வியாழன், 26 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 24





எங்களது ஒவ்வொரு  சந்திப்பின்  முடிவிலும் அந்த சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்திய கோவை நண்பர்களான மீனாட்சிசுந்தரம், T.N.பாலசுப்பிரமணியன், செல்லப்பா ஆகியோருக்கு நினைவுப் பரிசு தந்து சிறப்பித்தோம்.




தஞ்சையில் நடந்த பொன்விழா சந்திப்பின் பொது இந்த 6 ஆவது சந்திப்பை கோவையில்தான் நடத்த எண்ணினோம். ஆனால் கோவை நண்பர்கள் சந்தடி மிகுந்த பரபரப்பான கோவையை விட, அமைதியான பொள்ளாச்சியே சிறந்தது என முடிவு செய்து இங்கே நடத்த ஏற்பாடு செய்தார்கள்.   

அவர்களுடன்  வழக்கம்போல் எல்லா சந்திப்புகளிலும் ஓடோடி வந்து உதவும் தஞ்சை நண்பர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், சரவணன் மற்றும் சிதம்பரம் வாழ் நண்பர்கள் நாச்சியப்பன், கோவிந்தசாமி ஆகியோருக்கும் நினைவுப்பரிசு தந்து சிறப்பித்தோம்.  அந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படங்கள் கீழே.




நண்பர் மீனாட்சிசுந்தரத்திற்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி நாச்சியப்பன். படத்தில் இடமிருந்து வலமாக திருமதி நாச்சியப்பன், நாச்சியப்பன், மீனாட்சிசுந்தரம், திருமதி மீனாட்சிசுந்தரம்




நண்பர் T.N. பாலசுப்பிரமணியத்திற்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி கோவிந்தசாமி படத்தில் இடமிருந்து வலமாக கோவிந்தசாமி, திருமதி கோவிந்தசாமி, திருமதி T.N. பாலசுப்பிரமணியம், T.N. பாலசுப்பிரமணியம், நாச்சியப்பன் 




நண்பர் செல்லப்பாவிற்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி பழனியப்பன். படத்தில் இடமிருந்து வலமாக கோவிந்தசாமி, திருமதி பழனியப்பன்,செல்லப்பா, நாச்சியப்பன்




நண்பர் R.பாலசுப்பிரமணியத்திற்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி சரவணன்,படத்தில் இடமிருந்து வலமாக கோவிந்தசாமி, திருமதி சரவணன், திருமதி R. பாலசுப்பிரமணியம், R.பாலசுப்பிரமணியம், நாச்சியப்பன்.




நண்பர் சரவணனுக்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி முத்துகிருஷ்ணன். படத்தில் இடமிருந்து வலமாக கோவிந்தசாமி, திருமதி முத்துகிருஷ்ணன், திருமதி சரவணன், சரவணன், நாச்சியப்பன்.




நண்பர் நாச்சியப்பனுக்கு நினைவுப் பரிசு தருபவர் திருமதி  R. பாலசுப்பிரமணியம். படத்தில் இடமிருந்து வலமாக கோவிந்தசாமி, திருமதி  R. பாலசுப்பிரமணியம், திருமதி நாச்சியப்பன், நாச்சியப்பன்.




நண்பர் கோவிந்தசாமிக்கு நினைவுப் பரிசு தருபவர், வீராசாமி.  படத்தில் இடமிருந்து வலமாக வீராசாமி. திருமதி கோவிந்தசாமி, கோவிந்தசாமி, நாச்சியப்பன். 

நிறைவாக, அடுத்த சந்திப்பான 7 ஆவது சந்திப்பை எங்கு நடத்துவது என கருத்து கேட்டபோது நண்பர் நாச்சியப்பனும் நண்பர் பாலுவும் சென்னை என்று சொன்னதும், எல்லோரும் அதை வழிமொழிந்தனர்.மேலும் அந்த சந்திப்பை 2020 ஆம் ஆண்டில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னதையும் அனைவரும் ஆமோதித்தனர்,

உடனே நாச்சியப்பன் என்னையும் மற்ற சென்னை வாழ் நண்பர்களையும் மேடைக்கு அழைத்தபோது, நான் முதலில் சென்னையில் அடுத்த சந்திப்பு நடத்தவேண்டாம் என்று சொன்னேன். காரணம். ஏற்கனவே மற்ற சந்திப்புகளை நண்பர்கள் அருமையாக நடத்தியிருக்கும்போது நம்மால் அவ்வாறு நடத்தமுடியுமா என்ற ஐயம்தான். ஆனால் நண்பர்கள் வற்புறுத்தியதின் பெயரில் சந்திப்புக்கு வந்திருந்த சென்னை நண்பர்கள் மேடைக்கு சென்றோம். 

நண்பர் நாச்சியப்பன் சென்னை நண்பர்களால் அடுத்த சந்திப்பை சிறப்பாக நடத்த முடியும் என்றும் அதற்கு வழக்கம்போல் தங்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டும் என்றும் சொன்னார். பிறகு என்னையும் மற்ற நண்பர்களையும் பேசச் சொன்னார். நாங்கள் அனைவரும் அடுத்த சந்திப்பை சிறப்பாக நடத்துவதாக உறுதியளித்தோம். 

அப்போது எடுத்த படங்கள் கீழே.




படத்தில் இடமிருந்து வலமாக  நாச்சியப்பன், நான், பிச்சைதுரை, செல்லையா, ஹரிராமன், சேதுராமன் 




படத்தில் இடமிருந்து வலமாக  நான், பிச்சைதுரை, செல்லையா, ஹரிராமன், சேதுராமன்


அதற்குப் பிறகு அனைவரும்  குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வெளியே இருந்த அடுக்கு இருக்கை கொண்ட வட்டரங்கத்திற்கு சென்றோம் (Amphitheatre).


தொடரும்


16 கருத்துகள்:

  1. ஆஹா... அடுத்த சந்திப்பு உங்கள் ஊர் சென்னையிலா! நீங்கள் சிறப்பாகவே நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

    இந்த பொள்ளாச்சி சந்திப்பினை சிறப்புற நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,சந்திப்பை நடத்திய நண்பர்களை பாராட்டியமைக்கும்,வாழ்த்திமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! அடுத்த சந்திப்பை சிறப்பாக சென்னையில் நடத்துவோம் என்ற தங்களின் வாக்கை மெய்ப்பிப்போம்.

      நீக்கு
  2. 33 வருடங்களுக்கு பின் சந்தித்த எனது நண்பர்களின் நினைவும் வருகிறது தங்களது ஒவ்வொரு பதிவின் போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எனது பதிவு தங்களின் நண்பர்களை தாங்கள் 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வை நினைவூட்டியது என அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு
  3. படங்களும், விளக்கிய விதமும் அருமை. அடுத்த சந்திப்பு சென்னையில் நடத்தி பாராட்டைப் பெற எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டியமைக்கும்,நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!அடுத்த சந்திப்பை சென்னையில் நடத்தி பாராட்டைப் பெற வாழ்த்தியமைக்கும் நன்றி!

      நீக்கு
  4. //நான் முதலில் சென்னையில் அடுத்த சந்திப்பு நடத்தவேண்டாம் என்று சொன்னேன். காரணம். ஏற்கனவே மற்ற சந்திப்புகளை நண்பர்கள் அருமையாக நடத்தியிருக்கும்போது நம்மால் அவ்வாறு நடத்தமுடியுமா என்ற ஐயம்தான்.. //

    இந்த நீண்ட தொடர் பதிவுகளைப் படித்த பொழுது உங்களின் ஆரம்பத் தயக்கம் புரிகிறது. எல்லா சிறப்புகளும் திட்டமிடுதல்களும் இப்படியான தயக்கங்களுக்குப் பிறகே ஆரம்பிக்கிறது எனது அனுபவ உண்மையும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் கருத்து சரியே. நமக்கு முன் நடத்தியவர்கள் சிறப்பாக செய்திருக்கும்போது அந்த அளவுக்கு நம்மால் செய்யமுடியுமா என்ற தயக்கம் வந்தது உண்மை. ஆனாலும் நண்பர்களின் துணை இருக்கும்போது முயன்றால் முடியாதது இல்லை என்பதால் ஒத்துக்கொண்டோம்.

      நீக்கு
  5. சந்திப்பு நிகழ்வுகள் + படங்கள் எல்லாம் வழக்கம்போல அருமை. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. கோவையை விட பொள்ளாச்சி சிறந்த தெரிவு.  சென்னையிலும் சிறப்பாக நடத்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,நன்றி திரு ஸ்ரீராம்.‘கோவையை விட பொள்ளாச்சி சிறந்த தெரிவு.’என்ற தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன்,சென்னையில் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்தியமைக்கும் நன்றி!

      நீக்கு
  7. தாங்கள் நடத்திய சென்னை சந்திப்பை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் அதற்கு கீழே உள்ள விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! இன்னும் சென்னையில் எங்களது சந்திப்பு நடைபெறவில்லை இந்த ஆண்டு நடக்க இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  8. "இறுதியாக அடுத்த சந்திப்பான....." இதில் ஓர் ஐயம் ஐயா. சில அறிஞர்கள் என்னிடம் "முடிந்தவரை இறுதியாக எனப்படுத்த வேண்டாம், நிறைவாக என்று பயன்படுத்த முயற்சி செய்யுங்கள், அது நேர்மறைச் சிந்தனையைத் தரும்" என்று கூறியபடி அவ்வாறே பயன்படுத்திவருகிறேன். இதில் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். உங்களின் அடுத்த சந்திப்பு சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தாங்கள் கூறியபடி நிறைவாக என்பது நேர்மறை சிந்தனையை தரும் என்பதில் ஐயம் இல்லை.

      தங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ‘இறுதி’க்கும் ‘நிறைவு’க்கும் உள்ள பொருளை அகரமுதலியில் தேடியபோது கீழ்க்கண்ட பதில்கள் கிடைத்தன

      இறுதிஎன்பதற்குமுடிவு(End,Termination),அழிவு(Death,Extinction),வரையறை(Limit,Bound)என்றும்நிறைவுஎன்பதற்குமுழுமை(Fullness,Completeness,Perfection),மிகுதி(Abundance,Copiousness),நிரப்புகை(Filling),பொந்திகை(Satisfaction,Contentment),மகிழ்ச்சி(Joy,Gladness,)அமைதி(Peace) என்றும் பொருளாம்.

      இந்த பதிவில் கடைசியில் என்பதைக் குறிக்க இறுதியாக (At last) என்று எழுதியிருந்தேன். ஆனால் தங்களின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் இனி நிறைவாக என்றே குறிப்பிட இருக்கிறேன்.அவ்வாறே பதிவிலும் திருத்தம் செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

      நீக்கு