வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து!


பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
பாசமும் நேசமும் பால்போல பொங்கவும்
இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்
துன்மையும் துன்பமும் தொலைந்து போகவும்
நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று
நலமுடன் வாழ இறைவனை வேண்டி
அடி யவன் வாழ்த்தும் வழுத்து,பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

(மேலே உள்ள கோலங்கள் என் மகள் எங்கள் வீட்டின் முன் இன்று போட்டவை.)


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் எழுதியிருக்கிறேன். சென்ற ஆண்டு பதிவர் திரு ஜோசப் விஜூ அவர்களின் ‘ஊமைக்கனவுகள்’ என்ற வலைப்பதில் வந்த ‘யாப்புச்சூக்குமம்’ என்ற தொடர் பதிவின் மூலம் வெண்பா எழுத கற்றுக்கொண்டு மூன்று சிறிய தவறுகளுடன் பொங்கல் வாழ்த்தை பஃறொடை வெண்பாவாக எழுதியிருந்தேன்.

இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை வெண்பாவில் எழுத எண்ணி எழுதியிருக்கிறேன்! ஆனால் இதில் எதுகை மோனை சரியாக வரவில்லை என்பது எனக்குத் தெரியும். தவறு இருப்பின் திரு ஜோசப் விஜூ அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


வாழ்த்துக்களுடன்

வே.நடனசபாபதி

20 கருத்துகள்:

 1. கவிதை அருமை நண்பரே
  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
  2. The rangoli is excellent. Your greetings shows your literature knowledge. You can guide Tamil literature students with your in deapth knowledge.

   நீக்கு
  3. வருகைக்கும் எனது மகள் போட்ட கோலத்தை பாராட்டியதற்கும் நன்றி திரு L.N..கோவிந்தராஜன் அவர்களே! தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு எனக்கு தமிழறிவு இல்லை என்பது என் கருத்து. இருப்பினும் தங்களது கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 2. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  தங்கள் மகள், தங்கள் வீட்டின் முன் இன்று போட்டுள்ள கோலங்கள் நன்றாக உள்ளன. அவருக்கு எங்கள் பாராட்டுகள்.

  தங்களின் வாழ்த்துக் கவிதைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 3. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருமதி உமையாள் காயத்ரி அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 5. அன்பினும் இனிய நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. பதில்கள்

  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்! நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் உடனே பதில் தர இயலவில்லை. மன்னிக்க.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்! நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் உடனே பதில் தர இயலவில்லை. மன்னிக்க.

   நீக்கு
 9. அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் அழைப்பிற்கு நன்றி! விரைவில் தொடரை எழுதுன். நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் உடனே பதில் தர இயலவில்லை. மன்னிக்க.

   நீக்கு