அந்த ஓய்வகத்தில் அறையை விட்டு வெளியேறும் நேரம் (Check Out Time) பகல் 12 மணி என்பதால், காலை சிற்றுண்டிக்குப் பின் அனைவரும் 10 மணி அளவில் அரங்கத்தில் கூடவேண்டும் என்றும், வரும்போதே அறையை காலி செய்துவிட்டு உடைமகளை எடுத்து வந்தால் அவைகளை அரங்கக்தில் வைத்துவிடலாம் என்றும் நண்பர் பாலு சொல்லியிருந்தார்.
எனவே ஓய்வகத்தின் பதிவேட்டில் எனது கருத்தை எழுதிவிட்டு, அறைக்கு திரும்பினேன் குளித்துவிட்டு உணவு அருந்தும் அறைக்கு சென்று காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சிறிது நேரம் அங்கிருந்த நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அறைக்குத் திரும்பினேன்.
சுமார் 9.30 மணி அளவில் அறையில் உள்ள உடைமைகளை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்கு சென்றேன். அதற்கு அநேக நண்பர்கள் குடும்பத்துடன் அங்கே குழுமியிருந்தனர்.
நண்பர்கள் அனைவரும் வந்தவுடன் நண்பர் நாச்சியப்பன் நண்பர் R.பாலுவின் பெயர்த்தி ஐஸ்வர்யாவிற்கு அன்று பிறந்த நாள் என்பதை அறிவித்து, அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக ஐஸ்வர்யாவையும் நண்பர் பாலுவின் குடும்பத்தாரை மேடைக்கு அழைத்தார்.
அவர்கள் மேடைக்கு வந்ததும், நண்பர் நாச்சியப்பன் முன்பே ஓய்வகத்தில் சொல்லியிருந்த இனியப்பம் (Cake) மேடைக்கு எடுத்துவரப்பட்டது.
மேலே படத்தில் இடமிருந்து வலமாக நண்பர் பாலு, அவரது மருமகன் திரு N.சிவகுமார், பெயர்த்தி ஐஸ்வர்யா, மகள் மற்றும் திருமதி பாலு
செல்வி ஐஸ்வர்யாவை மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து இனியப்பத்தை வெட்டியபோது அனைவரும் எழுந்து கைதட்டி பிறந்த நாள் வாழ்த்து சொன்னோம்.
பின்னர் எங்கள் சார்பாக நண்பர் ஹரிராமன் செல்வி ஐஸ்வர்யாவை வாழ்த்தி ஆசி தந்த போது எடுத்த படம்
பின்னர் கருத்து சொல்லவிரும்பும் நண்பர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம் என நாச்சியப்பன் சொன்னதும், நண்பர்கள் செல்லையா, சேதுராமன், பிச்சைதுரை மற்றும் சரவணன் ஆகியோர் சந்திப்பை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு நன்றி சொன்னார்கள்.
கோவை நண்பர்களோடு சேர்ந்து நண்பர்கள் R,பாலு, நாச்சியப்பன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் இணைந்து திட்டமிட்டு மிக சிறப்பாக சந்திப்பை நடத்தினார்கள் என்பதை என்பதை இங்கு சொல்லியே ஆகவேண்டும்
.
நண்பர் செல்லையா பேசியபோது எடுத்த படம்
நண்பர் சேதுராமன் பேசியபோது எடுத்த படம்
நண்பர் பிச்சைதுரை பேசியபோது எடுத்த படம்
நண்பர் சரவணன் பேசியபோது எடுத்த படம்
நண்பர்கள் பேசிய பிறகு எங்களது 6 ஆவது சந்திப்பு சிறப்பாக நடைபெற பாடுபட்ட நண்பர்களை கௌவரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
தொடரும்
திட்டமிடல் அனைவரும் தொடர்ந்தது மிகவும் அருமை...
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஅறையைக் காலி செய்த பிறகும் கூட ஒரு விழாவைக் கொண்டாடி விட்டீர்களே! கெளரவித்தல் விழாவை கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை.. :))
பதிலளிநீக்குகெளரவித்தலை சீராட்டல் என்று சொல்லலாமா?..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எங்களது நிகழ்ச்சி நிரலில் உள்ளவை முடிய 2 மணி நேரம் தான் ஆகியிருக்கும் . ஆனாலும் அறையை காலை செய்யும் நேரம் 12 மணி என்பதால் ஒருவேளை அதற்குள் முடியாவிட்டால் என்ன செய்வது என்பதால் அறையை 10 மணிக்கு முன்பே காலி செய்துவிட்டோம்.
நீக்குகௌரவித்தல் (Honour) என்பதற்கு ஈடான தமிழ்ச்சொல் மதிப்பளித்தல் என்பதாகும் .அதைத்தான் பயன்படுத்த எண்ணினேன். பின்னர் ஏனோ அதை பயன்படுத்தவில்லை. சீராட்டல் என்பது கொஞ்சுதல் , போற்றி பேணுதல் என்பதற்கு பயன்படுத்தப்படும் என்பதால் அதை கௌரவித்தல் என்பதற்கு ஈடான சொல்லாக எடுத்துக்கொள்ளமுடியாது என்பது என் கருத்து.
நிகழ்வை விளக்கிய விதம் வழக்கம் போலவே அழகு.
பதிலளிநீக்குஅடுத்து நண்பர்களை கௌரவித்த நிகழ்வினை அறிந்திட ஆவலுடன் நானும்...
வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!
நீக்குஸ்வாரஸ்யங்கள் மேலும் தொடரட்டும் ....
பதிலளிநீக்குவருகைக்கும், ஊக்குவிபப்தற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்குஇனியப்பம் ... ஆஹா...
பதிலளிநீக்குவருகைக்கும்,இனியப்பம் என்ற சொல்லாடலை இரசித்தமைக்கும் நன்றி திரு ஸ்ரீராம்!
நீக்குஇனியப்பம்.... புதிய வார்த்தை எனக்கும்.
பதிலளிநீக்குநிகழ்வுகள் அனைத்தையும் சொல்லும் உங்கள் பாணி தொடரட்டும். சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குவழக்கம்போல அருமையான பதிவு. எழுத்து நடையால் எங்களைக் கட்டிப்போட்டிவிடுகின்றீர்கள் ஐயா. பல சொற்களுக்கு அருமையான தமிழ்ச்சொல்லை பயன்படுத்தும் விதம் பாராட்டிற்குரியது.
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! கூடியவரை தமிழ்ச் சொல்லை பயன்படுத்துவது என்பது வழக்கம். அதை பாராட்டியமைக்கும் நன்றி!
நீக்குநினைவலைகளை திரும்பிப்பார்ப்பது ஒரு சுகம்.
பதிலளிநீக்குநண்பர்களை கவுரவிக்கும் பதிவிற்காக காத்திருக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் தொடர இருப்பதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!நண்பர்களை கௌரவித்த நிகழ்வை பதிவிட்டுவிட்டேன்.
நீக்கு