செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 19





எங்களது பொள்ளாச்சி சந்திப்பில் நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும், அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும் தந்திருந்தேன். அந்த கேள்விகளுக்கான பதில்களையும் அந்த முதற்கேள்வி எதற்காக கேட்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த பதிவில் தருவதாக சொல்லியிருந்தேன். 



அந்த நிகழ்ச்சியில் நண்பர் நாச்சியப்பன் கேட்ட கேள்விகளுக்கான விடைகள் கீழே. 

1. கலைஞரின் இறுதி சடங்குகளை முன்னின்று கவனிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி யார்?

திருமதி அமுதா I.A.S தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர். 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது சிறப்பு அதிகாரியாக  சிறப்பாக செயல்பட்டவர். (மதுரையைச் சேர்ந்த இவர் நேர்மையான  அப்பழுக்கற்ற பெண்மணி. 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக  அங்கமான மதுரை கல்லூரியில் இளம் வேளாண் அறிவியல் படிப்பை முடித்தவர்.  படிக்கும்போது மாணவர்களுக்கான 15 பதக்கங்களையும் வென்றவர். 1992 இல் IPS ஆக தேர்வு செய்யப்பட்டவர். 1994 இல் IAS ஆக தேர்வு செய்யப்பட்டபோது  தமிழக அளவில் முதல் இடத்தையும் இந்திய அளவில் பெண்களிடையே முதலிடத்தையும் பெற்று சிறப்பு பெற்றவர்.) 

2. உலக கால்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை வென்ற குரோசியா நாட்டின் தலைநகரம் எது? 

சாகிரேப் (Zagreb)

3. இராமாயணத்தில் சத்துருக்கனின் மனைவியின் பெயர் என்ன? 

சுருதகீர்த்தி (Shrutakirti)

4. இவன் பையில் இருந்தால் யாரையும் தங்கவிடமாட்டான். இவன்  யார்? 

ஓட்டை 

5. இரயில் போக்குவரத்து இல்லாத வடகிழக்கு மாநிலம் எது? 

மேகாலயா (இப்போது மேந்திபதார் (Mendipathar) என்ற இடத்தில் ஒரு இரயில் நிலையம் உண்டு)

6. நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது?

மாலையிட்ட மங்கை

7. கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரிடம் கை தட்டிவிட்டு  செல்வது ஏன்?

நாம் கோவிலிருந்து எதையும் எடுத்துச்செல்லவில்லை என்பதை தெரிவிக்க.

8. மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன?

புத்லி பாய் ( Putlibai )

9. கலைஞரின் கதை வசனத்தில் ஜெமினி கணேசன் நடித்த படம் என்ன?

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

10. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது? 

இஸ்ரேல்

11. காங்கேயநல்லூரில் பிறந்தவர்.அமிர்தவல்லியை மணந்தாலும் பிரம்மச்சாரியாக இருந்தவர். நிறைய உபதேசங்கள் செய்தவர் யார்? 

திரு முருக கிருபானந்த வாரியார்

12. ‘துள்ளாத  மனமும் துள்ளும்’ என்ற பாடலைப் பாடியவர் யார்? 

ஜிக்கி 


இந்த கேள்விகளில் நண்பர் நாச்சியப்பன் கேட்ட முதல் கேள்வியை கேட்டதன்  காரணம் இதுதான். திருமதி அமுதா I.A.S தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அவர்கள், அடிப்படையில் ஒரு வேளாண் அறிவியல் பட்டதாரி. எனவே வேளாண் அறிவியல் பட்டதாரிகளின் இல்லத்தரசிகளுக்கு அவரை பற்றி தெரியுமா என்பதற்காக  இந்த கேள்வியை  கேட்டிருக்கிறார். 

அவர் எதிர்பார்த்தது போலவே நண்பர் T.N.பாலசுப்ரமணியத்தின் துணைவியார் சரியான பதிலை சொல்லி பரிசைப் பெற்றார். 

புதிர்போட்டிக்கு பிறகு நடந்த மற்ற நிகழ்வுகள் அடுத்த பதிவில்.

பி.கு. ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் சென்ற பதிவிற்குப் பின் அடுத்த பதிவை உடனே பதிவேற்ற இயலவில்லை. மன்னிக்க. 

தொடரும்


18 கருத்துகள்:

  1. பதில்கள் சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது நண்பரே...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  2. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு - கேள்விகளுக்கான சரியான விடை தந்ததில் மகிழ்ச்சி. சிலவற்றை நானும் தெரிந்து கொண்டேன்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  3. தெரியாததை தெரிந்து கொண்டேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. அடுத்த கேள்வி நமக்ோ என பயம் என்னை ொற்றிக்ொண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,நன்றி முனைவர் ஜம்புலிங்கம் அவர்களே! ஒருவேளை நீங்கள் கலந்துகொண்டிருந்தால் அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு.

      நீக்கு
  5. சரியான பதில்கள் மூலம் மீண்டும் பழைய பதிவினை நினைவு கூர்ந்து அசைபோட முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவை நினைவு கூர்ந்து அசை போட்டதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. தொடர்ந்து எழுதுங்கள் நினைவில் இருத்த உதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்ந்து எழுத ஊக்குவித்தமைக்கும்நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!

      நீக்கு
  7. எப்படி இந்தப் பதிவை வாசிக்கத் தவற விட்டேன் என்றூ தெரியவில்லை.

    4-வது கேள்வி 'இது பையில் இருந்தால் எதுவும் தங்காது' என்றிருந்தால் சுலபமாகப் புரிந்திருக்கும்.

    ஓட்டைக்கு எப்படி 'ன்' விகுதி கொடுத்தார் என்றூ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! கேள்வியை எளிதில் புரிந்துகொள்ளக்கூடாது என்பற்காக அவ்வாறு கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

      நீக்கு
  8. மற்ற சில கேள்விகளை விட திருமதி அமுதா IAS பற்றிய கேள்வி கேட்கப்பட்டதில் நிரம்ப நியாயம் உண்டு என்பது புரிகிறது, சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கேள்வியைக் கேட்டதில் நியாயம் உண்டு என்று பாராட்டியதற்கு நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  9. சிறு வயது முதலே கேள்வி என்றால் எனக்கு அலர்ஜி. பதில் செதிரியாமல் முழிக்க வேண்டுமே என்று அங்கிருந்து விலகிவிடுவேன். அது இப்போதும் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு TBR.ஜோசப் அவர்களே! கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கடினம் என சொல்வார்கள். அது சிலசமயம் உண்மைதான்.

      நீக்கு