என்னிடம் உள்ள கடவுச்சீட்டு (Passport) இன்னும் ஆறு
மாதங்களில் காலாவதியாக இருப்பதால் அதை புதுப்பிக்க
விரும்பினேன். அதற்கு தேவையான சான்றிதழ்கள்
அளிப்பது பற்றி குழப்பம் இருந்ததால், எனது அண்ணன்
மகன் திரு ஞானவேலனின் ஆலோசனைப்படி சென்ற
பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் ஒரு முகவரை அணுகினேன்.
காரணம் நாம் என்னதான் விண்ணப்ப படிவத்தை சரியாக
நிறைவுசெய்திருந்தாலும்,அதை நமது வட்டார
கடவுச்சீட்டுஅலுவலகம் ஏதாவது காரணங்களைச்
சொல்லிதிருப்பிவிடுமோ என்ற அச்சம்தான்.
அந்த முகவர்,என்னிடம்‘சார் விண்ணப்ப படிவம் தரும்
நாளை on line மூலம் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு
செல்வது நல்லது. அப்படி சாதாரணமாக முறையில்
பதிவு செய்தால் விண்ணப்பம் தரமூன்று மாதம்
காத்திருக்க வேண்டியிருக்கும்.Thatkal எனப்படும்
முறையில் பதிவு செய்தால் ஒரு மாதத்தில்
விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு எது சௌகரியம்?’
என்றபோது, ‘Thatkal முறையிலேயே விண்ணப்பிக்க
ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.
அந்த முகவரும் எனக்காக மார்ச் மாதம் 17 ஆம் நாள்,
வட்டார கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பம்
தர, on line மூலம் பதிவு செய்தார்.
விண்ணப்பத்தோடு தர பழைய Passport,நம்முடைய
சமீபத்தில் எடுக்கப்பட புகைப்படம்,மற்றும் இருப்பிட
சான்றிதழ் தரவேண்டும்என்றார். அதற்காக Ration Card
நகலும் வாக்காளர் அடையாளச்சீட்டின் நகலும்,
நாம் கணக்கு வைத்திருக்கும்வங்கியிலிருந்து நாம்
எப்போதிலிருந்து கணக்கு வைத்திருக்கிறோம் என்பதோடு
நம்முடைய முகவரியும் நம்முடைய புகைப்படமும்
உள்ள சான்றிதழும் தரவேண்டும் என்றார். மற்றும்
கடந்த ஆறு மாதத்திற்கான வங்கிக்கணக்கின்
Statement ம் வேண்டும் என்றார்.
சரி என்று சொன்னாலும் எனக்கு ஒரு சந்தேகம்.
Ration Card ல் நமது முகவரி இருக்கும்போது
மற்றவைகள் எதற்காக என்று.
வாடிக்கையாளர்களைப் பற்றி சொல்லும்போது
‘Customer is always right’ என்பார்கள்.
அதை மாற்றி ‘Government is always right’
என சொல்லவேண்டும் போல என
நினைத்துக்கொண்டு அவர் கேட்டவைகளைக்
கொடுத்தேன்.
‘சரி நீங்கள் 17 ஆம் தேதி மார்ச் மாதம்
காலை 9 மணிக்கு இங்கு வந்து விடுங்கள்’
என்றார்.
முகவர் சொன்ன 17 ஆம் தேதி மார்ச்
(அதாவது நேற்று) காலை 9 மணிக்கு
அவரது அலுவலகம் சென்று பூர்த்தி செய்யப்பட்டிருந்த
விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அவரது
சேவைக்கான கட்டணத்தையும் அரசுக்கு
கட்டவேண்டிய கட்டணமான ரூபாய் 2500 த்தையும்
கொடுத்தேன்.அவர் எனக்காக ரூபாய் 2500 க்கான
வங்கி வரைவு காசோலையை (Bank’s Demand Draft)
வாங்கி வைத்திருந்தார்.
அவர் என்னிடம் ‘எங்களை எல்லாம் வட்டார
கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ளே விடமாட்டார்கள்.
நீங்கள் இதை எடுத்துக்கொண்டு அங்கு சென்று
இரண்டாம் தளத்தில், மூத்த குடிமக்களுக்காக
உள்ள Counter ல் காட்டுங்கள். அவர்கள் இதில்
ஒரு வரிசை எண் உள்ள slip ஐ ஓட்டுவார்கள்.
பின்பு நீங்கள் உங்கள் முறை வரும்போது உங்கள்
விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் காட்டினால்,
சரிபார்த்துவிட்டு கையொப்பமிட்டு கொடுப்பார்கள்.
பின்பு விண்ணப்பத்தையும் காசோலையையும்
வேறொரு Counter ல் கொடுத்து இரசீது பெற்று
திரும்பிவிடலாம் ’என சொன்னார்.
அவர் சொன்னதை கேட்டதும் ‘பரவாயில்லையே.
நமது அரசும் குடிமக்கள் நலன் கருதி இந்த Passport
புதுப்பிக்கும் முறையை இவ்வளவு
சுலபமாக்கிவிட்டார்களே’ என நினைத்துக்கொண்டு,
அங்கிருந்து மகிழ்ச்சியோடு Passport அலுவலகம்
சென்றேன்.
அங்கு சென்றதும் தான் தெரிந்தது நாம் நினைத்தது
தவறு என்று!!
தொடரும்
நல்ல விவரனை! எழுதுங்க எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
பதிலளிநீக்குஎனது பெற்றோர்களுக்கும் கடவுச்சீட்டு புதுப்பிக்கிற வேலையில இருக்கோம். ஆமா, இந்த ஆறு மாதம் வங்கி கணக்கின் வரவு, செலவு கணக்கெல்லாம் என்னாதுக்கு.
ஓஹோ! அது ரூல்ஸ் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது போல! என்னமோ போங்க படிக்காதவிங்கள இந்த மாதிரி டைட்டான ரூல்ஸ் எல்லாம் வைச்சு இப்படியும் ஒரு நாடு படுத்தி எடுக்கக் கூடாது. உள்ளர மயக்கம் போட்டு விழுற நிலமைக்கு போயிருக்குமே :-) ...
எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குக் க்வலைஇல்லை!
பதிலளிநீக்குஎன்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளாக் காத்திருக்கிறேன்!
எனக்கு ஐந்தே நாட்களில் "தட்கல்"மூலம்
பதிலளிநீக்குகிடைத்தது.
நான் சென்னை கடவுச் சீட்டு அலுவலகத்தில் நேரடியாக
அணுகினேன், அனைத்து ஆவணங்களுடன்.ஆய்வாளர் அங்கேயே சரிபார்த்து பழைய கடவுச்சீட்டில் "நீக்கம்" (Cancelled)என அச்சிட்டு திருப்பி அளித்தார்.
சரியாக ஐந்தாம் நாளில் துரித அஞ்சல் முலம் பெற்றேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். போன வியாழன் நாங்கள் இதே தத்கல் பாஸ்போர்டுக்காக சீனியர் சிடிசன் கவுண்டரில் நின்று 9.30 காலையிலிருந்து சாயந்திரம் 5 மணி வரை அலைக்கழிக்கப் பட்டோம்.
பதிலளிநீக்குநல்ல வேளை இன்று வந்துவிட்டது.
இந்த இருப்பிட ச்சான்றிதழ்க்காக நான் அலைந்தது ஆண்டவனுக்குத் தெரியும். சாமி, கடவுளே.
அரசின் செயல்பாடுகள் குடிமக்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டுமே தவிர தொந்தரவு தருவதாக இருக்கக்கூடாது என்பதே இப்பதிவின் நோக்கம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தெக்கிக்காட்டான் அவர்களே!
பதிலளிநீக்குஐந்து ஆண்டுகள் என்பது விரைவில் ஓடி விடும். அதற்குள் இந்த அலைக்கழிப்பு மறைந்து,வீட்டில் இருந்தே கடவுச்சீட்டை புதுப்பிக்கும் நாள் வரும் என நம்புவோம்.
பதிலளிநீக்குஎன்ன ஆயிற்று என்று அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு எண்ணத்துப்பூச்சி அவர்களே! தாங்கள்கொடுத்துவைத்தவர்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் அவ்வாறு நடக்கவேண்டும் என்பதே என் அவா.
அவர்களே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வல்லிசிம்ஹன் அவர்களே!
பதிலளிநீக்குஒரே வாரத்தில் Passport கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். எனக்கும் அவ்வாறே வரும் என நினைக்கிறேன்.
தங்களை திரு வல்லிசிம்ஹன் என விளித்ததற்கு, மன்னிக்கவும் திருமதி வல்லிசிம்ஹன் அவர்களே!
பதிலளிநீக்குAs the passport has been submitted under tatkal scheme normally within 5 days the renewed passport would reach the applicant. Under Tatkal scheme police verification is undertaken post issue of renewed passport unlike in other cases wherein the passport is issued only after police verification.. Bank statement is insisted upon only to confirm that the applicant has resided in the address for a period of one year continuously ( despite all the loop holes in this method this is widely accepted ) . In my case renewed passport was received in one months time after police verification at two places ( coimbatore/Tirupathy) as I applied for renewal in about six months time after reaching Tirupathy . It has been rightly observed by you that steps should be taken to ensure that Passports are issued without much hassles. I cannot but wonder that why is it that only ordinary citizens find it difficult to procure a single passport for legitimate purposes whereas there have been several cases reported ( The recent one being that of Hasan Ali ) where some persons are in possession of more than one passport issued in India ! Vasudevan
பதிலளிநீக்குவருகைக்கும் விவரத்திற்கும் நன்றி திரு வாசு அவர்களே!
பதிலளிநீக்குஇங்கே நான் சொல்லவந்தது Passport ஐ புதுப்பிக்கும்போது உள்ள தொல்லைகள் பற்றித்தான்.
எனினும் புதுப்பிக்கப்பட்ட Passport ஐந்து நாட்களில் வந்தால்
மகிழ்ச்சிதான்.