ஞாயிறு, 31 மே, 2020

தொடரும் சந்திப்பு 30

அறிவுத் திருக்கோவில் இருந்த அருட்பெருஞ்சோதி நகரிலிருந்து நண்பருடன் புறப்பட்டு பொள்ளாச்சி சென்றடைந்தோம். அங்கு அடையார் ஆனந்த பவனில் காஃபி அருந்திட்டு புறப்பட்டு போக்குவரத்து நெரிசலில் நீந்தி கோவையை சென்றடைந்தோம்.கோவை இரயில் சந்திப்பு நிலையத்திற்கு அருகில் இருந்த  அடையார் ஆனந்த பவனில் நண்பருடன் இரவு உணவை முடித்துவிட்டு மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து சென்னை புறப்படத் தயாராக இருந்த நீலகிரி விரைவு இரயிலில் ஏறினேன். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமால் இரயில் புறப்படும் வரை காத்திருந்து என்னை வழியனுப்பிவைத்தார் நண்பர், 

காலை 5 மணி அளவில் சென்னை அடைந்து வீட்டிற்கு Call Taxi பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். 

காலையில் குளித்து முடித்து நண்பர் முத்தையாவை கைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர்  பொள்ளாச்சி சந்திப்புக்கு    வரவில்லையாதலால் சந்திப்பு நன்றாக நடந்தது என்று சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், அவர் உடனே ‘கவலை வேண்டாம். நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்றார். ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்பது தானே உண்மை.

பின்னர் காலை சுமார் 10 மணிக்கு என்னை பொள்ளாச்சி (வலைக்கொம்பு நாகூர்) Great Mount ‘COCO LAGOON ஓய்வகத்திலிருந்து ஓய்வக மேலாளர்  திரு செல்வம்  தொடர்பு கொண்டு, ‘சார். நீங்கள் ஓய்வகத்தின் பதிவேட்டில் தங்களின் கருத்தை  பதிவு செய்ததுபோல் சுற்றுலா பயணிகளுக்கு தங்களது பயண அனுபவங்களை சொல்லும் Tripadvisor எனப்படும் இணையதளத்தில் கருத்தை பதிவு செய்யவேண்டும்.’ எனக் கேட்டுக்கொண்டார். 

நானும் சரி என சொல்லிவிட்டு எனது கருத்தை Tripadvisor இணையதளத்தில் பதிவு செய்தேன். அதை அவர்கள்17-09-2018  அன்று வெளியிட்டார்கள்.  


அந்த கருத்து இதோ. 

We the Annamalai University Agriculture Graduates of 1966 batch with families numbering 60 had a wonderful time in this resort on 31st August and 1st September 2018.

The resort is situated in a lovely location away from Pollachi, totally surrounded by Coconut grove. The scenic beauty of this place is really amazing!

At the resort we had a hearty welcome from the courteous staff who always wear smiles on their faces. From the day we stepped in the resort till our departure we were looked after well by all the staff members of this resort, right from the Resort Manager Mr Selvam to the room boy.

The rooms are bigger, tidy and shipshape and the delicious food we had was really mouth-watering. Some of us used the swimming pool and enjoyed the swimming. In the evening we were enthralled by the Bharatha Natyam and theatrical dance performed by the ‘D Team’ of the resort.

As our stay was short we could not utilise the Wellness centre and Boating facility and we may have to visit again to enjoy all the facilities.

The resort management has not given me an opportunity to complain is the only complaint I can make.

If I am permitted to quote the famous saying of Persian-language poet Amir Khusrau, I will definitely say that If there is a paradise on earth, it is here, it is here, it is here.

Thank you Great Mount Coco Lagoon for having provided us a 5 Star facility though our stay was only for a shorter period.

எனது கருத்தை படித்துவிட்டு திரு செல்வம் அவர்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

தொடரும் 


10 கருத்துகள்:

 1. அருமையான திட்டமிடல் ஐயா... Tripadvisor இணைப்பும் கொடுத்ததற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. //நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமால் இரயில் புறப்படும் வரை காத்திருந்து என்னை வழியனுப்பிவைத்தார் நண்பர்//

  இதுதான் உண்மையான நட்பு
  தொடர்கிறேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்ககும் ,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

   நீக்கு
 3. சிறப்பான விஷயம் ஐயா - தங்குமிடம் பற்றி Tripadvisor தளத்தில் எழுதியது. அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம் இந்த Review.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்ககும் ,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. நமது நேர்மறை கருத்துக்கள் அவர்களுக்கு மேலும் பல சுற்றுலா பயணிகளை வாடிக்கையாளர்களாக பெற உதவும்.

   நீக்கு
 4. பதிவைப் பகிர்ந்த விதம் அருமை. இதுபோன்ற கருத்துகள் அவர்களுக்கு இன்னும் ஊக்கத்தைத் தரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

   நீக்கு
 5. அட! சென்னை வந்து சேர்ந்தாயிற்றா?..

  அறிவுத் திருக்கோயிலுக்கு நீங்கள் செல்லாவிட்டாலும் திருக்கோயில் பற்றி ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

  இனித் தொடர்வதையும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! அறிவுத் திருக்கோயிலுக்கு திரும்பவும் சென்று விரிவாக எழுத நினைத்ததால் அதுபற்றி குறிப்பு ஏதும் தரவில்லை.

   நீக்கு