செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 20





நண்பர் நாச்சியப்பன் நடத்திய புதிர்போட்டிக்கு பிறகு இதுவரை நடைபெற்ற சந்திப்புகளில் வராமல் முதல் தடவையாக வந்தவர்களின் அறிமுகம் நடைபெற்றது. நண்பர் மீனாட்சிசுந்தரத்தின் துணைவியார் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.





புகைப்படத்தில் இருப்பவர்கள்: இடமிருந்து  வலமாக நண்பர் மீனாட்சிசுந்தரம் அவரது துணைவியார், மேடையில் நண்பர்கள் நாச்சியப்பன், R.பாலசுப்பிரமணியன் மற்றும் கோவிந்தசாமி

அடுத்து திருமதி சேதுராமன் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 


திருமதி சேதுராமன் அவர்கள். 


இந்த சந்திப்பு Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) சிறப்பாக நடைபெற பேருதவி செய்தவர்கள்  நண்பர் செல்லப்பாவின் அண்ணன் மகன் வேளாண்மைப் பொறியாளர் திரு M.சரவணன் மற்றும் அவரது துணைவியார் முனைவர் R.காயத்ரி ஆகியோர். உதவி செய்த நண்பர் செல்லப்பாவின் குடும்பத்தினரை எங்களது சந்திப்புக்கு அழைத்து நன்றி சொல்லி பரிசு வழங்கி கௌரவித்தோம். 



புகைப்படத்தில் இருப்பவர்கள்: இடமிருந்து வலமாக நண்பர் நாச்சியப்பன், நண்பர் செல்லப்பாவின் அண்ணியார் திருமதி M.V.லட்சுமி, அவரது பெயர்த்தி M.S. ஸ்மிர்த்தி, மருமகள் முனைவர் R.காயத்ரி, பெயரன் செல்வன் M,S,சுமீத், செல்லப்பா, R.பாலசுப்பிரமணியன் மற்றும் கோவிந்தசாமி

  


முனைவர் R.காயத்ரி, அவர்களுக்கு திருமதி T.N. பாலசுப்பிரமணியன் மற்றும் திருமதி R.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கியபோது எடுத்த புகைப்படம். 

சந்திப்பு நடைபெற்ற ஓய்வகத்தில் எங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல்  எல்லா வசதிகளையும் செய்து தந்த ஓய்வகத்தின் மேலாளர் திரு K.செல்வம் அவர்களையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தோம். 


திரு செல்வம் அவர்களுக்கு நண்பர் மீனாட்சிசுந்தரம் பொன்னாடை போர்த்தியபோது எடுத்த புகைப்படம். 


திரு செல்வம் அவர்களுக்கு நண்பர் செல்லப்பா நினைவுப்பரிசு வழங்கியபோது எடுத்த புகைப்படம். அருகில் நண்பர் மீனாட்சிசுந்தரம்

எங்களின் இந்தக் சந்திப்பின் தலைமை விருந்தினாராக நாங்கள் தங்கியிருந்த Great Mount ‘COCO LAGOON’ ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி அவர்களை அழைத்திருந்தார்கள் சந்திப்பை  ஏற்பாடு செய்திருந்த கோவை நண்பர்கள். 

அவர் வந்து எங்களை சிறப்பித்ததில்  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் அவரும் ஒரு வேளாண் அறிவியல் பட்டதாரி. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற அவர் அரசு வேலைக்கு செல்லாமல், இந்த ஓய்வகத்தை நிறுவி சுற்றுலா வருவோர் மகிழ்ச்சியாக இருக்க வசதிகள் செய்து உதவிவருகிறார்.


 திரு சேதுபதி அவர்கள் அரங்கிற்கு வந்தபோது நண்பர் கோவிந்தசாமி  வரவேற்கிறார். அருகே நண்பர் T.N.பாலசுப்பிரமணியன்.


திரு சேதுபதி அவர்களுக்கு நண்பர் R. பாலசுப்பிரமணியன் பொன்னாடை போர்த்திய போது எடுத்த புகைப்படம்.அருகே  நண்பர் கோவிந்தசாமி


திரு சேதுபதி அவர்களுக்கு நண்பர் T.N.பாலசுப்பிரமணியன் நினைவுப்பரிசு வழங்கியபோது எடுத்த படம்.



திரு T.சேதுபதி அவர்கள் சிறப்புரை ஆற்றியபோது எடுத்த புகைப்படம். மேடையில் நண்பர்கள் நாச்சியப்பன், R. பாலசுப்பிரமணியன் மற்றும் கோவிந்தசாமி.

திரு T.சேதுபதி அவர்கள் பேசும்போது இந்த ஓய்வகத்தை தங்களது தென்னந்தொப்பில் நிறுவியதோடல்லாமல், பழனி அருகே ஒரு பெரிய மாந்தோப்பை உண்டாகி அதில் கிடைக்கும் சுவைமிகுந்த  மாம்பழங்களுக்கு Wisdom Fruits எனப் பெயரிட்டு ஏற்றுமதி.  செய்வதாகவும் சொன்னார். 

வேலைக்கு அரசையே நம்பியிராமல், தான் கற்ற வேளாண் அறிவியல் நுணுக்கங்களை தனது தோட்டத்தில் பயன்படுத்தி  வணிக ரீதியாக அவர் வெற்றி பெற்றதை கேட்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.
  
வேளாண் அறிவியல் பட்டதாரிகள் நடத்தும் இந்த சந்திப்பில் வேளாண் அறிவியல் பட்டதாரியான தானும் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி என கூறி விடைபெற்றார். 


தொடரும்


19 கருத்துகள்:

  1. வழக்கம் போலவே விரிவான விளக்கங்கள் ரசிக்க வைத்தன.

    புகைப்படங்கள் எனது அலைபேசியில் இன்னும் திறக்கவில்லை பிறகு வருவேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் கண்டேன் மிகவும் தெளிவாக இருக்கிறது நண்பரே...
    தொடர்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவையும் புகைப் படங்களையும் இரசித்தமைக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜீ அவர்களே!

      நீக்கு
  3. இந்தப் பதிவு பிரமாதம். கல்யாணஅ ஆல்பத்தை நெடுநாள் கழித்துப் புரட்டிப் பார்த்தாலே தனி உற்சாகத்திற்கு உந்தித் தள்ளப் படுவோம்.

    அந்த மாதிரியான உணர்வு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பீரிடுவது நிச்சயம்.

    //
    எங்களின் இந்தக் சந்திப்பின் தலைமை விருந்தினாராக நாங்கள் தங்கியிருந்த Great Mount ‘COCO LAGOON’ ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி அவர்களை அழைத்திருந்தார்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த கோவை நண்பர்கள். //
    அட! ..

    //அவர் வந்து எங்களை சிறப்பித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் அவரும் ஒரு வேளாண் அறிவியல் பட்டதாரி.//

    அடடா! எந்த அளவுக்கு சிறப்பாக யோசிக்கிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவை பாராட்டியமைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்த புகைப்படங்களைத் திரும்பப் பார்க்கையில் கல்யாண ஆல்பத்தை நெடுநாள் கழித்துப் புரட்டிப் பார்க்கும்போது ஏற்படும் தனி உற்சாகம் போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை.

      //அடடா! எந்த அளவுக்கு சிறப்பாக யோசிக்கிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது!//
      உங்களுக்கு பிரமிப்பு ஏற்பட காரணமான நண்பர்களுக்கு நானும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  4. பல நண்பர்களை சந்திப்பதும் அச்சந்திப்பை நினைவு கூர்வதும் மகிழ்ச்சி தரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உண்மையில் பழைய நண்பர்களை சந்தித்த அந்த நிகழ்வை நினைவு கூர்வது மகிழ்ச்சியானது தான்.

      நீக்கு
  5. இவ்வளவு வருடங்கள் கழித்து நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! உண்மையில் நம்முடன் படித்த நண்பர்களை சந்திப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.

      நீக்கு
  6. படங்களுடன் பதிவு அருமை.

    வேலைக்கு அரசையே நம்பியிராமல், தான் கற்ற வேளாண் அறிவியல் நுணுக்கங்களை தனது தோட்டத்தில் பயன்படுத்தி வணிக ரீதியாக அவர் வெற்றி பெற்றதை, தங்கள் மூலம் படிக்க எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,படங்களையும்,பதிவையும் பாராட்டியமைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு சேதுபதி அவர்கள் தான் கற்ற வேளாண் அறிவியல் நுணுக்கங்களை தனது தோட்டத்தில் பயன்படுத்தி வணிக ரீதியாக அவர் வெற்றி பெற்றதை படித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி!

      நீக்கு
  7. உதவிய எல்லோர்க்கும் மரியாதை செய்த பண்பாடு என்னை கவர்ந்தது. தங்கள் புகைப்படம் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,உதவியவர்களுக்கு மரியாதை செய்ததை பாராட்டியமைக்கும் நன்றி திரு சாய்கிருஷ்ணன் அவர்களே! நான் இருக்கும் புகைப்படங்கள் இதற்கு முந்தைய பதிவுகளில் உள்ளன. அவைகளின் இணைப்பு கீழே.
      1. தொடரும் சந்திப்பு 16
      2. தொடரும் சந்திப்பு 17

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவை பாராட்டியமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  9. விளக்கங்கள் சிறப்பு. இந்த மாதிரி இடங்களில் உள்ள ஓய்வகங்களில் தங்குவது ரொம்பவே பிடித்தமானது. குஜ்ராத் மாநிலத்தில் இரண்டு மூன்று நாட்கள் இம்மாதிரி இடங்களில் தங்கியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  10. ஆவணப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்கள்!

      நீக்கு