வியாழன், 7 மே, 2020

தொடரும் சந்திப்பு 27


மாசாணி அம்மனின் சிலை படுத்த நிலையில் அங்கு ஏன் அமைந்துள்ளது என்பது பற்றி மூன்றுவிதமான வரலாறுகள் உள்ளன. அதில் எல்லோரும் சொல்லும் வரலாற்றை இங்கு தரலாமென நினைக்கிறேன். 



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை நன்னன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்திருக்கிறான். அப்போது ஒரு நாள் ஒரு முனிவர் ஒரு மாங்கனியை கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து ‘தாங்கள் மிகவும் சக்தியும் சுவையும் வாய்ந்த இக்கனியை உண்டுவிட்டு அதனுடைய கொட்டையை ஆற்றில் எறிந்து விட வேண்டும்.’ என்று கூறியிருக்கிறார். 

மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்திருந்தாலும், அந்த மாங்கனியை சுவைத்த பிறகு அதனுடைய சுவையை மிகவும் விரும்பியதால் முனிவர் அறிவுரைப்படி செய்யாமல், அந்த மாங்கனியின் கொட்டையை தன்னுடைய அரண்மனையில் நட்டுவைத்து மிகவும் கவனமாக வளர்த்து வர  நாளடைவில் அது வளர்ந்து மிகப் பெரிய மரமாகிவிட்டதாம். 

ஆனால் வளர்ந்து பெரிய மரமாக ஆன அந்த மாமரத்தில் பூக்கள் மட்டும் தோன்றி  உதிர்ந்தனவே தவிர பிஞ்சுகளோ காய்களோ ஏற்படவில்லையாம். காத்திருந்து காத்திருந்து ஏமாந்த அம் மன்னன், அந்த கனி கொடுத்த முனிவரைத்தேடி அழைத்து வந்து அந்த மரத்தில் காய்கள் காய்க்காத காரணம் பற்றி கேட்டானாம். 

அதற்கு அவர் ‘மன்னா! நான் தங்களுக்கு கொடுத்த கனி, என்னுடைய குருநாதர் எனக்கு விரும்பி கொடுத்த கனி.அதை நான் உண்பதைக் காட்டிலும் நாட்டை ஆளுகின்ற மன்னனாகிய தாங்கள்  சுவைப்பது தான் சாலச்சிறந்தது என்றுதான் நான் உங்களிடம் கொடுத்தேன். 

நான் கூறியதற்கு மாறாக நீங்கள் கொட்டையை ஆற்றில் வீசாமல் நட்டு வைத்தது தவறு. அந்த கனியின் கொட்டையை நட்டால்   ஒரு முறை தான் காய்த்து பழமாகும். மீண்டும் அது காய்க்காது.அப்படி காய்த்தாலும் ஒரு நாட்டில் விளைந்த கனியை மற்றொரு நாட்டில் உள்ளவர்கள் தான் உண்ண வேண்டுமே ஒழிய அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்தக் கனியை உண்ணக்கூடாது.’ என்றாராம். 

அப்படியெனில் இந்த மரத்தில் விளையும் கனியை யார் உண்ண வருவார்கள் என்று முனிவரிடம் கேட்டதற்கு அவர்  வேறு நாட்டிலிருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த கனியை உண்பாள். எண்பெரும்பேறு பெற்று சகல சக்தியும் வாய்ந்த அம்மன் கன்னிப் பெண்ணாக வந்து இந்த மரத்தின் கனியை உண்பாள். அதுவரை காத்திருக்கவும்.’ என்று கூறி விடைபெற்றுச் சென்றுவிட்டாராம். 

ஆனால் அந்த முறையும் மன்னன் முனிவரின் பேச்சைக் பொருட்படுத்தாமல் அந்த கனியை தானே சுவைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, விளையப்போகும் ஒரே ஒரு கனியை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு 24 மணி நேரமும் பயங்கர காவல் போட்டிருந்தானாம் .


தொடரும்


12 கருத்துகள்:

  1. மாங்கனி கதை வெகுசுவாரஸ்யமாக செல்கிறது தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. தொடர்கிறேன். வரலாற்றுக் கதைகள் என்றைக்குமே சுவாரஸ்யம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  4. மாங்கனியின் கதை - ஸ்வாரஸ்யம். மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. முதன்முறையாக எனது தளத்திற்கு வந்தமைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் நன்றி திருமதி உமாமகேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  7. மாங்கனியைவிட கதை நன்கு சுவையாக இருக்கிறதே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கதையை இரசித்தமைக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே!

      நீக்கு