வியாழன், 19 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 5

அந்த வங்கியின் கிளைக்கு வந்து சேர்ந்த புதிய
மேலாளர் வாடிக்கையாளர்களுக்கு நல்ல
சேவையை வழங்க விரும்பினார்.அதன் முதல்
கட்டமாக, உள்ளூர் மக்களுக்கு புரியும்படியாக
வங்கியின் ‘கவுண்டர்’ மேல் வைக்கப்பட்டிருந்த
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தகவல்
பலகைகளுக்கு பதிலாக தமிழில் தகவல்
பலகைகளை வைக்க விரும்பினார்.

அது பற்றி சார்பு மேலாளரிடம்(Sub Manager)
கலந்து ஆலோசித்தபோது,அவரும் அதை
ஆமோதித்து,ஆங்கிலத்தில் உள்ள சொற்களுக்கு
சரியான தமிழ் சொற்களை எழுதலாம்
எனக்கூறினார்.

ஆனால் மேலாளரோ,ஆங்கிலத்துக்கு ஈடான
தமிழ் சொற்களை மொழிபெயர்த்து எழுதினால்,
வாடிக்கையாளர்களுக்கு புரியாமல் போகலாம்.
எனவே மொழிபெயர்க்காமல்,ஆங்கிலத்தில்
உள்ளவைகளை அப்படியே தமிழில் எழுதிவிட
ஏற்பாடு செய்து விடுங்கள்.’என கூறிவிட்டார்.
அதாவது Translation வேண்டாம்.
Transliteration போதும்.
எனக்கூறிவிட்டார்.

அவ்வாறே,சார்பு மேலாளரும் தகவல் பலகையை
தமிழில் வைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

மறுநாள் காலை மேலாளர் கிளைக்கு வந்தபோது
எல்லா தகவல் பலகைகளிலும் தான் சொன்னபடியே
தமிழில் எழுதப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியுடன்
தனது அறைக்கு சென்றார்.

வங்கியின் அலுவலக நேரம் தொடங்கியதும்,
வழக்கம் போல் வாடிக்கையாளர்கள்
வரத்தொடங்கினர்.மேலாளர் தனது அறையிலிருந்து
பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட‘கவுண்டரில்’ கூட்டம்
அதிகமாயிருந்தது.நேரம் ஆக ஆக வங்கிக்குள்
ஏகப்பட்ட கூட்டம் சேர்ந்துவிட்டது.ஆனால் வெளியே
ஒரே சத்தம். வங்கி அலுவலர்கள் ஏதோ பேசி
சமாளித்துக்கொண்டு இருந்தார்கள்.

மேலாளருக்கோ சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
தாம் வந்து பதவி ஏற்றதும் செய்த ஒரு சிறு
மாற்றத்தால், வங்கிக்கு அதிக வாடிக்கையாளர்கள்
வந்துவிட்டனரே என்று.

ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
அப்போது உள்ளே வந்த வங்கியின்
வாடிக்கையாளரான டாக்டர் ஒருவர் உள்ளே வந்து
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ‘என்ன சார்,
இந்த சேவையெல்லாம் வங்கியில்
தொடங்கிவிட்டீர்களா?’எனக் கேலியாகக் கேட்டார்.

மேலாளருக்கோ ஒன்றும் விளங்கவில்லை.அந்த நேரம்
பார்த்து உள்ளே வந்த சார்பு மேலாளர்,‘சார்.
நாம் தமிழில், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே
எழுதியது தப்பான பொருளைக்கொடுத்து,
வந்தவர்களுக்கு பதில் சொல்லவே நேரம்
போதவில்லை.நான் சொன்னது போல் மொழி
மாற்றம் செய்திருக்கலாம்.’என்றார்.

மேலாளர் ‘அப்படி என்ன ஆகிவிட்டது?’என்றதும்,
சார்பு மேலாளர், ‘சார்,‘Cheques & Bills’என்பதை
அப்படியே தமிழில் ‘செக்ஸ் & பில்ஸ்’ என்று
எழுதியதால் வந்த வினை. யாரும் ‘கவுண்டரில்’
உட்கார்ந்து வேலை பார்க்கமுடியவில்லை.
மொழிமாற்றம் செய்யவேண்டாமென்றால்
பலகைகளில் பழையபடி ஆங்கிலத்திலேயே
எழுதிவிடலாம்.’ என்றார்.

அப்போதுதான் டாக்டர் கேட்டதின் அர்த்தம்
புரிந்தது மேலாளருக்கு.

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

12 கருத்துகள்:

  1. ரசிக்கும்படி இருந்தது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ‘Cheques & Bills’என்பதை
    அப்படியே தமிழில் ‘செக்ஸ் & பில்ஸ்’ என்று
    எழுதியதால் வந்த வினை.
    ஹா.ஹா,ஹா....சிரித்து வயிறு வலிக்கிறது.சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உங்களுக்கு இந்த பதிவு, வயிற்று வலியை உண்டாக்கியது அறிந்து மகிழ்ச்சியே!

    பதிலளிநீக்கு
  5. Humor apart, there is an element of slight truth too . For once while once inspecting a branch in Haryana ,
    I found long strips of Nirodhs (Contraceptives) dangling near cashiers cabin for free distribution amongst public . This way we participated in a national programme. This was sometime in 1987. It may also be recalled that In Delhi, Syndicate Bank sold Tirupathi Ladoos for sometime during early 1990s. Bankers now a days perform multifarious jobs that are not connected to Banking. Vasudevan

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! வங்கிகளின், வங்கி அல்லாத மற்ற சேவைகளை பற்றி சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எதையும் செய்வதற்கு முன் பின்விளைவுகளை யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு ரத்னவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. அன்பின் நடன சபாபதி - அட்டகாசமான நகைச்சுவை - வ்ங்கியில் ஒருவர் கூடவா அதனை மாற்ற முயல வில்லை ? ம்ம்ம் - மேலாளர் செய்ததனால் மாற்ற வில்லையோ ? பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு
  10. 'கரெண்ட் அக்கௌண்ட் 'என எழுதிய இடத்தில் ஷாக் அடிக்கும் என்பதால் யாரும் வந்து இருக்க மாட்டார்களே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி K.A அவர்களே!

      நீக்கு