதி வைத்துவிடுவேன். பின்பு எழுதும்போது 
அந்த குறிப்பைப் பார்த்து விரிவாக எழுதுவது வழக்கம். 

மேலும் ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதினால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டும் என்பதால் இடையிடையே வேறு தலைப்புகளில் எனது அனுபவங்களை 
எழுதுகிறேன். மேலும் மற்ற பதிவர்கள் பாணியில் எழுதாமல் எனது பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த நான் எந்த யுக்தியையும் 
கையாள்வதில்லை.ஆனால் எனது பதிவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகளை 
எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். அவைகள் கீழே.


  1. எனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு பதிவிடுவது.
  2. எனது பதிவில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருப்பது.
  3. எனது பதிவில் தனி நபர் துதி பாடலை தவிர்ப்பது.
  4. கருத்து சுதந்திரம் உள்ளது என்று சொல்லி, பிறரது மனதை புண்படுத்தாமல் இருப்பது.   
  5. அரசியல், நமது வாழ்வின் ஒரு அங்கம் என்றாலும், அதை கூடியவரையில் பதிவில் கலக்காமல் இருப்பது.
  6. மதத்தையோ, சாதியையோ இனத்தையோ மொழியையோ கொச்சைப் படுத்தி பதிவிடுவதில்லை.(அதை இதுவரை பின்பற்றியும் வருகிறேன்.)
  7. எனது பதிவில் தவறு இருந்து யாரேனும் சுட்டிக் காட்டினால், அந்த தவறை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்வது.
  8. கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமல் பதிவிடுவது. நமது பேச்சு வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொற்களை உபயோகப்படுத்துவது.
  9. பதிவில் பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.
  10. எனக்கு உதவியவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்வது.
  11. வாரம் ஒருமுறையாவது பதிவிட்டு களத்தில் இருப்பது.  

தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த, மேலே குறிப்பிட்ட வழிமுறைகளால் தான் முடியும் என நான் இங்கு சொல்ல வரவில்லை. இது 
எனக்காக நான் ஏற்படுத்திக்கொண்டு, பின்பற்றிவரும் விதிமுறைகள்.
இதனால்தான் என்னால் தொடர்ந்து வலைப்பதிவில் இருக்க முடிக்கிறது 
என எண்ணுகிறேன்.

இதுவரை எனது பதிவில் நான் எழுதிய கருத்துக்கு எதிர்மறை கருத்தை யாரும் தந்ததில்லை. அப்படியே இனி தந்தாலும், அது சரியாக இருப்பின் ஒத்துக்கொள்வது, இல்லாவிடில் I agree to disagree with you என்ற கொள்கையை கடைப்பிடிப்பது என இருக்கிறேன். 

என்னை இந்த பதிவை எழுதத்தூண்டிய மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!

37 கருத்துகள்:

  1. நீங்கள் கடைப்பிடிக்கும் சிறப்பான வழிமுறைகள்,நிச்சயம் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்!
    வழிகாடாலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!

      நீக்கு
  3. பதிவுலகில் தங்கள் கொள்கைகள் சிறப்பாகத்தான் உள்ளன.

    வலை எழுத்துலகில் நீடிக்க இது பலருக்கும் பயனளிக்கக்கூடும்.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கொள்கையை பாராட்டியதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  4. நல்ல வழிமுறைகள்.....

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  5. பயன் மிக்க பகிர்வுகள், வழிமுறைகள். எமக்கும் இவை உதவக் கூடும், நன்றிகள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நிரஞ்சன் தம்பி அவர்களே!

      நீக்கு
  6. அருமையான கருத்துக்கள்! நிறைய புதிய பதிவர்களுக்கு பயனளிக்கும் ஆலோசனைகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  7. Elaborate and enlightening guidelines; a must for any beginner. By the way, your response ( visualizing two different endings) to Chennai pithans' experience was revealing with interesting possibilities. A particular facet of your talents must have been experienced by all readers. That had you wanted you could have become a good crime story writer. I suggest that you develop the ending suggested by you into a full blown out story and serialize in your blog . Must be interesting to read. vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! தாங்கள் திரு சென்னை பித்தனின் வலைப்பதிவில் நான் கொடுத்திருந்த கதையின் முடிவு பற்றி தந்துள்ள பின்னூட்டம் படித்தேன்.தங்களது பாராட்டுக்கு நன்றி. என்னை துப்பறியும் கதைகளை எழுத சொல்லியுள்ளீர்கள். முயற்சிக்கிறேன். அதற்கும் நன்றி.

      நீக்கு
  8. தங்களுடைய கட்டுப்பாட்டுக் கொள்கைகள் பதினொன்றில் சிலவற்றை பதிவர்கள் சட்டமாக வைத்துவிட்டால்கூட நன்றாக இருக்கும். முக்கியமாக 2,3,4,6 & 8 ஆவது கருத்துக்கள். ஆனால் என்ன, கொஞ்சம் காரம் அதிகமாக தேவைப்படுபவர்களுக்கு சிரமம்.

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஒவ்வொருவரும் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு பதிவிட்டால், நீங்கள் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை சட்டமாக்கத் தேவையில்லை. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது உண்மை.

      நீக்கு
  9. பதிவில் எழுதுவதில் நீங்கள் கொண்டுள்ள சில கட்டுப்பாடுகள்
    எல்லோருக்கும் வழி காட்டுவனவாக அமைந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், கொள்கையை பாராட்டியமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  11. உங்களின் வழிமுறைகள் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி எழில் அவர்களே!

      நீக்கு
  12. சிறந்த முன் உதாரணம் நீங்கள். பின்பற்றும் நடைநெறிமுறைகள் போற்றத் தக்கவை.ஒரு துறையை சார்ந்த அனுபவங்கள் மற்றும் தகவலகளை சுவைபட சொல்வதில் வல்லவர் நீங்கள். உங்கள் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும
    தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள் நட்ன்ரி ஐயா!

    பதிலளிநீக்கு
  13. முன்னர் குறிப்பிட்ட கருத்தில் "நன்றி" என்பதற்கு பதிலாக நட்ன்ரி என்று பதிவாகி விட்டது மன்னிக்கவும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நன்றியை எப்படி சொன்னாலும் நன்றி நன்றி தான். எனவே தட்டச்சில் ஏற்பட்ட பிழைக்காக மன்னிப்புக் கோர தேவையில்லை.

      நீக்கு
  14. சிறப்பான வழிமுறைகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  15. தங்களின் நடைமுறைகள் சிறப்பானவை.அனைவருமே பின்பற்றத் தக்கவை. தாங்கள் சொல்லாமல் விட்டவிட்ட செய்தி ஒன்று இருப்பதாக நினைக்கின்றேன். அதுதான் தங்களின் அயரா உழைப்பு, தொடர் முயற்சி. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும், தாங்கள் என் பேரில் கொண்ட அன்பால் தெரிவித்த கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  16. ஒவ்வொரு புதுமுக பதிவாளரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள்.

    உங்களுடைய பதிவுகளுக்கு வரும் ஒவ்வொரு கருத்துரைக்கும் தனித்தனியாக எழுதிய பதிவரின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி கூறும் உங்களுடைய பாணியும் பலருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுபோல் வெகு சிலரே செய்கின்றனர். அந்த நல்ல பழக்கத்தை நானும் கூட செய்வதில்லை.

    ஆனால் இங்கு ஒன்ங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை இதுவரை யாரும் எழுதியதில்லை என்கிறீர்கள். அப்படியொரு கருத்தை நீங்கள் இதுவரையிலும் முன்வைத்ததில்லை என்பதும் உண்மைதானே? நம்முடைய கருத்து மற்றவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போகும்போது வேண்டுமென்றே எதிர்மறை கருத்துக்களை வைக்க வழியில்லை.

    ஆனால் நான் பதிவு எழுத வந்த காலத்தில் தமிழ்மணத்தில் இப்போதுள்ளதைப் போன்று ஒரு நல்ல ஆரோக்கியமான சூழல் இருக்கவில்லை. ஒருசில பதிவர்களுடைய விரும்பத்தகாத நடவடிக்கைகளால் தமிழ்மணமே இரண்டுபட்டு நின்ற காலம் அது.

    ஆகவேதான் நடுநிலையாக ஒரு ஆக்கபூர்வமான உணர்வுடன் பதிவு எழுத நினைத்த பல நல்ல பதிவர்களும் பதிவு எழுதுவதையே நிறுத்திக்கொண்டனர். இப்போதுள்ள ஆரோக்கியமான சூழல் நிலைத்து நிற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது உங்களைப் போன்ற பதிவர்களால முடியும். தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! என்னுடைய கருத்துக்கு யாரும் எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கவில்லை என்பதற்கு காரணம் எனது பள்ளி வாழ்க்கை பற்றியும் வங்கி அனுபவங்கள் பற்றியும் எழுதியததால்தான் என நினைக்கிறேன். அவை என் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள் என்பதால் யாரும் எதிர்மறையான கருத்துக்களை தரவில்லை.

      ஒருவேளை நான் அரசியல் பற்றியோ அல்லது தற்கால நிகழ்வுகள் பற்றியோ எழுதி இருந்தால் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல் எனக்கென சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டதால் அவைகளையெல்லாம் எழுதவில்லை.

      நீங்கள் சொல்வதுபோல் இப்போது பதிவுலகில் ஆரோக்கியமான சூழ்நிலை உள்ளது என்பது உண்மை.

      நீக்கு
  17. பதிவுகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் அதிகம் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதபடுவையே !அதனால் தான் அந்த தவறை பலர் செய்கிறார்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனிவாசன் அவர்களே!

      நீக்கு
  18. எமது வேண்டுகோளை ஏற்று, தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் உடனடியாக ஒரு பதிவு எழுதியதற்கு மிக்க நன்றி.
    சொல்வதைச் சுவைப்படச் சொல்லும் தங்கள் பாணி, பின்னூட்டமிடும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் தங்கள் பண்பாடு, எவருடைய மனதையும் புண்படுத்தாத தங்கள் எழுத்து,
    இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம். 'தனிநபர் துதி தவிர்க்கப்படுகிறது" எனக் கூறி எனது பின்னூட்டத்தை நீக்கிவிடுவீர்களோ? என அஞ்சி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், ‘தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி?’ என்னும் தலைப்பில் என்னை பதிவிட பணித்தமைக்கும் நன்றி மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களே! தங்களுடைய ஆதரவோடு இன்னும் பல பதிவுகளை எழுதுவேன்.

      நீக்கு
  19. Brilliant sir! This is actually a very interesting and important topic for bloggers. Sometimes- we begin things on a whim- and it ends abruptly. And I believe a "Blog" grows and matures along with the blogger. At any point of time- the older posts reminds us about our state of mind then- back when we wrote the article. I believe that -a blog post reveals much more about our past selves than a photograph!
    I have been blogging in English since Oct-2006 and in Tamil since Jan-2010. For me- blogging was and is a huge mile stone. It helped me become more organised. And it taught me to commit myself to something.
    Thank you for sharing your experience sir... I could sure use some of your tips...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். வலைப்பதிவு நாட்பட நாட்பட பதிவர்களோடு முதிர்ச்சி பெற்று மெருகேறுகிறது என்பது சரியான கூற்று. உங்களைப்போன்ற திறமையான இளைய பதிவர்கள் எங்களைவிட நன்றாக பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களின் பதிகளைப் பார்க்கும்போது தெரிகிறது. வாழ்க வளமுடன்!

      நீக்கு